Drumstick Biriyani : பாலியல் ஆரோக்கியத்துக்கு உதவும் முருங்கைக்காயில் பிரியாணி செய்ய முடியுமா? இதோ ரெசிபி!
Drumstick Biriyani : பாலியல் ஆரோக்கியத்துக்கு உதவும் முருங்கைக்காயில் பிரியாணி செய்ய முடியுமா? இதோ ரெசிபி!
முருங்கைக்காயை வைத்து சாம்பார், புளிக்குழம்பு என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம். இப்போது இந்த முருங்கைக்காயை வைத்து சுவையான முருங்கைக்காய் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் -
பாஸ்மதி அரிசி - 2 கப்
முருங்கைக்காயை வேக வைத்த சதைப்பகுதி விழுது - 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 4
பொடியாக நறுக்கிய பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட் - 2 கப்
பட்டாணி - கால் கப்
பட்டை - 1
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
புதினா - ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
தக்காளிச் சாறு - அரை கப்
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை -
முருங்கைக்காய் பிரியாணி செய்வதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் பாஸ்மதி அரிசியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானவுடன், அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள் ஆகியவற்றை போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட் ஆகிய காய்கறிகளை சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவேண்டும்.
காய்கறிகள் வெந்ததும், அதனுடன் தக்காளிச் சாறை ஊற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
பின்னர் அதனுடன் ஊற வைத்த அரிசியைப் போட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி, அதில் முருங்கைக்காய் விழுதை சேர்த்து, புதினா, கொத்தமல்லித்தழை போட்டு நெய் விட்டுக் கிளறி இறக்கினால் ருசியான முருங்கைக்காய் பிரியாணி ரெடி.
இதற்கு தொட்டுக்கொள்ள ரைத்தா, சால்னா, அனைத்து வகை சைவ, அசைவ குருமாக்களும், குழம்புகளும் பொருந்தும். வழக்கமான பிரியாணியாக இல்லாமல் இதுபோல் வித்யாசமாக செய்யும்போது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
நன்றி – அறுசுவை சமையல்
முருங்கைக்காயின் நன்மைகள்
ரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது
முருங்கைக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. எனவே அவர்கள் தினமும் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது பித்தப்பையின் வேலைகளுக்கு ஊக்கமளித்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது
இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பாக்டீரியாவுக்கு எதிரான உட்பொருட்கள், சளி மற்றும் இருமல் போன்ற அனைத்து தொற்றுகளையும் தடுக்க உதவுகிறது.
எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது
முருங்கைக்காயில் உள்ள கால்சியம், இரும்பு மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்க எலும்பை வலுவாக்குகிறது. இதனால் கர்ப்பிணிகளுக்கு இது அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.
குடலுக்கு நல்லது
இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள நியாசின், ரிபோஃப்ளாவின் போன்ற பி வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை வாயுத்தொல்லைகளை அகற்றுகின்றன.
ரத்தத்தை சுத்தம் செய்கிறது
முருங்கைக்காயில் உள்ள ஆன்டிபயோடிக்கு உட்பொருட்கள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அது உடலில் ஆக்ஸிஜன் அளவு மற்றும் ரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது. அதிக ஆக்ஸிஜன் ரத்தத்தில் இருக்கும்போது, அது ரத்தத்தின் தரத்தை உயர்த்துகிறது.
சுவாசம் தொடர்பான பிரச்னைகளை சரிசெய்கிறது
கொரோனா காலத்தில் சுவாசம் தொடர்பான பிரச்னைகளை சரிசெய்வதற்கு, முருங்கைக்காய் உதவியது. சுவாச மண்டலத்தைதான் கொரோனா வைரஸ் முதலில் தாக்கும். முருங்கைக்காயில் உள்ள அழற்சிக்கு எதிரான குணங்கள் அதை போக்கியது.
பெண்களின் பாலியல் ஆரோக்கியத்துக்கு உதவும்
முருங்கைக்காய் பாலியல் ஆரோக்கியத்துக்கு உதவும். குறிப்பாக பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தை காக்கிறது. இதில் உள்ள சிங்க் சத்து, பெண்களிள் பாலியல் பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்