வெண்டைக்காய் வாங்க இனி மார்க்கெட்ட செல்லவேண்டாம்! வீட்டு தோட்டத்திலே பறிச்சுக்கலாம்!
வெண்டைக்காய் வாங்க இனி மார்க்கெட்ட செல்லவேண்டாம், வீட்டு தோட்டத்திலே பறிச்சுக்கலாம். இதோ எப்படி பயிரிடுவது பாருங்கள்.
வெண்டைக்காய் குழம்பு, பொரியல் செய்ய வேண்டுமா? இனி மார்க்கெட் சென்று வாங்கி வரத்தேவையில்லை. அதை வீட்டு தோட்டத்திலேயே வளர்த்துவிடலாம். எப்படி என்று பாருங்கள். உங்கள் வீட்டுத்தோட்டத்தில் சிறிய இடம் இருந்தால் போதும். வெண்டைக்காயை வளர்த்துவிடலாம். இந்தியில் பிண்டி அல்லது ஓக்ரா என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் லேடிஸ் ஃபிங்கர். அதாவது பெண்களின் விரல்களைப் போன்ற மென்மையான காயாக இருப்பதால் இந்தப்பெயர். இதன் செடியை வளர்க்கவேண்டுமெனில் பராமரிப்பு மிகவும் எளிது. இது நேராக வளரும். வெண்டைக்காய் செடியில் வெண்டைக்காய் நிற்கும் என்று கூறுவார்கள். தலைகீழாக இது வளரும். இதை தொட்டிகளில் வைத்து பால்கனி அல்லது தோட்டம் அல்லது மாடியில் கூட எளிதாக வளர்த்துவிடலாம். நீங்கள் வெண்டைக்காயை எப்படி வளர்க்கவேண்டும் என்று இங்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
விதைகளை வாங்குங்கள்
வீட்டில் வெண்டைக்காயை வளர்க்கவேண்டுமெனில், விரைவில் அறுவடைக்கு தயராகும் வெண்டைக்காய்களை, விதைகளில் இருந்து வளர்ப்பதுதான் சிறந்தது. விதைகள் நர்சரிகளிலோ அல்லது கடைகளில் இருந்தோ பெறலாம். இதை செடிகளில் இருந்து வளர்ப்பதைவிட, விதைகளை காயவைத்து விதைத்து வளர்ப்பதுதான் சிறந்தது.
முளைத்தல்
முளைக்கும் வேலையைத் துவங்க, 5 முதல் 7 மணி நேரம் விதைகளை சூடான தண்ணீரில் சேர்க்கவேண்டும். பின்னர் அதை நன்றாக காயவைத்துக்கொள்ளவேண்டும். அடுத்து ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து, அதற்குள் விதைகளை வைக்கவேண்டும். மற்றொரு டிஷ்யூவால் அதை மூடவேண்டும். அடுத்து சூடான தண்ணீரை அதன் மேல் தெளிக்கவேண்டும்.
முதல் இலை எப்போது விடும்?
24 முதல் 48 மணி நேரத்துக்குள் முதல் இலை விடும். சிறிய இலைகள், விதைகளில் இருந்து வெளியேறும். அப்போது இந்த விதைகளை சூடான மற்றும் ஈரப்பதம் உள்ள இடத்தில், குறிப்பாக தொட்டிக்குள் வைத்துக்கொள்ளவேண்டும். இதனால் முளைப்பது விரைவாகும்.
தொட்டி தேவை
அடுத்து, விதையை தொட்டிக்கு மாற்றவேண்டும். அகலமான மற்றும் ஆழமான தொட்டியை தேர்ந்தெடுத்துக்கொள்ளவேண்டும். 60 முதல் 80 சென்டிமீட்டர் ஆழமாவது இருக்கவேண்டும். அதில் 4 முதல் 5 நாற்றுக்களை வைக்க இடம் இருக்கவேண்டும். அடுத்து அருகில் செடிகள் முளைத்தால் அதற்கும் இடம் இருக்கவேண்டும்.
மண்
தொட்டியில் சேர்க்கப்படும் மண் கலவையில், தேங்காய் நார், மண் மற்றும் உரம் என அனைத்தும் கலந்து இருக்கவேண்டும். தோட்ட மண் 60 சதவீதம், தேங்காய் நார் 30 சதவீதம், உரம் 10 சதவீதம் என இந்தக் கலவை இருக்கவேண்டும்.
நாற்றுக்கள் மாற்றம்
டிஷ்யூ பேப்பரில் முளைவிட்ட இரண்டு நாட்களில், அதை நீங்கள் தொட்டிக்கு மாற்றிவிடவேண்டும். மண்ணில் சிறிய துளை, ஆழமானது அல்ல, போட்டு, நாற்றுக்களை நடவேண்டும். அதை மண்போட்டு மூடவேண்டும். அடுத்து அதில் தண்ணீர் ஊற்றவேண்டும்.
சூரிய ஒளி தேவை
வெண்டைக்காய்ச் செடிக்கு சூரிய ஒளி மிகவும் தேவை. எனவே தினமும் 5 முதல் 6 மணி நேரம் வரை அது நேரடி சூரிய வெளிச்சத்தில் இருக்கவேண்டும். எனவே தொட்டியை நீங்கள் சூரிய ஒளிக்கு கீழே வைக்கவேண்டும். அப்போதுதான் அது வேகமாக வளரும்.
இலைவிடும் பருவம்
10 முதல் 15 நாட்களில் சிறிய இலைகள் தோன்றும். அடுத்து மண்ணில் வேர் பிடிக்கத் துவங்கும். நல்ல கெட்டி தண்டுகள் உருவாகும். அப்போது தண்ணீர் ஊற்றவேண்டும்.
காய்கறிகள்
செடி வளர்ந்தவுடன், பூக்கள் பூக்க துவங்கும். பூக்கள் மொட்டு விடும்போது, 10 முதல் 15 நாட்களில் காய்கள் தண்டில் இருந்து வளரும்.
இறுதி அறுவடை
வெண்டைக்காய் 70 முதல் 80 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடு. 3 முதல் 4 இன்ச் நீளமாக காய்கள் வளர்ந்திருக்கும். இதை கத்தரிக்கோல் வைத்து வெட்ட வேண்டும். முதல் அறுவடைக்குப்பின்னர் உரம் இடவேண்டும். அப்போதுதான் தொடர்ந்து வளரும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்