புகைபிடிப்பதை நிறுத்தினால் இதயம் குணமாகுமா? புதிய ஆய்வு கூறும் தகவல் என்ன?
புகை பிடிக்கும் பழக்கம் குறைவாக உள்ளவர்களுக்கு இதயம் குணமடைய 5-10 ஆண்டுகள் ஆகும். ஆனால் அதிகம் புகைப்பிடிப்பவர்களுக்கு, இதயம் குணமடைய 25 ஆண்டுகள் ஆகின்றன என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒருவர் புகைபிடிப்பதை விட்டுவிட்ட பிறகு உடல் இயற்கையாகவே குணமடைய ஆரம்பிக்கும் போது, மீண்டும் புகைபிடித்தல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை சீர்குலைத்து இதயத்தை பாதிக்கிறது. இருப்பினும் புகைபிடிப்பதை விட்டுவிட்டால், உடல் முழுமையாக குணமடைய இன்னும் நீண்ட நேரம் எடுக்கும் என கொரியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரியா பல்கலைக்கழக அன்சன் மருத்துவமனையின் சியுங் யோங் ஷின் எதிரா மருத்தவர் தலைமையிலான குழு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் தென் கொரியாவில் 5.3 மில்லியன் மக்கள் புகைபிடிப்பதை நிறுத்திய பிறகு இதயம் குணமடைய எவ்வளவு நேரம் ஆகும் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
புகைபிடிக்கும் பழக்கம் உள்ள அனைத்து நபர்களுக்கும் இதயம் குணமாகும் காலகட்டம் சமமாக இல்லை என்பதை இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. புகைபிடிப்பதில் இருந்து மக்கள் வெளியேறிய பிறகு குணமடைய தங்கள் தனிப்பட்ட நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். சிலருக்கு பல ஆண்டுகள் ஆகலாம், மற்றவர்களுக்கு பல தசாப்தங்கள் ஆகலாம். அதாவது ஒரு நபர் புகைத்த சிகரெட் பாக்கெட்டுகளின் எண்ணிக்கையை வைத்து, புகைத்த வருடங்களின் எண்ணிக்கையால் பெருக்கப்படும்.
இதில் நாள் ஒன்றுக்கு 8 பாக்கெட்டிற்க்கும் குறைவாக சிகரெட் பிடிப்பவர்களின் இதய ஆரோக்கியம் புகைபிடிக்காத ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் புகைபிடிக்காதவர்களின் இதயத்தின் ஆரோக்கியத்தின் அளவில் சீராகும் என்று ஆய்வு கண்டறிந்தது. இருப்பினும், புகைபிடிக்காதவர்களுக்கு, புகைபிடிப்பதை விட்டுவிட்டு சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, புகைபிடிக்காதவர்களின் இதய ஆரோக்கியம் மேம்படுவதும் தெரியவந்துள்ளது.
ஆய்வின் முடிவுகள்
தென் கொரியாவில் 5,391,231 பேரின் சுகாதாரப் பதிவுகளின் விரிவான பகுப்பாய்வுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது, இதில் சராசரியாக 45.8 வயதுடைய ஆண்கள் அதிகமாக இருந்தனர். இந்த பங்கேற்பாளர்கள் சராசரியாக 4.2 ஆண்டுகள் கண்காணிக்கப்பட்டனர், மேலும் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு உள்ளிட்ட அவர்களின் உடல்நிலைகள் பதிவு செய்யப்பட்டன. அவர்கள் புகைபிடித்த வரலாறு, ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட்டுகள், புகைப்பிடிப்பதை நிறுத்தியது போன்ற விவரங்களும் பதிவு செய்யப்பட்டன.
புகை பிடிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பேரழிவு ஏற்படும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. புகைபிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில், 30 பேக்-ஆண்டுகள் உள்ளவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்களின் ஆபத்து இரட்டிப்பாகும்.
ஆய்வு கொடுத்த விழிப்புணர்வு
இந்த ஆய்வு புகைபிடிப்பதை நிறுத்திய உடனே ஆரோக்கியம் மேம்படும் என்ற கருத்தை பொய்யாக்கி உள்ளது. உண்மையில், ஒருவர் புகைபிடிப்பதில் இருந்து வெளியேறிய பிறகு உடல் இயற்கையாக குணமடைய நிறைய நேரம் எடுக்கும். புகைபிடிப்பதால் ஏற்படும் நீண்டகால தாக்கம் மற்றும் உடல் மீட்க எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவுகிறது. இதன் அடிப்படையில் புகைபிடிப்பதை முடிந்த அளவிற்கு இப்போதே நிறுத்துவது நலம் பயக்கும் என பரிந்துரைக்கப்படுகிறது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்