Healthy Eating: வயிறு பத்திரம்! இந்த காம்போ உணவுகள் தப்பி தவறியும் சாப்பிட வேண்டாம்
சில உணவுகளை ஒன்றாக இணைந்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை சீர் குலைப்பதாக அமைந்து உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்கும். அந்த வகையில் ஆபத்தை விளைவிக்கும் உணவு காம்போக்கள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
விதவிதமான உணவுகளை ரசித்து சாப்பிடும் உணவு பரியர்கள் வித்தியாசமான சுவைகளை பரிசோதிப்பதிலும் அதீத ஆர்வத்தை வெளிப்படுத்துவர்கள். அவர்களின் செயல்கள் அருகில் இருப்பவர்களை முகம் சுழிக்கவும் வைக்கலாம். இருப்பினும் உணவு மீதான காதல் அந்த புதிய சுவையை மீது ஒரு வித பரவசத்தை அந்த நபர்களுக்கு உண்டாக்கும் என்பதை மறுக்க முடியாது.
குறிப்பாக இனிப்பு சாப்பிட்டவுடன் காரம் சாப்பிடுவது அல்லது இரண்டையும் கலந்து சாப்பிடுவது என சிலரின் இந்த வித்தியாசமான காம்பினேஷன் அதிர்ச்சியையும், அசெளகரியத்தையும் வரவழைக்கலாம்.
ஆனால் இவ்வாறு செய்வதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி எந்தக் கவலையும் இன்றி, விரும்பிய உணவுகளை விரும்பியவாறு சாப்பிடுவதில் மட்டுமே அவர்களது கவனம் இருக்கலாம். இதில் சில மோசமான காம்போ உணவுகள் மனதளவிலும் நினைத்து பார்க்க முடியாத விதமாக துயரத்தையும் தரலாம்.
அப்படி சில ஆபத்தான உணவு காம்போக்கள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.
நூடுல்ஸ் வித் மில்க் ஷேக்
சமூக வலைத்தளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்படும் காம்போ வகை உணவுகளில் நூடுல்ஸுடன் மில்க் ஷேக் சேர்த்து சாப்பிடுவது உள்ளது.
நூடுல்ஸ் தயார் செய்ய 2 நிமிடம் மட்டுமே போதுமானது. அதே நேரம்தான் மில்க் ஷேக் செய்வதற்கும் ஆகும். எனவே மொத்தத்தில் ஐந்து நிமிடங்களில் தயாராகும் இந்த காம்போ உங்கள் உடலில் மிகப் பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தலாம்.
நூடுல்ஸுடன், நுரைத்தள்ளிய பால் உடலில் வேறு விதமான ரசாயண மாற்றங்களை ஏற்படுத்தி தீங்கு விளைவிக்கும். இது பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, சாப்பிடுபவர்களுக்கும் குமட்டலை ஏற்படுத்தலாம்.
ஆம்லேட்டுடன் ஃபேன்டா
அசைவப் பிரியர்கள் மட்டுமல்ல சைவம் சாப்பிடும் சிலரால் கூட விரும்பி சாப்பிடப்படும் உணவாக ஆம்லேட் உள்ளது. அந்த வகையில், புது விதமான ருசியை விரும்புகிறவர்கள் நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளை புதுமாதிரியாக மாற்றியோ அல்லது சமைத்தோ தருவதன் மூலம் அந்த உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள உணவு கடை ஒன்றில் கசப்பான சுவையுடன் கூடிய ஃபேன்டாவில் முட்டை ஒன்றை சேர்த்து அதை நன்கு மிக்ஸியில் அரைத்து கொடுக்கிறார்கள். இந்தக் கலவையை வெண்ணெய் சேர்த்து வறுக்கப்பட்ட பாவ்வுடன் சேர்த்து சைடு டிஷ்ஷாக கொடுக்கிறார்கள்.
ஒரு முட்டை (ஆம்லேட் அல்லது வேகவைத்தது), ஃபேன்டா மற்றும் சில மசாலாக்கள், பச்சை நிற சட்னி ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாறப்படும் இந்தக் காம்போவில், எக்கச்க்கமான சீஸ் மேற்புறத்தில் தூவி கொடுக்கப்படும்.
