ஒரு மாதம் காலையில் தினமும் இந்த காபியை மட்டும் பருகுங்கள்! உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்கள்!
ஒரு மாதம் காலையில் தினமும் இந்த காபியை மட்டும் பருகுங்கள். உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்கள். இந்த காபியை தயாரித்து பருகுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

நெய் காபி, கீ காபி, புல்லட் ப்ஃரூப் காபி உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். இது உங்களுக்கு ஆற்றலை அளிக்கும்.
உடல் எடையைக் குறைப்பதற்கு அனைத்து தரப்பினரும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள். அவர்கள் பலன் கிடைக்கும் வழி முதல் பலன் உள்ளது என்ற கட்டுக்கதைகள் உள்ள வழிகள் என பல வழிகளை முயற்சி செய்து எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் காலையில் அவர்கள் பருகும் காபியே போதும் அவர்களின் உடல் எடையை சரசரவென குறைக்க முடியும் என்றால் அவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சியான செய்தியாக அது இருக்கமுடியும். மேலும் இதை மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து பின்பற்றி நடிகைகள், சின்னத்திரை கலைஞர்கள் என பயன்படுத்தி, இதில் இருந்து தாங்கள் பலன்பெற்றதாகவும் சாட்சி கூறுகிறார்கள். சிலர் பல வழிகளிலும் முயன்று உடல் எடையை குறைக்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த வழியாக இருக்க முடியும்.
நெய் காபி அல்லது கீ காபி
கார்போஹைட்ரேட்கள் குறைவான உணவு எடுத்துக்கொள்ள வேண்டுமென்ற நோக்கில் இது மேற்கத்திய கலாச்சாரத்தில் தோன்றிய நடைமுறையாகும். அதுவே அவர்களை அதிகாலையில் புல்லட்ப்ஃரூப் காபி பருக வைத்தது. காபியில் உப்பில்லாத வெண்ணெய் அல்லது நெய் மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்து பருகினார்கள். இது நன்றாக பலன்கொடுத்தது. இதை இந்தியர்களும் நெய் கலந்து பருகி வருகிறார்கள்.