பியூட்டி பார்லர் செல்ல வேண்டாம்; வீட்டிலேயே புருங்களை அடர்த்தியாக வளர்க்கலாம்! என்ன செய்யவேண்டும்?
அடர்த்தியான புருவங்களைப் பெறுவதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும்?
இன்றைய இளம் பெண்கள் புருவத்தை அடர்த்தியாக வளர்ப்பதற்காக பியூட்டி பார்லர் சென்று டிரிம் எல்லாம் செய்து கொள்கிறார்கள். ஆனால் நீங்கள் அதெல்லாம் செய்யத் தேவையில்லை, வீட்டிலேயே புருவங்களை அடர்த்தியாக வளர்க்க எண்ணற்ற வழிகள் உள்ளது. அது என்னவென்று பாருங்கள். புருவங்கள் அழகாக இருப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். முதலில் புருவ முடி அடர்த்தி குறைவதற்கான காரணங்கள் என்ன மற்றும் அதை வீட்டில் இருந்தபடியே சரிசெய்துகொள்வது எப்படி என்றும்தான் நாம் தெரிந்துகொள்ளப்போகிறோம்.
புருவத்தில் முடி உதிர காரணம்
புழு வெட்டு என்ற வியாதி
ஹார்மோன் பிரச்னைகள் (ஹைப்போ தைராய்டிசம்)
கர்ப்பம்
மெனோபாஸ்
பிசிஓடி பிரச்னைகள்
ஊட்டச்சத்துக்கள் குறைபாடு
வைட்டமின் பி, சிங்க், பயோடின் குறைபாடு
புருவம் அடர்த்தியாக வளர என்ன செய்யவேண்டும்?
புருவம் அடர்த்தியாக வளர நீங்கள் குறிப்பிட்ட சில உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். அவை என்னவென்று பாருங்கள்.
நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள காய்கறிகளை குறிப்பாக சாப்பிடவேண்டும்.
மஞ்சள் பரங்கிக்காய்
வெண்டைக்காய்
ப்ரொஜெஸ்ட்ரோன், ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்ட்ரோஸ்ட்ரோன் இந்த மூன்று ஹார்மோன்களையும் பொறுத்துதான் பெண்களின் உடல் ஆரோக்கியம் உள்ளது. இந்த மூன்று உணவுகளும் ஹார்மோன்களை சரிசெய்யக்கூடியவை. எப்போது இந்த ஹார்மோன்கள் சமஅளவு இருக்கும்போதுதான் தலை, கண் இமை மற்றும் புருவத்தில் முடிகள் ஆரோக்கியமாக வளர உதவும்.
எண்ணெய் மசாஜ்
இரவு உறங்கச்செல்லும் முன் தேங்காய் எண்ணெயில் புருவத்தை மசாஜ் செய்யும்போதும் புருவ முடி அடர்த்தியாக வளரும். புருவத்தில் முடி மேலும் அடர்ந்து வளர வேண்டுமெனில், குளிக்கச் செல்லும் முன் ஒரு ஸ்பூன் விளக்கெணெயை எடுத்து புருவத்தில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். மேலும் புருவத்திற்கு எப்போதும் மசாஜ் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.
அதற்கு பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மூன்றும் சம அளவு எடுத்து கலந்து இரவு உறங்கச் செல்லும் முன் புருவத்தில் தொடர்ந்து மசாஜ் செய்து வந்தால், இது உங்கள் புருவ முடி அடர்த்தியாக வளர உதவும். இரவு நீங்கள் எந்த எண்ணெய் தடவினாலும் காலையில் எழுந்து முகத்தை கழுவிவிடவேண்டும். இவற்றையெல்லாம் தொடர்ந்து பின்பற்றினால் உங்கள் புருவத்தில் முடி கருகருவென அடர்ந்து வளரும். நீங்கள் பியூட்டி பார்லர் செல்ல தேவையே இல்லை.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்