மாலை நேர சூடான இனிப்பு உணவு சாப்பிடனுமா? அப்போ சுவையான சீயம் தான் பெஸ்ட் சாய்ஸ்! இதோ சூப்பர் ரெசிபி உள்ளே!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மாலை நேர சூடான இனிப்பு உணவு சாப்பிடனுமா? அப்போ சுவையான சீயம் தான் பெஸ்ட் சாய்ஸ்! இதோ சூப்பர் ரெசிபி உள்ளே!

மாலை நேர சூடான இனிப்பு உணவு சாப்பிடனுமா? அப்போ சுவையான சீயம் தான் பெஸ்ட் சாய்ஸ்! இதோ சூப்பர் ரெசிபி உள்ளே!

Suguna Devi P HT Tamil
Published Apr 07, 2025 05:42 PM IST

மாலை நேரம் வந்து விட்டாலே சுவையான சிற்றுண்டி சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் வந்து விடுகிறது. அப்படி வரும் வேளையில் இந்த இனிப்பான உணவை செய்து சாப்பிடுங்கள். சுவையான சீயம் செய்வது எப்படி என இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள்.

மாலை நேர சூடான இனிப்பு உணவு சாப்பிடனுமா? அப்போ சுவையான சீயம் தான் பெஸ்ட் சாய்ஸ்! இதோ சூப்பர் ரெசிபி உள்ளே!
மாலை நேர சூடான இனிப்பு உணவு சாப்பிடனுமா? அப்போ சுவையான சீயம் தான் பெஸ்ட் சாய்ஸ்! இதோ சூப்பர் ரெசிபி உள்ளே!

தேவையான பொருட்கள்

3 கப் பச்சரிசி

2 கப் உளுந்து

பொரிக்க தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

பூரணத்திற்குதேவையானவை

கால் கப் கடலைப்பருப்பு

அரை கப் வெல்லம்

5 ஏலக்காய்

2 டேபிள்ஸ்பூன் நெய்

செய்முறை

முதலில் பச்சரிசி, உளுந்தினை இரண்டையும் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனை குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விட்டு கடலைப்பருப்பை போட்டு மூடி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து பருப்பில் உள்ள நீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு குருணைப்பதத்திற்கு அரைக்க வேண்டும். பின்னர் ஊற வைத்த அரிசி, உளுந்தை உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைக்கவும். வெல்லத்தை பொடியாக்கி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவும்.

மேலும் ஏலக்காயை தோலுரித்து பொடியாக்கி எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் ஊற்றி அரைத்த கடலைப்பருப்பு விழுது போட்டு இரண்டு நிமிடம் வதக்கி பாகு, ஏலப்பொடி சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். கையால் எடுக்கக்கூடிய அளவிற்கு சூடு வந்தவுடன் உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை அரைத்து வைத்துள்ள அரிசிமாவு கலவையில் முக்கி எடுத்துப் போடவும். பொன்னிறமானதும் எடுத்து எண்ணெய் உறிஞ்சும் தாளில் சுற்றி தட்டில் அடுக்கவும். அவ்வளவு தான் சுவையான சீயம் ரெடி. இதனை வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதனை முயற்சி செய்து பாருங்கள்.