நீங்கள் விழுந்து விழுந்து துள்ளத்துடிக்க சிரிக்கவேண்டுமா? இதோ இந்த மொக்கை ஜோக்க படிங்க!
நீங்கள் வாய்விட்டு சிரிக்கவும், மனம் விட்டு மகிழவும் மொக்க ஜோக்குகள் இதோ.
இன்று உங்களை சிரிக்கவைக்கும் மொக்கை ஜோக்குகள் இதோ
ஒருத்தர் பேங்கில் லோன் வாங்க வாட்ச்மேனை கூட்டிக்கொண்டு வந்தாராம் ஏன்?
ஹாஹாஹா! ஏன்னா மேனேஜர் சொன்னாராம் செக்யூரிட்டி இருந்தாதான் லோன் தருவேன்னு, ஹாஹாஹா!
ஒருத்தர் 2 லட்சம் திருடினாராம், ஒரு லட்சத்த ஒரு பேங்கல போட்டாராம், வாங்கிக்கிட்டாங்களாம். ஆனால் இன்னொரு லட்சத்த இன்னொரு பேங்கல போட்டாராம், ஆனால் வாங்கவே இல்லையாம், ஏன்?
ஹாஹாஹா! ஏன்னா, அவர் போட்டது பவர் பேங்க்காம், ஹாஹாஹா!
ஒருத்தனுக்கு ஆக்ஸிடன்ட் ஆச்சாம், அவனுக்கு ரத்தம் வேணும்னு டாக்டர் கேட்டாராம். உடனே இன்னொருத்தன் இலைய பறிச்சுட்டு வந்து கொடுத்தானாம், ஏன்?
ஏன்னா டாக்டர் இள ரத்தம் வேணும்ன கேட்டாராம். ஹாஹாஹா!
ஒருத்தன் நிறைய கிளி வளர்த்தானாம், ஒரு நாள் எல்லா கிளியும் பறந்துபோச்சாம். ஆனா ஒரு கிளியாலா மட்டும் பறக்கவே முடியலையாம், ஏன்?
ஏன்னா, அது சங்‘கிலி’யாம். ஹாஹாஹா!
ஒரு ரவுடி எப்போது குழந்தையை கடத்துவாராம். அதுனால் அவருக்கு காசு கிடைக்குமாம். ஆனா நேத்து ஒன்ன கடத்துனாராம் காசே கிடைக்கலையாம், ஏன்?
ஏன்னா நேத்து அவர் நேரத்தை கடத்தினாராம். ஹாஹாஹா!
இந்த உலகத்திலேயே அதிக பலசாலியான எறும்பு எலிதானாம், எப்படி?
ஏன்னா, அதுதான் புள்ளையாரையே தாங்குதுல்ல, ஹாஹாஹா!
ஒரு பொண்ணுகிட்ட லவ்வர் இருக்கானு கேக்குறதும், கண்டக்டர் கிட்ட சில்லறை இருக்கானு கேக்குறதும் ஒன்னதான், ஏன்?
ஏன்னா, இரண்டு பேருமே இருந்தாலும் இல்லன்னுதான் சொல்வாங்களாம். ஹாஹாஹா!
கார் ஓட்டத்தெரியலைன்னா என்ன பண்ணணும்ன்னு தெரியுமா?
வேற என்ன பண்ணணும், கார் ஓட்டையத்தான் பெருசாக்கணும், ஹாஹாஹா!
ஒரு அரசியல்வாதி மேடையில பேசும்போது கீழே இருந்த ஒருத்தன் தும்மிக்கிட்டே இருந்தானாம், ஏன்?
ஏன்னா, அவர் பொடி வெச்சு பேசுனாறாம்.
ஒரு பொண்ணு காய்கறியெல்லாம் சர்ஃப் எக்ஸ் எல் ஊற்றி கழுவினாராம்? ஏன்?
ஏன்னா, காய்கறியெல்லாம் கரையாக இருந்ததாம், ஹாஹாஹா!
ஒரு மன்னர் தினமும் காலையில் உடம்ப குறைக்க அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மயிலை ஓட விடுவாராம்?
ஏன்னா, வைத்தியர் அவர தினமும் ஒரு மயில் தூரம் ஓடினா உடம்பு குறையும்னு சொன்னாராம்? ஹாஹாஹா!
ஒரு திருடன் திருடப்போன இடத்துல பீரோவ சுத்தப்படுத்தினாராம்?
ஏன்னா, தொழில்ல சுத்தம் வேணுமாம் அதான், ஹாஹாஹா!
ஒரு அம்மா ஒரு சின்னப்பையன தண்ணீ எறச்சு ஊத்த சொன்னாங்களாம், அதுக்கு அவன், தண்ணீர் பிடிச்சு முருங்கைக்காயில ஊத்துனானாம், ஏன்?
ஏன்னா, அது டிரம்ஸ்டிக்ல அதான் டிரம்ன்னு நினைச்சு ஊத்துனானாம், ஹாஹாஹா!
ஒருத்தனுக்கு இந்த உலகத்துல வாழவே பிடிக்கலையாம், ஏன்?
ஏன்னா, அவனுக்கு மா, பலாதான் பிடிக்குமாம், வாழ பிடிக்காதாம், ஹாஹாஹா!
இன்டர்வ்யூ போய்ட்டு வரும்போது ஒருத்தன் அங்க இருந்த சீட்ட தூக்கிட்டு வந்துட்டானாம், ஏன்?