இந்த புதுவிதமான உணவு எந்த மாதிரியான ஆரோக்கிய லிஸ்டில் சேருகிறது என்பது சமைத்து தருபவருக்கு புரிகிறதோ இல்லையோ. ஆனால் இப்படி கிடைப்பதை எல்லாம் கலந்து வெரைட்டி கட்டி சாப்பிட்டு வயிற்றை புண்ணாக்கி கொள்ள வேண்டாம்.
குலாப் ஜாமூன் சமோசா
சமோசாவின் மொறுமொறுப்பு தன்மையை பிடிக்காதவர் யாரும் இல்லை எனலாம். அதேபோல் குலாப் ஜாமூனின் தித்திப்பான சுவை, மிருதுவான தன்மை ஆகியவை கண்கள், மூக்கு, வாய், நாக்கு என அனைத்து உறுப்புகளில் வழியேவும் உள்ளே செல்லும். ஆனால் எதிர்பாராதவிதமாக இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்தால் அதை விட கொடுமை வேறு எதுவும் இல்லை எனலாம்.
சமோசக்களை பொருத்தமட்டில் அதன் உள்ளே உருளைக்கிழங்கு என்றில்லாமல் சிக்கன், நூடுல்ஸ் என பல கலவைகளை உள்ளே சேர்த்து ருசியை சோதித்து பார்த்து வெற்றியும் அடைந்துவிட்டோம்.
ஆனால் குலாப் ஜாமூனை பொருத்தமட்டில் அவ்வாறு செய்யாமல் அதன் தித்திப்பு சுவை மாறாமல் அப்படியே சுவைத்து வருகிறோம். அப்படியான ஒரு சுவைக்கு எந்தவொரு உலையும் போடாமல் பார்த்துக்கொள்ள இந்த காம்போவை தவிர்க்கலாம்.
ஓரியோ வித் பக்கோடா
சூடான பக்கோடா என்று சொல்லும்போதே நாசி முதல் நா வரை எங்கே பக்கோடா என்று கேட்பதை உணர முடியும். வெங்காயம், தக்காளி, பன்னீர், மிளகாய் என பாக்கோடாக்களுக்கு பல வெரைட்டிகளில் உள்ளன.
ஓரியோவை ஒரு துண்டு சாப்பிட்டு பின் பக்கோடாவை எடுத்த சாப்பிட்டால் எப்படியிருக்கும் என்ற யோசித்தாலே இப்படியொரு காம்போ செட்டாகாது என்பது புரியும். ஆனால் இப்படியும் சாப்பிடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
டிக்கி ரசகுல்லா சாட்
எவ்வளவு நாள்தான் ரசகுல்லாவை மட்டும் சுவைப்பது என்று யோசித்தார்களோ என்னமோ. இப்படியொரு புதுவிதமான டிக்கி ரசகுல்லா மூலம் சாட் பிரியர்கள் கவர்ந்து இழுக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த சாட் வகையில் ரசகுல்லா மீது தயிர், சட்னி மற்றும் சேவ் சேர்க்கப்படுகிறது. இனிப்பு சுவை மிகுந்த ரசகுல்லா மீது புளிப்பு மிக்க ரசம், காரமான சட்னி மற்றும் சேவ் என ஏன் இந்த கொலை வெறி?
இனிப்பும் புளிப்பும் கலந்து இப்படியொரு சுவையை கண்டறிந்தது வேறு எங்கும் இல்லை, தென்னிந்தியாவின் முக்கிய மெட்ரோபோலிடன் நகரமான பெங்களூரு என்று சொன்னால் நம்புமுடிகிறதா?
பெங்களூரிலுள்ள ஃபுட் ஸ்டால் ஒன்றில் இப்படி ரசகுல்லாவை வேறொரு பரிணாமத்தில் தந்து அசத்துகிறார்கள். ஆனால் சாப்பிடுபவர்கள் அசந்துபோகிறார்களா என்பது டவுட்தான்.
இனிப்பு பாகுடன் பால் சுவையை அள்ளித்தரும் ரசகுல்லாவை அப்படியே சுவைத்து மகிழ்வதை தவிர்த்து இதுபோன்ற மாற்று யோசனை சிந்திக்காமல் இருப்பதும் சுகமானதுதான்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்