Tamil News  /  Lifestyle  /  Don't Even Eat The Seeds Of These Fruits

Fruits Seed Disadvantages : இந்த பழங்களின் விதைகளை தவறி கூட சாப்பிடாதீங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 27, 2024 01:54 PM IST

சில பழங்களின் விதைகளை உண்பதால் உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. சில பழங்களின் விதைகள் மிகவும் ஆபத்தானது. சில பழங்கள் அமிர்தமாக இருந்தாலும், அவற்றின் விதைகள் அதிக நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கும். அத்தகைய பழங்களைப் பற்றி அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பழங்களின் விதைகளை தவறி கூட சாப்பிடாதீங்க!
இந்த பழங்களின் விதைகளை தவறி கூட சாப்பிடாதீங்க! (unsplash)

ட்ரெண்டிங் செய்திகள்

அவற்றின் விதைகளை உண்பதால் உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. சில பழங்களின் விதைகள் மிகவும் ஆபத்தானது. சில பழங்கள் அமிர்தமாக இருந்தாலும், அவற்றின் விதைகள் அதிக நச்சுத்தன்மை கொண்டதாக இருக்கும். அத்தகைய பழங்களைப் பற்றி அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். 

நாம் ஆரோக்கியமாக இருக்க சரிவிகித உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனாலும் அதனுடன், எதை சாப்பிட வேண்டும். எதை சாப்பிட கூடாது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். நமது அன்றாட  சீரான உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகள் இருக்க வேண்டும். ஆனால் அனைத்து பழங்களும் காய்கறிகளும் மனித ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானவை என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவரின் உடல் நிலையை பொறுத்து இதில் மாற்றம் உள்ளது. 

நாம் உண்ணும் சில பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அவற்றின் விதைகள் தீங்கு விளைவிக்கும். அத்தகைய பழங்கள் சில உள்ளன. இது அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நச்சு விதைகள் கொண்ட இத்தகைய சுவையான பழங்களை நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.

லிச்சி

லிச்சி பழம் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது நாம் அனைவரும்கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழம் இது. ஆனால் அதன் விதைகள் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இது உடலுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. சுகாதார ஆராய்ச்சியின் படி, அதில் உள்ள சில அமினோ அமிலங்கள் நமது உடலில் இரத்த குளுக்கோஸ் அளவை பாதிக்கலாம். இது மூளை வீக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. லிச்சி பழ விதைகளை உண்பதை கண்டிப்பாக  தவிர்க்க வேண்டும்.

தக்காளி பழம் 

இந்திய சமையல்களில் தக்காளி பழத்திற்கு பெரும் பங்கு உள்ளது. தக்காளி பழம் நமது அன்றாட ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. தக்காளியை வேகவைத்து சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். தக்காளி விதைகளை பச்சையாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவை சிறுநீரக கற்கள் உருவாக காரணமாகின்றன. தக்காளி விதைகளில் ஆக்சலேட் உள்ளது. தக்காளி விதைகளை அதிகமாக உட்கொள்வது உங்கள் சிறுநீரகங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் அதில் கவனமாக இருக்க வேண்டும்.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதயக் கோளாறு உள்ளவர்களுக்கு இது மிகவும் நல்லது. இதில் நமது ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து வகையான சத்துக்களும் உள்ளன. ஆப்பிளில் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், அவற்றின் விதைகள் மனித ஆரோக்கியத்திற்கு சயனைடு போன்றது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆப்பிள் விதைகளில் ஹைட்ரஜன் சயனைடு உள்ளது. ஆப்பிள் விதைகளை சாப்பிட வேண்டாம்.

மேலே குறிப்பிட்டுள்ள விதைகள் நம் உடலில் மிகவும் நச்சு விளைவைக் கொண்டிருக்கின்றன. ஆப்ரிகாட், பிளம்ஸ், செர்ரி, பீச் போன்றவற்றின் விதைகளை சாப்பிட வேண்டாம். இந்த பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். இனிமேல் பழங்கள் சாப்பிடும் முன் இந்த விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்