Raisins for Weight Loss: எளிய முயற்சி, எதிர்பார்த்த பலன்! உடல் எடை குறைப்புக்கு உதவும் உலர் திராட்சை
உடல் எடைகுறைப்பு முயற்சியில் ஈடுபடுவர்களுக்கு மிகவும் எளிதான முயற்சியாகவும், எதிர்பார்த்த பலனை கொடுப்பதாகவும் உலர் திராட்சை நீர் பருகுவது இருந்து வருகிறது. உடலுக்கு ஆற்றல் தரும் உலர் திராட்சை எடை குறைப்புக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை பார்க்கலாம்
உடல் எடையை குறைப்பது என்பவது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது அனைவருக்கும் தெரியும். எவ்வித சிரமமும் இல்லாமல் உடல் எடையானது விரைவாகவும், நம்மை அறியாமலேயே அதிகரிக்கும். ஆனால் அதிகரித்த உடல் எடையை குறைப்பதென்பது கடினமான விஷயமாகவே உள்ளது. இதில் உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி முதல் பல்வேறு விஷயங்களை சரியாக பின்பற்றினால் மட்டுமே எதிர்பார்த்த பலனை பெற முடியும்.
உடல் எடை எடை இழப்பு என்று வரும்போது பலரும் தேர்ந்தெடுக்கும் விஷயமாக உணவுமுறை மாற்றிக்கொள்ளுவது இருந்து வருகிறது. அந்த வகையில் உடல் எடை குறைப்பிலும் தேர்ந்தெடுத்த உணவுகளை, தேவைப்படும் அளவில் மட்டும் தான் சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான உணவுகள் அல்லது பானங்கள் எடுத்துக்கொள்ளாவிட்டால் நீங்கள் விரும்பும் அளவுக்கு வேகமாக உடல் எடையை குறைக்க முடியாது.
எடை குறைப்புக்கு உதவும் உலர் திராட்சை
அந்த வகையில் வீட்டில் இருந்தபடியே எளிய முறையில் உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. அதன்படி உலர் திராட்சை நீர் தொடர்ச்சியாக பருகுவதன் மூலம் எதிர்பார்த்த பலனை பெறலாம். உலர் திராட்சைகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு கூறுகளை கொண்டிருக்கின்றன. எலும்புகளை வலுவடைய செய்வது, ரத்த அழுத்தம் குறைப்பது, சுவாச மண்டலத்தை சுத்தம் செய்வது, வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்துவது என பல்வேறு நன்மைகளை தருகின்றன.
உலர் திராட்சை தண்ணீரைக் குடிப்பதன் மூலம் எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் எடை இழப்பு இலக்குகளை விரைவாக அடையலாம்.
உலர் திராட்சை நீர் என்றால் என்ன?
உலர் திராட்சை நீர், கிஸ்மிஷ் நீர் என்றும் அழைக்கப்படுகிறது. உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வடிகட்டி, பின்னர் சூடுபடுத்துவதன் மூலம் தயாரிக்கப்படும் பானமாக உள்ளது. உலர் திராட்சை நீர் உடல் எடையை குறைக்க உதவுகிறது. செரிமானத்தை மேம்படுத்தி, உடல் நச்சுகளை நீக்குகிறது. உடலுக்கு தேவையான அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது. உலர் திராட்சை தண்ணீர் இனிப்பு சுவை கொண்டதாக உள்ளது.
உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உங்களை நீண்ட நேரம் திருப்தியாக வைத்திருக்கும். எனவே அதிகமாக சாப்பிடுவதை கட்டுப்படுத்துகிறது. இயற்கையான சர்க்கரையை கொண்டிருப்பதால் உங்களது சர்க்கரை தேவையையும் பூர்த்தி செய்கிறது.
திராட்சை, உடல் நிறை குறியீட்டை (BMI) குறைக்கவும், இடுப்பு சுற்றளவை (WC) குறைக்கவும், எடை குறைக்கவும் உதவும் என ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
உலர் திராட்சை நீர் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்:
உலர் திராட்சை - 1 கப்
தண்ணீர் - 2 கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் நிரப்பி கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்கும் வெப்பநிலையை அடையும் போது அணைத்துவிட்டு, 1 கப் உலர் திராட்சையை கொதிக்கும் நீரில் சேர்த்து ஊற வைக்கவும்.
இந்த உலர் திராட்சையை ஒரு இரவு முழுவதும் அல்லது குறைந்தது எட்டு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அவற்றை வடிகட்டி மீண்டும் சூடாக்கிவிட்டு பருகவும்.
காலை நேரத்தில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் எதிர்பார்த்த பலனை பெறலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்