Amukkara: அந்த விஷயத்தில் நீங்க ஸ்ட்ராங் ஆக.. அமுக்ரா சூரணப்பொடி கசாயம்.. இரவில் இல்லறம் சிறக்க இதை குடிங்க!
Amukkara: அந்த விஷயத்தில் நீங்க ஸ்ட்ராங் ஆக.. அமுக்ரா சூரணப்பொடி கசாயம்.. இரவில் இல்லறம் சிறக்க இதை குடிங்க!

Amukkara: அஸ்வகந்தா என்னும் அமுக்ரா கிழங்கு, பழங்காலத்திலிருந்தே பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் சக்திவாய்ந்த பண்புகள் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் என பலவற்றிலும், மிகவும் உதவியாக இருக்கும்.
அமுக்கரா கிழங்கு உடலில் பல்வேறு நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அதனால்தான் இதை இரவில் கசாயமாக சேர்க்கலாம்.
அமுக்ரா கிழங்கில் செய்யப்பட்ட பொடியில் தயார் செய்யப்படும் கசாயம் பல ஆரோக்கிய நன்மைகளுக்கு பிரபலமானது.
குறிப்பாக மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு, விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் அமுக்ரா கிழங்கு பொடி முக்கியப்பங்கு வகிக்கிறது. அவற்றைப் பற்றி அறிந்து கொள்வோம்.
மேம்படும் தூக்கத்தின் தரம்:
அஸ்வகந்தா என்னும் அமுக்ரா கிழங்கு பொடியானது நல்ல தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. இரவில் இதை உட்கொள்வது ஆழ்ந்த, அமைதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
அமுக்ரா பொடி மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலை ஒழுங்குபடுத்துகிறது. இரவில் அமுக்ரா சூரணத்தின் கசாயத்தைக் குடிப்பது கார்டிசோலின் அளவைக் குறைக்கிறது மற்றும் தூக்கத்திற்கு ஏற்ற மனநிலையை ஊக்குவிக்கிறது.
ஹார்மோன் சமநிலைக்கு உதவும் அமுக்ரா பொடி:
இது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. இரவில் அமுக்கரா சூரணப்பொடியை கசாயம் வைத்து உட்கொள்வது ஹார்மோன்களின் சமநிலைக்கு பங்களிக்கிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பல்வேறு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அஸ்வகந்தாவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை உடல் முழுவதும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. இரவில் அமுக்கரா பொடியைக் குடிப்பதால் உடலில் வீக்கம் குறைகிறது.
ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் அமுக்ரா கிழங்கு:
அமுக்கரா கிழங்கு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இரவில் அமுக்கரா சூரண கசாயம் குடித்து வந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியமாக வாழ முடியும். குறிப்பாக அமுக்கரா சூரணப்பொடி, ஒரு சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற்றப்பட வேண்டும்.
செரிமானத்தை சரிசெய்யும் அமுக்ரா சூரணப்பொடி:
அமுக்ரா சூரணப்பொடி, தசை புதுப்பித்தல் மற்றும் வளர்ச்சிக்கு உதவுகிறது. இரவில் அமுக்கரா கிழங்கு சூரணப்பொடி கசாயம் குடிப்பதால் தசை வளர்ச்சி மீட்கப்படும்.
மேலும் இது லேசான செரிமான பண்புகளைக் கொண்டுள்ளது. இது வயிற்றை அமைதிப்படுத்த உதவுகிறது. இரவில் அமுக்ரா சூரணப்பொடி குடிப்பது செரிமானத்திற்கு நல்லது. அசௌகரியத்தை குறைக்கிறது.
பாலுணர்ச்சியை தூண்டும் அமுக்ரா:
அஸ்வகந்தா என்னும் அமுக்ரா சூரணப்பொடியை எடுப்பது பாரம்பரியமாக பாலுணர்வைத் தூண்டப் பயன்படுகிறது. இது ஆண்களுக்கு விறைப்புத்தன்மையை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. இரவில் அமுக்கரா கிழங்கு சூரணப்பொடி குடிப்பது செக்ஸ் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. குறிப்பாக ஆண்களின் விந்துவில் இருக்கும் உயிரணுக்களை அதிகரிக்கிறது. குழந்தையின்மையை நீக்குகிறது.
அமுக்ரா சூரணப்பொடி, நரம்பு விளைவுகள் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இரவில் அமுக்கரா கிழங்கு பொடி கசாயத்தை குடிப்பது மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் உதவுகிறது. அஸ்வகந்தா ஒரு அடாப்டோஜென் என்று கூறப்படுகிறது. அதாவது இது மன அழுத்தத்திற்கு ஏற்ப உடலுக்கு உதவுகிறது.
இவை அமுக்ரா சூரணப்பொடி பொதுவாக தமிழகத்தின் நாட்டு மருந்து கிடைகளிலும் மளிகைக்கடைகளிலும் கிடைக்கின்றன.

டாபிக்ஸ்