Weight Loss Drink: விரைவாக உடல் எடை குறைக்க இந்த சாறு போதும்! காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடனடி பலன் கிடைக்கும்
எடை இழப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் ஆரோக்கியமான உணவு டயட்டை பின்பற்ற வேண்டும். எடை குறைப்பை துரிதப்படுத்தும் முக்கிய காய்கறியாக சுரைக்காய் உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் சாறு குடித்தால் உடனடி பலன் கிடைக்கும், விரைவில் உடல் எடை குறையும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

பச்சை நிற காய்கறியாக இருக்கும் சுரைக்காய் தண்ணீர் காய்கறியாகவும் மற்றும் கலோரிகள் குறைவான காய்கறியாகவும் உள்ளது. சுரைக்காயில் இரும்பு சத்து, வைட்டமின்கள், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன எனவும், இந்த காய்கறி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது எனவும் ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதில் உணவு நார்ச்சத்தும் நிறைந்திருப்பதுடன், கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
96 சதவீதம் தண்ணீர் உள்ளது, இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் நாள் முழுவதும் உங்களை முழுதாக உணர வைக்கிறது, இதனால் நீங்கள் அதிக கலோரிகளை ஏங்காமல் இருக்கிறீர்கள், மேலும் இது உங்கள் உடலில் கலோரி உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த உதவுகிறது
எடை குறைப்புக்கு உதவும் சுரைக்காய் சாறு
நாள்தோறும் சுரைக்காய் சாறு குடிப்பதை வழக்கமாக்கி கொண்டால் உடல் எடை குறைப்பு விரைவாக நிகழும் என கூறப்படுகிறது. சுரைக்காய சாறு தயார் செய்வதற்கு, சுரைக்காயின் தோல்களை நீக்கிவிட்டு, அதன் சதைப்பகுதியை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
பின்னர் அந்த துண்டுகளை பிளெண்டரில் வைத்து, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு அறைத்து கொள்ளவும். அதிக அளவில் தண்ணீர் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். இந்த சாறு கொஞ்சு கொழு கொழுவாக இருந்தால் உரிய பலனை பெறலாம்.
சுரைக்காய் சாறு குடிக்க சிறந்த நேரம்
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், அதை காலையில் குடிப்பது சிறந்த நேரமாக உள்ளது . இதை வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். சுரைக்காயில் பயோஆக்டிவ் சேர்மங்கள் உள்ளன. அவை எளிதில் உறிஞ்சப்படும், மேலும் இது உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் இரும்பு மற்றும் பொட்டாசியம் உள்ளது, இது உங்கள் உடலின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்கிறது.
ர்க்கரை நோய், இதய நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீர் பிரச்சனைகள், மனச்சோர்வு, கல்லீரல் நோய்களுக்கு சுரைக்காய் சாறு நல்ல மருந்தாக கருதப்படுகிறது.
யாரெல்லாம் சுரைக்காய் சாறு பருகுவதை தவிர்க்கலாம்
சுரைக்காய் சாறு ஆரோக்கியமானதாக கருதப்பட்டாலும், சிலருக்கு பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இதன் பாதுகாப்பு, நன்மைகள் குறித்து தகவல்கள் தெரியவில்லை. சுரைக்காயில் ஒவ்வாமை உள்ளவர்கள் இதை சேர்ப்பதையும் தவிர்க்க வேண்டும். சிலருக்கு இது உடல் ரீதியான ஏதேனும் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
சுரைக்காயில் இருக்கும் நச்சுத்தன்மை சிலருக்கு வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, ஹெமாடெமெஸிஸ் (ரத்த வாந்தி), ஹீமாடோசீசியா (குடலில் ரத்த போக்கு) சில சமயங்களில் உடல் அதிர்வுகள், மரணமும் நிகழலாம் என கூறப்படுகிறது. அதே போல் வேறு ஆபத்துகள், சிக்கல்களை தவிர்க்க உங்கள் உணவில் இதை சேர்ப்பதற்கு முன் மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெறுவது நல்லது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்