Tamil News  /  Lifestyle  /  Doctor Exclusive Interview About Pcod And Pcos Infertility

Exclusive Interview: மாதவிடாய் மாத்திரை போடலாமா? நீர்க்கட்டி இருந்தால் கர்ப்பம் தரிக்க முடியாதா? - மருத்துவர்

Aarthi V HT Tamil
Jan 04, 2024 06:45 AM IST

பிசிஓடி, பிசிஓஎஸ் பிரச்னை குறித்து மருத்துவர் சுஜா ராமநாதன் நமது இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு பேட்டி அளித்து உள்ளார்.

மருத்துவர் சுஜா ராமநாதன் பேட்டி
மருத்துவர் சுஜா ராமநாதன் பேட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

கேள்வி: எத்தனை வகையான பிசிஓடி, பிசிஓஎஸ் இருக்கிறது?

பதில்: சாக்லேட் சிஸ்ட் என பல்வேறு வகைகள் சொல்லப்படுகிறது. ஆனால் அதை நாம் ஸ்கேன் செய்து பார்த்தால் தான் தெரியும். கருப்பையில் சின்னதாக நீர்க்கட்டி சேர்ந்து போவதால் ஸ்கேனில் பார்த்து  பாலிசிஸ்டிக் ஓவேரியின் சிண்ட்ரோம் என சொல்கிறோம். இதற்கு எல்லாம் ஹார்மோன் தான் காரணம். சிஸ்ட் உள்ளே ரத்தம் கசிந்தால் அடர் பழுப்பு நிறத்தில் காணப்படும். அதை தான் சாக்லேட் சிஸ்ட் என அழைக்கிறார்கள்.

கேள்வி: பிசிஓடி, பிசிஓஎஸ் வருவதற்கான காரணங்கள் என்னென்ன?

பதில்: இந்த காலத்தில் இருக்கும் வாழ்க்கை முறை, ஊட்டச்சத்துக் குறைபாடு தான் இதற்கு காரணம். உடல் எடை எப்போது உடம்பில் அதிகமாக இருக்கிறதோ அப்போது ஹார்மோன் பிரச்னை வர வாய்ப்பு உள்ளது. இன்சுலின் அளவு அதிகமாவது தான் இந்த நோய்க்கான காரணம். உடலுக்கு தேவையில்லாத கொழுப்பை கொடுப்பது இதற்கு தீங்கு விளைவிக்கும்.

கேள்வி: நீர்க்கட்டி வருவதற்கு வெள்ளை சாதம் காரணமா?

பதில்: வெள்ளை சாதம் சாப்பிட்டால் உண்மையில் இன்சுலின் அளவு அதிகமாகிறது. ஆனால் நம் நாட்டை பொருத்தவரை வெள்ளை சாதம் தான் சாப்பிடுவோம். அதனால் அது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. அதுவும் ஒரு விதமான காரணம். வெள்ளை சாதம் இன்சுலின் அளவை அதிகப்படுத்துகிறது.

கேள்வி: நீர்க்கட்டி இருந்தால் கர்ப்பம் தரிக்க முடியாதா?

பதில்: பெண்கள் 12, 13 வயது அடைந்தவுடன் இந்த பிரச்னை ஆரம்பமாகிவிடும். வயதிற்கு வந்த உடன் ஹார்மோன் பிரச்னை வந்துவிடுகிறது. முதல் அறிகுறி மாதவிடாய் தாமதம் ஆகும். பிறகு எடை அதிகரிப்பு, முகப்பரு, முகத்தில் முடி வளர்வது உள்ளிட்டவை அறிகுறி. ஈஸ்ட்ரோஜன் குறைந்து, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் அதிகமாகிவிடுகிறது. இரண்டுமே சமமாக இருக்க வேண்டும். இந்த ஹார்மோன் பிரச்னையை கண்டு கொள்ளாமல் இருப்பதால் கர்ப்பம் தரிக்கத் தாமதமாகிறது.

கேள்வி: இயற்கையாக மாதவிடாய் வர என்ன செய்ய வேண்டும்?

பதில்: ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்து, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அதிகமாகுவது தான் இதற்குக் காரணம். இதனால் தான், மாதவிடாய் சரியாக இருப்பது இல்லை.

எடை குறைப்பு தான் இதற்கு ஒரே தீர்வு. எப்போது உடல் எடை குறைக்கப்படுகிறதோ அந்த நேரத்தில் ஹார்மோன் அளவு சரியாகும். அதையும் மீறி மாதவிடாய் வரவில்லை என்றால் மாத்திரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் எடை குறைத்தலே இதற்கு நிரந்தர தீர்வு.

கேள்வி: எடை குறைத்தால் நீர்க்கட்டி இருப்பவர்கள் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: நிச்சயமாக இருக்கிறது. மாத்திரை இல்லாமல் கருத்தரிக்க முடியும்.

கேள்வி: மாதவிடாய் மாத்திரை சாப்பிட்டால் ஓவுலேஷன் நடக்குமா? நடக்காதா?

பதில்: இரண்டு வகையான சிகிச்சை இருக்கிறது. ஹார்மோன் சரி செய்வதும், இன்சுலின் அளவை குறைப்பது என இரண்டு வகை உண்டு. இதில் ஹார்மோன் சரி செய்வதற்கு எடுக்கும் மாத்திரை ஓவுலேஷனை பாதிக்கும்.

கேள்வி: திருமணத்திற்கு பிறகு நீர்க்கட்டி வருவதற்கான காரணம் என்ன?

பதில்: சிறு வயதிலிருந்து சில பேருக்கு நீர்க்கட்டி இருப்பது தெரியாமல், திருமணத்திற்கு பிறகு தெரிய வரலாம். சிலருக்கு திருமணத்திற்கு பிறகு நீர்க்கட்டி வரலாம். ஹார்மோன் மாற்றமே தான் அதற்கு காரணம். திருமணத்திற்குப் பிறகு உடல் எடை அதிகரித்து அவர்களின் உடலில் ஹார்மோன்கள் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் ஓவுலேஷன் பாதிக்கப்படும்.

கேள்வி: நீர்க்கட்டி குணப்படுத்தும் நோயா?

பதில்: கண்டிப்பாக நீர்க்கட்டி சரி செய்ய முடியும். மருத்துவரை அணுகி ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.

மருத்துவர் தொடர்பான தகவல்

Dr.Suja Ramanathan
Senior Consultant
Neuberg Diagnostics

WhatsApp channel

டாபிக்ஸ்