HT Tamil Exclusive: "மூலம்" என்ற வார்த்தையே உடம்பை அதிர வைக்குதா.. அறுவை சிகிச்சைதா தீர்வா.. மருத்துவரின் சுவாரஸ்ய தகவல்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ht Tamil Exclusive: "மூலம்" என்ற வார்த்தையே உடம்பை அதிர வைக்குதா.. அறுவை சிகிச்சைதா தீர்வா.. மருத்துவரின் சுவாரஸ்ய தகவல்

HT Tamil Exclusive: "மூலம்" என்ற வார்த்தையே உடம்பை அதிர வைக்குதா.. அறுவை சிகிச்சைதா தீர்வா.. மருத்துவரின் சுவாரஸ்ய தகவல்

Pandeeswari Gurusamy HT Tamil
Dec 30, 2024 08:48 PM IST

நாம் மூலம் என்பது ஒரு பிரச்சினையே தவிர அதை ஒரு நோயாக கருத முடியாது. மூலம் என்ற பிரச்சினைக்கு நோய் கிருமி தொற்று காரணம் இல்லை. முழுமையாக நம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை தான் காரணமாக உள்ளது.

"மூலம்" என்ற வார்த்தையே உடம்பை அதிர வைக்கிறதா.. அறுவை சிகிச்சை தான் தீர்வா.. மருத்துவர் தரும் சுவாரஸ்ய தகவல்கள்!
"மூலம்" என்ற வார்த்தையே உடம்பை அதிர வைக்கிறதா.. அறுவை சிகிச்சை தான் தீர்வா.. மருத்துவர் தரும் சுவாரஸ்ய தகவல்கள்!

பிரச்சினையை வெளியில் சொல்லவே கூச்சமா.. மலம் கழிக்கவே முக்கலும் முனங்கலுமாய் பயமா.. மூலம் என்ற வார்த்தையே உடம்பை அதிர வைக்கிறதா.. அறுவைச்சிகிச்சை தான் தீர்வா.. ஆசன வாயில் தீயாய் எரியும் மூலத்துக்கு தீர்வே கிடையாதா.. ஆசையாய் சாப்பிடும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் வதைத்தெடுக்கு மூலத்துக்கு பரிகாரம் தான் என்ன. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சிக்கலா.. ஆசையாய் சாப்பிடும் மைதாவில் தயாரிக்கப்பட்ட புரோட்டா பூரிக்குள் இத்தனை வில்லங்கம் இருக்கிறதா.. இதன் பல்வேறு சிரமங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இது குறித்து நாம் மதுரையைச் சேர்ந்த பிரபல ஹோமியோபதி மருத்துவர் ஜானகி அவர்களிடம் உரையாடிய போது,தொடர்ந்து அவர் தெரிவித்த பல தகவல்களை பகிர்கிறோம்.

மூலம் என்பதை ஒரு சிக்கலான நோயாக பார்க்க முடியுமா?

நாம் மூலம் என்பது ஒரு பிரச்சினையே தவிர அதை ஒரு நோயாக கருத முடியாது. மூலம் என்ற பிரச்சினைக்கு நோய் கிருமி தொற்று காரணம் இல்லை. முழுமையாக நம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை தான் காரணமாக உள்ளது. குறிப்பாக இந்த தலைமுறையினர் கீரை, காய்கறி, பழங்கள் உட்பட நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்த்து விட்டதால் செரிமான சக்தி குறைய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பீட்சா, பர்கர், நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ், பிஸ்கட், ஃபிரட் போன்ற பேக்கரி ஐட்டங்கள் என்று இரவு நேர உணவாக எல்லோரும் எடுத்து கொள்ளும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதுவே மலச்சிக்கல் தொடர்ந்து ஏற்பட காரணமாக உள்ளது. மலச்சிக்கல் காரணமாக மலம் கழிக்கும் போது ஏற்படும் சிரமங்கள் அதிகம் உள்ளது.