ஏன்னா, மேனேஜர் சொன்னாரம் டேக் யுவர் சீட்டுன்னு, அதான் சீட்ட தூக்கிட்டு வந்துட்டானாம், ஹாஹாஹா!
ஒருத்தர் எப்போதும் வீட்டுல அடுப்ப பத்தவைக்க அவன் மனைவியைத்தான் கூப்பிடுவாராம், ஏன்?
ஏன்னா, அவன் பொண்டாட்டி பத்தவைக்கிறதுல்ல கில்லாடியாம், ஹாஹாஹா!
ஒரு தாத்தா முடியாம ஆஸ்பத்திரில இருந்தாங்களாம், அப்போது அவரோட பேரன் தாத்தாவ பாக்க கையில கிளவுஸ் போட்டுக்கிட்டு வந்தானாம், ஏன்?
ஏன்னா, ஹாஹாஹா! பெரியவங்கள பாக்க வரும்போது வெறும் கையோட வரக்கூடாதுன்னு யாரோ சொன்னாங்களாம்.
ஒருத்தர் எப்பவும் மத்தவங்க கையத்தான் எதிர்பார்த்துக்கிட்டு இருப்பாராம், ஏன்?
ஏன்னா, அவரு கைரேகை ஜோதிடராம், அதான் மத்தவங்க கைய எதிர்பார்ப்பாராம். ஹாஹாஹா!
ஒருத்தன் டாக்டர் பாக்க டவுவரோட வந்தானாம், ஏன்?
ஏன்னா, டாக்டர்கிட்ட எதுவும் மறைக்கக்கூடாது.
இன்றைய சிந்தனைக்கு
உங்கள் வாழ்வில் சக்தி நிறைந்த ஆயுதம் என்ன?
சிந்தனைதான். அதற்குத்தான் எந்த சூழலையும் மாற்றும் திறன் உள்ளது. எனவே நற்சிந்தனைகளை வளர்ப்போம்.
ஜோக்
ஜோக்குகள் என்றால் என்ன? ஜோக்குகள், நகைச்சுவை என்பது குறிப்பிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட வகையில் எழுதி மக்களை சிரிக்கவைப்பது ஆகும். ஆனால் அதுபோல் எழுதும்போது அது யார் மனதையும் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஜோக்குகள் கதைபோல் இருக்கலாம் அல்லது உரையாடல்களாக இருக்கலாம். முடிக்கும்போது பஞ்ச் லைன் சேர்க்கலாம். அதில் சிரிக்கக்கூடிய அம்சம் இருக்கவேண்டும். சிறிய ஜோக்குகளாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, படிக்கும்போதோ அல்லது படித்து முடித்த பின்னரோ உங்களுக்கு சிரிப்பு வரவேண்டும் அதுதான் ஜோக்குகள் எனப்படும். ஜோக் விடுகதைகளும் உள்ளன. அவற்றை உங்கள் குழந்தைகளிடம் கேட்டுகும்போது அவர்களின் சிந்தனைத்திறன் வளரும். ஜோக்குளின் நவீன வடிவம்தான் மீம்ஸ்கள். ஜோக்குகளை நீங்கள் கூறும்போது மற்றவர் கட்டாயம் சிரிக்கவேண்டும். ஆனால் அவர்கள் மனம் புண்படக்கூடாது.
சிந்திக்க வைக்கும் ஜோக்குகள்
சில ஜோக்குகள் சிந்தனையை தூண்டுவதாகவும் இருக்கவேண்டும். சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளிலும், சிலர் சிரிக்க மட்டுமே வைப்பார்கள். சிலர் சிரிக்கவும், சிந்திக்கும் வகையிலும் நகைச்சுவை காட்சிகளை அமைப்பார்கள். அனைத்து கலாச்சாரங்களிலும் பொழுதுபோக்கு அம்சமாக ஜோக்குகள் உள்ளது. அச்சு ஊடக காலத்தில் அதில் ஜோக்குகள் எழுதப்படும். அதற்கு முன் தெருக்கூத்துகள் மற்றும் நாடகங்கள் என்ற நமது பாரம்பரிய ஊடகங்களிலும் இடையில் பபூன் வருவார்கள். ஜோக்குகள் செய்யும் நகைச்சுவை கலைஞர்களுக்கு பபூன், ஜோக்கர் என்ற பெயர்கள் உண்டு. அவர்கள் வித்யாசமாக உடை உடுத்தியிருப்பார்கள். சர்க்கஸ்களிலும் கோமாளிகள் இருப்பார்கள். அவர்களும் நம்மை மகிழ்விப்பார்கள்.
எனவே ஜோக்ஸ் மற்றும் ஜோக்கர்கள் என்பவர்களின் வேலை நம்மை மகிழ்விப்பதாகும். அடுத்து காட்சி மற்றும் வானொலி காலத்தில் அதிலும் ஜோக்குகள் இடம்பெற்றன. தற்போது மீம்ஸ்கள் சமூக வலைதளங்கள், இணைய பக்கங்களிலும் ஜோக்ஸ்களை காட்சிகளாகவும், வார்த்தைகளாகவும் எழுதி படித்து, சிரித்து, மகிழ்ந்து நமது நகைச்சுவை உணர்வுக்கு மதிப்புக் கொடுத்துக்கொள்கிறோம்.
தொடர்புடையை செய்திகள்