இந்த 7 பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது ஏன் தெரியுமா?.. ஒருவேளை தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இந்த 7 பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது ஏன் தெரியுமா?.. ஒருவேளை தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் பாருங்க!

இந்த 7 பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது ஏன் தெரியுமா?.. ஒருவேளை தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் பாருங்க!

Karthikeyan S HT Tamil
Published Apr 17, 2025 10:00 AM IST

பழங்கள் ஆரோக்கியமானவை. பழங்களை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால் சில பழங்களின் சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் ஆபத்துகள் ஏற்படலாம். குறிப்பாக இந்த 7 வகை பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் அருந்தக்கூடாது.

இந்த 7 வகை பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது ஏன் தெரியுமா?
இந்த 7 வகை பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது ஏன் தெரியுமா?

தர்பூசணி

கோடையில் சுவையான தர்பூசணி சாப்பிட விரும்பாதவர்கள் இருக்க மாட்டார்கள். உண்மையில் இதை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இந்த தர்பூசணியில் உள்ள நார்ச்சத்து உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால், தர்பூசணியில் அதிக அளவு இயற்கை சர்க்கரை ஃப்ரக்டோஸ் உள்ளது. எனவே, தர்பூசணி சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தர்பூசணியை உட்கொண்ட உடனே தண்ணீரை குடித்தால் செரிமான செயல்முறையை மெதுவாக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

வாழைப்பழம்

ஆண்டு முழுவதும் கிடைக்கும் பழம் வாழைப்பழம். மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த பழத்தில் ஏராளமான கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, மற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது இருந்தாலும், வாழைப்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. அதோடு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் பாதிக்கிறது. எனவே, வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு குறைந்தது 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்.

கொய்யாப்பழம்

கொய்யா காயில் சிறிது உப்பு சேர்த்து சாப்பிடும் பழக்கம் நம்மிடையே பலருக்கும் உண்டு. அப்படி சாப்பிட்டால் உடனே தாகம் எடுக்கும். ஆனால் தண்ணீர் குடிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். ஏனென்றால் அது செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

ஆப்பிள்

ஆப்பிள் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. ஆப்பிளில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கு உதவுவதோடு மொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. ஆனால், ஆப்பிள் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் இந்த நார்ச்சத்து குடலுக்கு செல்லாது. இதனால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். ஆப்பிள் சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடிப்பதால் வாயு, செரிமானமின்மை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

எலுமிச்சைப்பழம்

எலுமிச்சைப்பழம் அனைவருக்கும் பிடிக்கும். அந்த பழத்தின் உள்ளே இருக்கும் விதைகளின் நிறம் பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இந்த விதைகள் சுவையாக இருப்பதுடன் அதன் சாறு மிகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ளது. ஆனால், எலுமிச்சைப்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இப்படி செய்வதால் வாந்தி, வயிற்று வலி, வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, எலுமிச்சைப்பழம் சாப்பிட்ட பிறகு சுமார் அரை மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்.

பேரிக்காய்

கோடை சீசனில் அதிகம் கிடைக்கும் பேரிக்காய் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் இருமல் மற்றும் சளி போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.

மாதுளை

எல்லா நேரங்களில் கிடைக்கும் பழம் மாதுளை. மாதுளம்பழத்தில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் அது அமிலத்தன்மை உண்டாக்கி குமட்டலை ஏற்படுத்தும்.