தைராய்டு பாதிப்பு வீட்டில் இருந்தபடியே அறிந்து கொள்ளும் வழிகள்.. என்ன சாப்பிடலாம், சாப்பிடக்கூடாது
தைராய்டு பாதிப்பு இருக்கலாம் என்கிற சந்தேகம் பலருக்கும் இருப்பது இயல்பானது தான். இதற்காக என ஆய்வகம் சென்று பரிசோதனைகள் செய்யாமல், இந்த பாதிப்பு இருப்பதற்கான சாத்தியத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம். தைராய்டு பாதிப்பு இருப்பவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

தைராய்டு பிரச்னையானது பொதுவாக அதன் அறிகுறிகளை சரியான கவனிப்பதன் மூலம் அதன் தீவிரத்தை புரிந்து கொண்டு தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இருப்பினும், இந்த பாதிப்பு தீவிரமாக மாறுவதற்கு முன்பு, பாதிப்பு குறித்து சிறிது சந்தேகம் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதன் மூலம் இதன் தாக்கத்தை குறைக்கலாம். பொதுவாகவே தைராய்டு ஆரம்பகட்ட அறிகுறிகளுக்கு ஆய்வகத்துக்கு சென்று உரிய பரிசோதனைகளை மேற்கொள்வது இயல்புதான் என்றாலும் கழுத்து பகுதியை தொட்டு பார்த்து நிலைமையை புரிந்து கொள்ளலாம்.
தைராய்டு சுரப்பி
கழுத்தின் கீழ் பகுதியில், சரியாக குரல்வளையின் கீழ் அமைந்துள்ள இந்த சுரப்பி, ஒரு சிறிய பட்டாம்பூச்சியைப் போல வடிவத்தை கொண்டதாக உள்ளது. இந்த சுரப்பியில் முடிச்சுகள் வளர்ச்சி அல்லது கோயிட்டர்கள் இருந்தால், பிரச்னை தொடங்குகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில் இதன் தீவிரம் அதிகரித்து தைராய்டு புற்றுநோய்க்கு கூட வழிவகுக்கும்.
தைராய்டு பிரச்னையை கண்டறிவது எப்படி
இந்த பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியில் மாற்றங்கள் இருந்தால், அது வீங்கிவிடும். இதன் விளைவாக, அது ஒரு கட்டியாக மாறி கழுத்தின் அளவு மாறக்கூடும். உங்கள் கழுத்தின் அளவில் மாற்றத்தைக் கண்டால், வீட்டிலேயே சில கழுத்து பரிசோதனைகளைச் செய்யலாம்.