‘இலந்தைப்பழம் வாங்கலையோ?’ பாரம்பரிய மருத்துவத்தில் 3,000 ஆண்டுகளுக்கு மேல் புழக்கம்! இலந்தையின் நன்மைகள்!
பாரம்பரிய மருத்துவத்தில் 3,000 ஆண்டுகளுக்கு மேல் புழக்கத்தில் உள்ள இலந்தை பழத்தின் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
பாரம்பரிய மருத்துவத்தில் 3,000 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படும் இலந்தை பழத்தின் நன்மைகள் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. இலந்தைப்பழம் சீனபேரிட்சை என்றும் அழைக்கப்படுகிறது. சிவப்பு பேரிட்சை என்ற மற்றொரு பெயரும் உள்ளது. இந்தப்பழம் சீனாவை பிறப்பிடமாகக் கொண்டது. முட்டை வடிவம், முத்து வடிவம் என வடிவங்களில் கிடைக்கிறது. இது சிறிய செரிப்பழம்போல் இருக்கும். இது மெல்லிய, சாப்பிடக்கூடிய தோலைக் கொண்டிருக்கும். உள்ளே இதன் சதை வெள்ளை மற்றும் சிவப்பு நிறம் கலந்த வெண்மை நிறத்தில் இருக்கும். நன்றாக சிவந்தவுடன், இந்தப்பழம் சுருங்கிவிடும். அதையும் சாப்பிடலாம்.
100 கிராம் இலந்தை பழத்தில் கொழுப்புகள் 0.2 கிராம் உள்ளது. புரதம் 1.2 கிராமும், பொட்டாசியம் 250 மில்லிகிராமும், வைட்டமின் சி 69 மில்லி கிராமும், இரும்புச்சத்துக்கள் 0.48 மில்லிகிராமும் உள்ளது. 79 கலோரிகள் உள்ளது.
இலந்தை பழத்தின் நன்மைகள்
இலந்தைப்பழம் பாரம்பரிய மருத்துவத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம்
இலந்தை பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஃப்ளேவனாய்ட்கள், பாலிசாசரைட்கள் மற்றும் டிரிடெர்பெனிக் அமிலம் உள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இவை செல்களின் சேதத்தை தாமதப்படுத்தும். இந்த சேதத்தை ஃபரி ராடிக்கல்கள் என்ற வேதிப்பொருட்கள் ஏற்படுத்துகிறது. புகை பிடித்தல், காற்று மாசு மற்றும் கடும் சூரிய ஒளியால் ஃப்ரி ராடிக்கல்கள் உருவாகிறது. உங்கள் உடலிலும் ஃப்ரி ராடிக்கல்கள் தோன்றும்.
உறக்கத்தை அதிகரிக்கும்
இலந்தைப் பழம் பாரம்பரிய மருத்துவத்தில் உறக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் குணங்களும் அதற்கு உதவுகிறது.
செரிமானம் மற்றும் மலச்சிக்கல்
இலந்தை பழத்தில் உயர் நார்ச்சத்துக்கள் உள்ளது. இந்தப்பழம் 100 கிராம் எடுத்தால், அதில் 6 கிராம் நார்ச்சத்து உள்ளது. ஒரு நாளில் உங்களுக்கு 25 முதல் 30 கிராம் வரை நார்ச்சத்து தேவைப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுகள் மலச்சிக்லைப் போக்குகிறது. உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக்கொடுத்து, உங்கள் எடையிழப்பு பயணத்துக்கு உதவுகிறது. ரத்தச் சர்க்கரை அளவை மேம்படுத்த உதவுகிறது. குடல் புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது. கொழுப்பைக் குறைக்கிறது. இது உங்களுக்கு இதய நோய் ஆபத்தையும் குறைக்கிறது.
இலந்தை பழத்தின் சாறு, உங்களுக்கு மலச்சிக்கலைப்போக்க உதவும். இலந்மை பழத்தின் சாறை பயன்படுத்தி மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம் என ஆய்வுகளின் மூலமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது
இலந்தை பழம் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. ஏனெனில் இலந்தை பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம். பழத்தின் அளவைப் பொறுத்து, இலந்தைப்பழம் உங்கள் அன்றாட வைட்டமின் சி தேவையை பூர்த்தி செய்கிறது. உங்களுக்கு ஒரு நாளைக்கு 90 மில்லிகிராம் வைட்டமின் சி தேவைப்படுகிறது.
பக்கவிளைவுகள்
மலத்தை இளக்க இலந்தை பழங்கள் பயன்படுத்தப்பட்டாலும், இதை எடுத்துக்கொள்ளும்போது கவனம் தேவை. மனஅழுத்த மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள் இந்தப்பழத்தை தவிர்க்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சில மருந்துகளுடன் இது வினை புரியும். சில வலிப்பு மருந்துகளுக்கும் இதற்கும் ஒத்துக்கொள்ளாது. எனவே மருந்து மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் மருத்துவரின் பரிந்துரையின்பேரில் மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்