கல்லீரல் கழிவுகளை நீக்கி, சுத்தம் செய்து நாள்பட்ட நோயில் இருந்து காக்க வேண்டுமா? இந்த ஸ்முத்தி மட்டும் போதும்!
கல்லீரல் கழிவுகளை நீக்கி, சுத்தம் செய்து நாள்பட்ட நோயில் இருந்து காக்க வேண்டுமா? இந்த ஸ்முத்தி மட்டும் போதும். தினமும் பருகலாம் ஆனால் வாரத்தில் 3 முதல் 4 நாட்கள் கட்டாயம் பருகிவிட வேண்டும்.
கல்லீரல்
நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இது உடலுக்கு கிடைக்கும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவை பராமரித்து, ரத்தம் உறைதலை முறைப்படுத்தி, உடலுக்கு தேவையான பல்வேறு முக்கிய பணிகளை செய்கிறது. இது உடலின் வலது புறத்தில் வயிற்றுப்பகுதியில் உள்ளது. நமது உடலில் கல்லீரல் 500க்கும் மேற்பட்ட வேலைகளை செய்கிறது. ரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. ரத்தச்சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
அல்பியூமின் உற்பத்தி
அல்பியூமின் என்ற புரதம், அருகில் உள்ள செல்களுக்கு ரத்தத்தில் உள்ள திரவங்கள் கசிந்துவிடாமல் காக்க உதவுகிறது. இது ஹார்மோன்கள், வைட்டமின்கள் மற்றும் என்சைம்களை உடல் முழுவதும் சுமந்து செல்கிறது.
பித்த உற்பத்தி
செரிமானத்துக்கு உதவக்கூடிய திரவம்தான் பித்தம், சிறு குடலில் உள்ள கொழுப்பை உறிஞ்சவும் உதவுகிறது.
ரத்தத்தை வடிகட்டுகிறது
வயிறு மற்றும் குடலில் இருந்து வெளியேறும் ரத்தம், கல்லீரல் வழியாக செல்கிறது. நச்சுக்களையும் மற்ற நச்சுப்பொருட்களையும் வெளியேற்றுகிறது.
அமினோ அமிலங்களை பராமரிக்கிறது
அமினோ அமிலங்களைப் பொறுத்துதான் புரத உற்பத்தி உள்ளது. அமினோ அமிலங்கள் அளவை ரத்தத்தில் ஆரோக்கியமான அளவு வைத்திருப்பதை கல்லீரல் உறுதிப்படுத்திகிறது.
ரத்த உறைதல் ஏற்படாமல் தடுக்கிறது
வைட்டமின் கேவை பயன்படுத்திதான், ரத்தத்தை உறையச்செய்யும் உட்பொருட்கள் உருவாகிறது. அது கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்தம் என்ற திரவத்தால் மட்டுமே உறிஞ்சப்படுகிறது.
தொற்றுகளை தடுக்கிறது.
ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை நீக்குகிறது.
வைட்டமின் மற்றும் மினரல்களை சேமிக்கிறது.
வைட்டமின் ஏ, டி, இ, கே, பி12, இரும்பு மற்றும் காப்பர் சத்துக்களை போதிய அளவு சேமித்து வைக்கிறது.
குளுக்கோஸ்
ரத்தத்தில் உள்ள அதிகளவு குளுக்கோஸை நீக்குகிறது. அதை க்ளைகோஜென்களாக மாற்றுகிறது. தேவைப்படும்போது அது க்ளைகோஜென்களை குளுக்கோஸாக மாற்றும்.
கல்லீரலை ஆரோக்கியமாக பராமரிப்பது எப்படி?
போதை
போதை பொருட்களையும் கல்லீரல் கட்டாயம் வடிக்க வேண்டும். அதனால் நீண்ட காலம் போதை பழக்கத்தில் இருந்தால், அது கல்லீரலை சேதப்படுத்தும்.
மது
மதுவையும் கல்லீரல்தான் வடிகட்டவேண்டும். எனவே குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் எடுத்துக்கொள்வது உடலுக்கு நல்லது. அதிகம் எடுத்துக்கொண்டால் கல்லீரல் சேதமடையும்.
வழக்கமான உடற்பயிற்சி
உடலின் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியத்துக்கும், வழக்கமான உடற்பயிற்சி கட்டாயம் வேண்டும்.
பாதுகாப்பான உடலுறவு
பாலியல் நோய்களில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள பாதுகாப்பாக செக்ஸ் வைத்துக்கொள்வது நல்லது.
நோய் தடுப்பூசி
பயணங்களின்போது போதிய தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மலேரியா, மஞ்சள் காய்ச்சல் உள்ளிட்டவை கல்லீரல் தொற்றுகளால் ஏற்படக்கூடியவை.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் – 1
ஆரஞ்சு பழம் – 1
அன்னாசிப் பழம் – 1
பால் – 2 கப்
தேன் – 2 ஸ்பூன்
செய்முறை
பீட்ரூட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும். தோல் உறித்த ஆரஞ்சு பழத்தையும் துண்டுகளாக நறுக்கிகொள்ளவேண்டும். அன்னாசி பழத்தையும் தோலை சீவி விட்டு துண்டுகளாக்கி எடுத்துள்கொள்ளவேண்டும்.
அனைத்தையும், மிக்ஸி ஜாரில் சேர்த்து, பாலும் ஊற்றி நன்றாக அரைத்து, வடிகட்டி தேன் கலந்து காலையில் வாரத்தில் 3 அல்லது நான்கு 4 கட்டாயம் பருகவேண்டும். தினமுமே கூட பருகுவது நல்லதுதான்.
இந்த பானம் உங்கள் உடலையும் சுத்தம் செய்வதுடன், உங்களுக்கு தேவையான நோய் எதிர்ப்புத்திறனையும் வழங்குகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்