Arugampul : வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடிச்சு பாருங்க.. எடை குறைப்பு.. ஹீமோகுளோபின் என எத்தனை நன்மைகள் தெரியுமா!
Arugampul Juice Benefits : அருகம்புல்லை இன்றைய தலைமுறையினர் கடவுளுக்கு படைக்க கூடியது என்று மட்டுமே நினைக்கின்றனர். ஆனால் நம் முன்னோர்கள் அருகம்புல் சாறு எடுத்து குடித்தனர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா.. தினமும் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
Arugampul Juice Benefits : பண்டையதமிழ்ச்சமூகத்தில் இயற்கையை சார்ந்து பல்வேறு உணவு முறைகளை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையினர் பலருக்கும் நமது முன்னோர்கள் பயன்படுத்திய பல மூலிகைகளின் பெயர்கள் கூட தெரிவது இல்லை. அப்படி நாம் மறந்து போன ஒரு பொக்கிஷம் தான் அருகம்புல். சித்த வைத்தியத்தில் முக்கியத்துவும் வாய்ந்ததாக காணப்படும் அருகம்புல்லை இன்றைய தலைமுறையினர் கடவுளுக்கு படைக்க கூடியது என்று மட்டுமே நினைக்கின்றனர். ஆனால் நம் முன்னோர்கள் அருகம்புல் சாறு எடுத்து குடித்தனர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா... தினமும் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் எவ்வளவு சாறு பருகலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
பொதுவாக கிராமப்புறங்களில் வயல் வெளிகளில் அதிகம் காணப்படுகிறது. அருகம்புல் சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுறிது. இது cynodon Doctylon என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்.
ஒருவர் ஒரு நாளைக்கு 200 மில்லி அளவுக்கு அருகம்புல் ஜூஸ் குடிக்கலாம். வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் குடிப்பதும் மிகவும் நல்லது. துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவை உடையதாக கருதப்படுகிறது. இதில் புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், நார்ச்சத்து, பொட்டாசியம், ஆல்கலாய்ட்டு என பல சத்துக்கள் அடங்கி உள்ளது.
அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இதோ
உடல் எடை குறைப்பு:
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சினை என்பது உடல் எடை அதிகரிப்பதாக உள்ளது. தினமும் அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் உடல் எடை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். அருகம்புல்லில் கலோரிகள் மிகவும் குறைவு. அதுமட்டும் இல்லாமல் மிக குறைந்த அளவே கொழுப்பின் அளவு உள்ளதால் இது உடல் எடையை குறைக்க உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி
தற்போது கொரோனா, HMPV என பல நோய்கள் மனித சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது. ஆனால் இந்த நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் தினமும் அருகம்புல் ஜூஸ் குடித்து வருவதால் பல்வேறு நோய்களை உண்டாக்கும் கிருமிகளை எதிர்த்து போராட முடியும்.
செரிமான பிரச்சினைகள்
தொடர்ந்து அருகம்புல் ஜூஸ் குடித்து வருவதால் உடலில் செரிமானம் தூண்டப்படுகிறது. மேலும் இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சினையை தடுக்க உதவும்.
தோல் பிரச்சினைகளுக்கு தீர்வு
அருகம்புல்லில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இதனால் தினமும் அருகம்புல் ஜூஸ் குடிப்பதால் தோலில் ஏற்படும், அரிப்பு, வெடிப்பு, உள்ளிட்ட பல தோல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பலர் அருகம்புல்லுடன் மஞ்சளை அரைத்து பேஸ்ட் செய்து பிரச்சினை உள்ள இடங்களில் தடவுவதும் நல்ல பலன் தரும். தொடர்ந்து அருகம்புல் ஜூஸ் குடித்து வருவதால் சரும பிரச்சினைகள் நீங்க வாய்ப்புகள் உள்ளது.
சிறுநீரக கற்கள்
பலரும் சிறுநீரக கல் பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். தினமும் அருகம்புல் ஜூஸ் குடித்து வந்தால் கற்கள் உருகி வெளியேற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
உடல் சூட்டை தணிக்கும்
அருகம் புல்லுக்கு உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் அதிகம் உள்ளது. மேலும் வாய்ப்புண் போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்
இரத்த சோகை நீங்கும்
இன்று பலரும் இரத்த சோகை பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். அத்தகையவர்கள் தினமும் அருகம் புல் ஜூஸ் குடிப்பதால் இரத்தம் சுத்திகரிக்கப்படுவதோடு, உடலில் இரத்த சிவப்பணுக்களைஅதிகரிக்கவும் உதவும். இதனால் படிப்படியாக ஹீமோ குளோபின் அளவு அதிகரிக்கும்.
சர்க்கரை அளவை குறைக்கும்
அருகம்புல் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்ல பலன்களை தரும். இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன
ஆனால் என்னதான் உடலுக்கு நன்மை செய்யும் விஷயங்கள் அருகம்புல்லில் கொட்டி கிடந்தாலும் உங்களுக்கு ஏதோனும் உடல் உபாதைகள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் அருகம்புல் ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூற முடியாது. பல்வேறு இணையதளங்கள் மற்றும் நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை வழங்குகிறோம். அவற்றைப் பின்பற்றும் முன் சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது நல்லது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்