குறிப்பாக முக்கித் திணறி மலத்தை வெளியேற்றும் சூழல் உருவாகிறது. இந்த மாதிரி நேரங்களில் ரத்தப்போக்கும் மலத்தோடு சேர்ந்து விடுகிறது. இது தொடரும் போது ஆசன வாய் பகுதியில் சிறு சிறு வீக்கம் உண்டாகிறது.

மூலம் பிரச்சினையில் இருந்து நம்மை பாதுகாக்க வழி இருக்கிறதா

கண்டிப்பாக இருக்கிறது. இந்த சூழலில் நாம் கட்டாயம் உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும். அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் எளிதாக ஜீரணம் ஆகாத உணவுகளை கவனமாக தவிர்த்து விட வேண்டும். உடல் சூடு போன்ற காரணங்களால் கூட இந்த மாதிரி பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக மலச்சிக்கல் ஏற்படும் போது ஆரம்பத்திலேயே உணவு முறையில் கவனம் செலுத்தி மாற்றம் கொண்டு வரும் போது ஆசன வாய் பகுதியில் மூலம் பெரிய அளவிலான பிரச்சினையாக உருவாகாமல் தடுக்க முடியும். இதை கவனிக்காமல் விடும் போது தான் சிரமம் ஏற்படுகிறது.

உணவு முறையில் மாற்றம் கொண்டு வருவதோடு மட்டுமன்றி உடல் எடை விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதிக பருமன் பல நேரங்களில் சிக்கல்கள் உருவாக காரணமாக உள்ளது.

மூலம் பிரச்சினைக்கான சிகிச்சை முறை ஹோமியோபதி மருத்துவத்தில் இருக்கிறதா?

வழக்கம் போல ஹோமியோபதி மருத்துவ துறையில் ஒவ்வொருவருக்கும் அவரவர் பிரச்சினைகளுக்கு ஏற்ற மருந்தாக வழங்கும் முறை உள்ளது போல் தான் மூலத்துக்கான சிகிச்சையும் என்று கூறுகிறார். வறண்ட இறுக்கமாக மலம் போவதை தவிர்க்க காலை நேரத்தில் சல்பர் (Sulphur) என்ற மருந்தும் இரவு நேரத்தில் நக்ஸ்வோமிகா (Nuxvomica) என்ற மருந்தும் உதவுகிறது. குறிப்பாக இந்த இரண்டு மருந்துகளை தொடர்ந்து ஒரு வாரம் எடுத்துக் கொள்ளும் போது மலம் கழிப்பதில் உள்ள சிரமத்தை குறைக்க உதவுகிறது.

மலத்தோடு சேர்ந்து ரத்தப்போக்கு ஏற்படும் நேரங்களில் ஹீமாமெலிஸ் பாஸ்பரஸ் போன்ற மருந்துகள் உதவுகிறது. ஆசன வாய் பகுதியில் எரிச்சல் வலி அரிப்பு போன்றவை இருந்தால் ஆசிட் நைட்ரம் போன்ற மருந்துகள் உதவுகிறது. ஆசன வாயில் வீக்கங்கள் போன்று இருக்கும் போது கல்கேரியா ப்ளூ பயோகெம் போன்ற மருந்துகள் மூன்று வேளை எடுத்துக் கொள்ளும் போது வீக்கம் குறைய உதவுகிறது. இவை தவிர வேறு வகையான ஆயிண்ட்மென்ட் எனப்படும் பல்வேறு வகையான ஹோமியோபதி மருந்துகளை அடிப்படையாகக் கொண்ட களிம்புகளும் பிரச்சினை உள்ள பகுதியில் தடவும் போது எரிச்சல் அரிப்பு சிவந்த தன்மை வீக்கம் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்க உதவுகிறது. ஆனால் கண்டிப்பாக இந்த மருந்துகளை ஹோமியோபதி மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்றுத்தான் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த மருந்துகளோடு உணவு முறையிலும் கட்டாயம் மாற்றம் கொண்டு வர வேண்டும். முறையான ஹோமியோபதி சிகிச்சையை தொடர்ந்தால் மூலத்தில் இருந்து முழுமையாக குணம் அடையமுடியும் என்று அழுத்தமாக கூறுகிறார் டாக்டர் ஜானகி.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.