தோலுடன் சாப்பிட வேண்டிய 10 பழங்கள் என்ன தெரியுமா? அப்படி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தோலுடன் சாப்பிட வேண்டிய 10 பழங்கள் என்ன தெரியுமா? அப்படி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

தோலுடன் சாப்பிட வேண்டிய 10 பழங்கள் என்ன தெரியுமா? அப்படி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Priyadarshini R HT Tamil
Dec 27, 2024 10:44 AM IST

சில பழங்கள் நாம் தோலுடன்தான் சாப்பிடுகிறோம். அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

தோலுடன் சாப்பிட வேண்டிய 10 பழங்கள் என்ன தெரியுமா? அப்படி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
தோலுடன் சாப்பிட வேண்டிய 10 பழங்கள் என்ன தெரியுமா? அப்படி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

கொய்யா

கொய்யா பழத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. இதை நீங்கள் தோலுடன் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இதில் அதிகம் நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான மற்றும் உங்களுக்கு புத்துணர்வு தரும் ஒன்றாகும்.

அத்திப்பழம்

அத்திப்பழம் இனிப்பு சுவையானது. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை நீங்கள் அதன் தோலுடன் சாப்பிடவேண்டும். இதில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது ஒரு சுவைமிக்க மற்றும் முழுமையான ஸ்னாக்ஸ் ஆகும்.

ஆப்ரிகாட்

ஆப்ரிகாட்கள் சாறு மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இதை நீங்கள் தோலுடன் சாப்பிடலாம். இதில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள இனிப்புச் சுவை உங்கள் உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

மாம்பழம்

ஒரு மீடியம் அளவு மாம்பழத்தில் 1.7 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. 36 சதவீதம் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இது உங்களின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உங்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கிறது. சருமத்தை பாதுகாக்கிறது.

செரிகள்

செரிகள் சுவையானவை மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும். இதை நீங்கள் தோலுடன் அப்படியே சாப்பிடலாம். இது உங்களுக்கு நார்ச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்களைக் கொடுக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகும்.

பீச்

தோல் சாப்பிடுவது நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்களை அதிகம் கொடுக்கிறது. 100 கிராம் பீச் பழத்தில் 2 முதல் 3 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. மேலும் 10 முதல் 15 சதவீதம் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது.

பிளம்ஸ்

பிளம்ஸ் பழத்தில் உள்ள தோலில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. குறிப்பாக ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உங்கள் உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றன. மேலும் வீக்கத்தைப் போக்குகிறது. இது உங்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது உங்கள் செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது.

திராட்சைப் பழங்கள்

திராட்சைப் பழங்களில் தோலில் 1.4 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்கள் அன்றாட தேவையில் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உங்களுக்கு வீக்கம் ஏற்படாமல் குறைக்கிறது.

பேரிக்காய்

பேரிக்காயின் தோலில் நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் 3.1 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் அன்றாட வைட்டமின் சி சத்துக்கள் தேலையில் 5 முதல் 6 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது. இது உங்கள் ரத்த சர்க்கரை அளவை முறையாகப் பராமரிக்கவும், உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத்திறனையும் அதிகரிக்கிறது.

ஆப்பிள்

ஆப்பிளின் தோலில் அதிகளவில் நார்ச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளது. இது உங்கள் அன்றாட நார்ச்சத்து தேவையில் 2.4 கிராம் மற்றும் அன்றாட வைட்டமின் சி சத்துக்கள் தேவையில் 7 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. இது ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் இரண்டையுமே மேம்படுத்துகிறது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.