ஹீமோகுளோபினை அதிகரிக்க, கண் பார்வை கூராக்க இன்னும் 8 நன்மைகள் கிடைக்க உதவும் உலர் பழம்!
உலர்ந்த ஆப்ரிகாட் பழத்தில் உள்ள நன்மைகள் என்னவென்று பாருங்கள்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 8 ஆப்பிரிகாட்களை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பாருங்கள். உலர் ஆப்ரிகாட்களில் உள்ள நன்மைகள் என்ன தெரியுமா? அதை நீங்கள் ஏன் சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். சிறிய, ஆரேக்கிய பழக்கத்தை உங்கள் வழக்கமாக்கிக்கொள்வது உங்கள் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதில் காலையில் தினமும் தவறாமல் இரண்டு உலர் ஆப்பிரகாட்களை சாப்பிட்டு விடுங்கள். அதனால் உங்கள் உடலுக்கு கீழ்கண்ட இந்த 8 நன்மைகள் கிடைக்கிறது.
செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
உலர்ந்த ஆப்ரிகாட்களை உங்கள் அன்றாட உணவில் நீங்கள் சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்கள் செரிமான ஆரோக்கியத்தின் சிறந்த துவக்கமாக இருக்கிறது. இது உள்ள இயற்கை நார்ச்சத்துக்கள் உங்கள் குடலை சுத்தம் செய்ய உதவுகிறது. இது உங்களின் குடலை இதமாக்குகிறது. உங்கள் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உங்கள் வயிற்றுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கவேண்டும் என்றால் அது இதுதான். நீங்கள் உங்களின் நாளை சிறப்பாக துவக்க உதவுகிறது.
சருமத்துக்கு இயற்கை பளபளப்பைக் கொடுக்கிறது
இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்துக்கு பொவிவைத்தர இயற்கை முறையில் உதவுகின்றன. இது உங்கள் சரும செல்களை சரிசெய்கிறது. சரும வறட்சியைத் தடுக்கிறது. இது உங்கள் முகத்துக்கு பொலிவைக் கொடுக்கிறது. இது உங்களுக்கு காலையில் சிறந்த பொலிவைக் கொடுக்கிறது. இது காலை உணவுடனே உங்கள் அழகு பராமரிப்பும் துவங்குவதற்கு சமம். எனவே இதை காட்டாயம் காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு விடுங்கள்.
உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது
நீங்கள் அதிகப்பட்டியான அல்லது கலோரிகள் அதிகம் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், அதற்கு நீங்கள் தினமும் இரண்டு ஆப்ரிகாட்களை சாப்பிடவேண்டும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தரும். வயிறு நிறைந்த உணர்வு இருந்தாலும் உங்களுக்கு திம்மென்று இருக்காது. இலகுவாக உணர்வீர்கள். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்களுக்கு நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. இதனால் உங்களின் நாய் தொய்வின்றி உற்சாகமாக இருக்கும்.
இதய ஆரோக்கியத்துக்கு நல்லது
உலர்ந்த ஆப்ரிகாட்களில் உள்ள பொட்டாசியச்சத்துக்கள் உங்கள் இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் உள்ள மினரல்கள் உங்கள் ரத்த அழுத்தத்தை முறையாகப் பராமரிக்க உதவுகின்றன. உங்கள் உடலில் சோடியம் அளவைக் கட்டுப்படுத்துகிறது. எனவே இதை தினமும் உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால், அது உங்களுக்கு நாள்பட இதயம் தொடர்பான கேளாறுகள் ஏற்படாமல் தடுக்கிறது.
கண் பார்வையைக் கூராக்குகிறது
கவர்ந்திழுக்கும் ஆரஞ்சு வண்ண உலர் ஆப்ரிகாட் பழங்கள் உங்கள் கண்களுக்கு மட்டும் விருந்தல்ல, அந்த நிறம் அதில் உள்ள பீட்டா கரோட்டினின் அளவைக் குறிக்கிறது. இது உங்கள் உடல்ககு தேவையான வைட்டமின் ஏவைக் கொடுக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் கண் ஆரோக்கியத்துக்கு நல்லது. இது உங்கள் உடலில் கண் வறட்சியைப் போக்குகிறது. கண் பிரச்னைகளைகள், வலி ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது.
ஆற்றலைக் கொடுப்பது
காலையில் உங்களுக்கு சோர்ந்து இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டால், அப்போது நீங்கள் 2 உலர்ந்த ஆப்ரிகாட்களை சாப்பிடும்போது, அதில் உள்ள இயற்கை சர்க்கரை மற்றும் முக்கிய மினரல்களான இரும்பு, மெக்னீசியச் சத்துக்களுடன் சேர்ந்து, உங்களுக்கு உடனடி மற்றும் தீராத ஆற்றலைக் கொடுக்கிறது.
எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
உலர்ந்த ஆப்ரிகாட்களில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியச் சத்துக்கள் உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. இதில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு வயதாகும்போது ஏற்படும் எலும்பு பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது. இது உங்கள் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இது உங்களுக்கு எலும்புப்புரை நோய்கள் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
இரும்பு குறைபாடு ஏற்பட்டால் அதை சரிசெய்ய உதவுகிறது
நீங்கள் சோர்வாகவோ அல்லது ஆற்றல் இல்லாமலோ உணர்ந்தால், உலர்ந்த ஆப்ரிகாட்களில் உள்ள தாவர அடிப்படையிலான இரும்புச்சத்துக்கள் உங்கள் உடலில் ஆரோக்கியமான ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது. இதை நீங்கள் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட உங்கள் உடலின் இரும்பு உறிஞ்சும் திறனை அதிகரிக்க உதவுகிறது. அனீமியாவை அடித்து விரட்டுகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்