Green Tea Disadvantage: இதயத்துடிப்பு முதல் வலிப்பு வரை பாதிப்பு..! க்ரீன் டீ பருகுவோர் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்
க்ரீன் டீ விரும்பி பருகுவோர் இந்த தவறை மட்டும் தப்பி தவறி கூட செய்யாதீர்கள். இதனால் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், வலிப்பு என உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகளை சந்திக்க நேரிடலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்
உடல் எடை குறைப்புக்கான முக்கிய பானமாக க்ரீன் டீ இருந்து வருகிறது. நாள்தோறும் கிரீன் டீயை பருகும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகிறது. ஆனால் வெறும் வயிற்றில் க்ரீன் டீ பருகுவதாக இருந்தால் அதை உடனடியாக நிறுத்த வேண்டும். கிரீன் டீ வெறும் வயிற்றில் குடிப்பதால் உடலில் சில ஆபத்தான மாற்றங்களை நிகழ்கின்றன என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
எடைகுறைப்புக்கு உதவுகிறது
பல்வேறு உடல் ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக கிரீன் டீ, மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகவே பார்க்கப்படுகிறது. இதை வெந்நீரில் சேர்த்து தேநீராக உலகம் முழுவதும் பலரும் விரும்பி பருகுகிறார்கள். க்ரீன் டீயில் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், பாதுகாப்பும் உள்ளது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படும் க்ரீன் டீ உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்புகளை அகற்றுகிறது. இதனால் உடல் எடை இழப்பானது ஏற்படுகிறது. அதேபோல் புற்றுநோய் பாதிப்புகளுக்கு எதிரியாகவும் க்ரீன் டீ செயல்படுகிறது. இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
க்ரீன் டீயில் இருக்கும் ஆபத்துகள்
ஆனால் கிரீன் டீயிலும் உடலுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் பண்புகளும் நிறைந்துள்ளன. காலைப் பொழுதில் வெறும் வயிற்றில் கிரீன் டீ பருகுவதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும் என பலரும் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு முற்றிலும் மாறான விஷயமே ஏற்படும் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. வெறும் வயிற்றில் க்ரீன் டீ பருகுவதால் ஏற்படும் ஆபத்துகளை தெரிந்து கொள்ளலாம்
ஒழுங்கற்ற இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம்
கிரீன் டீ பருகுவதால் ஒழுங்கற்ற இதயதுடிப்பு ஏற்படும் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஆதரங்களை இல்லை என்றாலும் இதயம் தொடர்பான நோய் பாதிப்பில் இருப்பவர்கள் கிரீன் டீயை தவிர்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
தலைச்சுற்றல் மற்றும் வலிப்பு
மூளைக்கு மற்றும் நரம்பு மண்டலத்துக்கு செல்லும் ரத்த ஒட்டத்தை குறைக்கும் தன்மை கஃபைனுக்கு உள்ளது. கிரீன் டீயில் கஃபைன் அதிகமாக இருப்பதால் இவற்றை அதிகமாக பருகினால் தலைசுற்றல் மற்றும் வலிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கவலை மற்றும் தூக்கம் தொடர்பான பிரச்னைகள்
கிரீன் டீயில் இருக்கும் குறிப்பிட்ட அளவிலான கஃபன் உங்களது தூக்கத்தின் சுழற்சியை பாதிப்பை ஏற்படுத்தலாம். நீங்கள் கவலையில் ஆழ்ந்திருந்தால், வெறும் வயிற்றில் கிரீன் டீ பருகுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
வயிற்றில் அமிலத்தன்மை
கிரீன் டீயில் டேன்னின்ஸ் என்ற கலவை அதிகமாக உள்ளது. இவை வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து விலயை உண்டாக்கும். இதனால் மலச்சிக்கல், குமட்டல் போன்றவை ஏற்படலாம்.
இரும்பு நுகர்வை குறைத்தல்
கிரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் நம் உடலின் இரும்பை இயற்கையாக உறிஞ்சும் திறனைக் குறைக்கும். குறிப்பாக வெறும் வயிற்றில் குடிப்பவர்களுக்கு இந்த பாதிப்பானது அதிகம் இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்