தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Do You Want To Be A Billionaire Find Out What The Worlds Richest People Have Done

Financial Tips : நீங்கள் பில்லினியராக வேண்டுமா? உலக பணக்காரர்கள் என்ன செய்தார்கள் என தெரிந்துகொள்ளுங்கள்!

Priyadarshini R HT Tamil
Mar 03, 2024 05:12 PM IST

நீங்கள் பில்லினியராக வேண்டுமா? உலக பணக்காரர்கள் என்ன செய்தார்கள் என தெரிந்துகொள்ளுங்கள்!

நீங்கள் பில்லினியராக வேண்டுமா? உலக பணக்காரர்கள் என்ன செய்தார்கள் என தெரிந்துகொள்ளுங்கள்!
நீங்கள் பில்லினியராக வேண்டுமா? உலக பணக்காரர்கள் என்ன செய்தார்கள் என தெரிந்துகொள்ளுங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

கடன் தவிர்

பில்லினியர்கள் வட்டி, கடன் ஆகியவற்றை தவிர்ப்பார்கள். அவர்கள் கடனை தவிர்த்து பணத்தை சேமிக்க முயற்சி செய்வார்கள். அதில் கிடைக்கும் வட்டியில் அவர்கள் தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்வார்கள்.

சொந்த காரை வாங்க நினைப்பார்கள்; வாடகை காரை தவிர்ப்பார்கள்

பில்லினியர்கள், எப்போது கார் தேவையென்றால், அதை வாங்க நினைப்பார்கள். அதை மாத கணக்கில் வாடகைக்கு எடுக்க எண்ணமாட்டார்கள். அதாவது அவர்கள் அவர்களுக்கு தேவையெனில் அதை மொத்தமாக வாங்கிவிடுவார்கள். அதை வாடகைக்கு எடுத்து பணத்தை செலவழிக்க மாட்டார்கள்.

எதிர்பாராத செலவு நிதி

பொருளாதார பாதுகாப்பு என்பது, எதிர்கால பொருளாதார பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பது. எனவே ஒருவர் எப்போதும் எதிர்பாராத செலவுகளுக்கு முன்னெச்சரிக்கையாக சிறிது பணத்தை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். அது உங்களுக்கு ஏற்படும் திடீர் செலவுகளுக்கு உதவும். பில்லினியர்கள், இந்த எதிர்பாராத செலவுகள் நிதிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

முதலீட்டு திட்டம்

பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் அல்லது எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் என அவர்கள் பணம் குறித்த தெளிவான இலக்குகளை கொண்டிருப்பார்கள். அது அவர்களின் எதிர்கால பண முதலீடுகளை அவர்களுக்கு சரியாக அடையாளம் காட்டிக்கொடுக்கும்.

வேலைவாய்ப்பின் நன்மைகளை பயன்படுத்துவது

பில்லினியர்கள், நிறுவனம் கொடுக்கும் அனைத்து வேலைவாய்ப்பு நன்மைகளையும் அனுபவித்துக்கொள்வார்கள். ஓய்வுகால சேமிப்பு திட்டமாக இருக்கலாம் அல்லது சுகாதார சேமிப்பாக இருக்கலாம் அல்லது சட்ட சேவை பணமாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும், பில்லினியர்கள் அதில் உள்ள உச்சபட்ச நன்மைகளை பயன்படுத்திக்கொள்வார்கள்.

வரி ஆதாயம்

வரி பிடித்தம் குறித்து வெற்றி பெற்ற பில்லினியர்கள் செயலாற்றல் உள்ள மனநிலையை கொண்டிருப்பார்கள். அவர்கள் வரி அதிகாரிகளிடம் அறிவுரைகளை பெற்று, வரி ஆதாயங்களை பயன்படுத்திக்கொள்வார்கள்.

பலவகை வருமான வழிகள்

பணக்காரர்கள் தங்களின் வருமான வழிகளை பலவகையாக பிரித்திருப்பார்கள். அதன் மூலம் அவர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும். பல வழிகளில் இருந்து அவர்களுக்கு பணம் கிடைக்கும் வகையில் அவர்களின் பணத்திட்டங்கள் இருக்கும். சொத்துக்களை வாடகைக்கு விடுவது முதல் வணிக ரீதியிலான முயற்சிகளை எடுத்துக்கொண்டே இருப்பது என இருப்பார்கள்.

அவர்கள் ஸ்டேட்டஸ் கான்சியஸாக இருக்க மாட்டார்கள்

வெற்றி பெற்ற பில்லினியர்களிடம் ஒழுக்கமான பொருளாதார அணுகுமுறை இருக்கும். அவர்கள் தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்க மாட்டார்கள். ஒரு சாதாரண வாழ்க்கையைத்தான் வாழ்வார்கள்.

பொருளாதார நிபுணர்களிடம் வழிகாட்டுதல் பெறுவார்கள்

வெற்றியாளர் பில்லினியர்கள், பொருளாதாரா நிபுணர்களிடம் இருந்து அறிவுரைகளைப்பெறுவார்கள். பொருளாதார திட்டங்களை தனிப்பட்ட முறையில் செய்வார்கள். அவர்களுக்கு உள்ள தேர்வுகள் குறித்து தெரிந்துகொள்வார்கள். எதை தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிந்துகொண்டு தேர்ந்தெடுப்பார்கள்.

சேமிப்பு

பொருளாதார ரீதியில் பாதுகாப்பான எதிர்காலத்தை பெறுவதற்கு, அவர்கள் சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத வகையில், உரிய விளக்கங்களுடன் கொடுக்கப்படுகிறது.

இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம். எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்