தினமும் எடுத்துக்கொள்ளும் மிதமான அளவு காபி! பெண்களின் ஆரோக்கியத்தில் என்ன செய்யும் தெரியுமா? ஆய்வு சொல்வது என்ன?
தினசரி காபியை மிதமாக உட்கொள்வது, வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்ப்பது போன்ற பிற ஆரோக்கியமான நடத்தைகளுடன் சேர்ந்து, 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு பாதுகாப்பு நன்மைகளை வழங்கக்கூடும்

மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சியுடன் இருக்க காபி சிறந்த வழி! காபி குடிக்கும் பழக்கம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்போது, மிதமான காபி நுகர்வு (Healthy Aging) பெண்கள் ஆரோக்கியமாக வயதாக உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது ஆர்லாண்டோவில் நடந்த அமெரிக்க ஊட்டச்சத்து சங்கத்தின் வருடாந்திர ஊட்டச்சத்து 2025 கூட்டத்தில் வழங்கப்பட்ட ஒரு ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு
1984 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆய்வு, 45 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களின் உணவுப் பழக்கத்தை மதிப்பிட்டது. இந்த ஆய்வு கிட்டத்தட்ட 50,000 பெண்களிடமிருந்து பதிவுகளை பகுப்பாய்வு செய்தது. காலையில் ஒரு கப் காபி குடிப்பது, குறிப்பாக பெண்களுக்கு ஆற்றலை அதிகரிப்பதை விட அதிகமாகச் செய்யும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். காபி குடிக்கும் பழக்கத்தை நடுத்தர வயது வரை தொடர்வது, பெண்கள் வயதாகும்போது மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வலுவாக இருக்க உதவும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.