கஷ்டப்பட்டு கடுமையாக படிக்கவேண்டாம்; Smart Studyயும், வேகமாக படிக்கவும் இதோ 10 வழிகள்!
ஸ்மார்ட் ஸ்டடி மற்றும் வேகமாக படிப்பது எப்படி என்று பாருங்கள்.

தேர்வு காலங்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. மாணவர்கள் அனைவரும் தீவிர தேர்வுக்கான தயாரிப்புகளில் மூழ்கியிருப்பீர்கள். நீங்கள் கஷ்டப்பட்டு கடுமையாக படிக்க வேண்டாம். இதோ ஸ்மார்ட்டாக படிக்கவும், மூளையைப் பயன்படுத்தி வேகமாக படிப்பதற்குமான டெக்னிக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை கற்றுக்கொண்டு உங்கள் படிக்கும் முறையை மாற்றி திறனை அதிகரித்துக்கொள்ளுங்கள்.
தெளிவான இலக்குகளை நிர்ணயித்துவிடுங்கள்
நீங்கள் படிக்கவேண்டிய பாடங்களை பிரித்துக்கொள்ளுங்கள். குறிப்பிட்ட மற்றும் அளவிட முடிந்த இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு மணி நேரத்துக்கும் எவ்வளவு படிக்கவேண்டும் என பிரித்து அவற்றை சரியாக படித்து முடியுங்கள்.
படிப்பு அட்டவணையை தயாரித்துக்கொள்ளுங்கள்
உங்கள் படிப்பு நேரத்தை முன்னதாகவே திட்டமிடுங்கள். பல்வேறு பாடங்களுக்கும் சமமாக நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள். இடையில் உங்களுக்கான இடைவெளியையும் கட்டாயம் எடுத்துக்கொள்ளுங்கள்.
