ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு பழம் சாப்பிடலாம் தெரியுமா.. அதிக பழம் சாப்பிடுவதால் இவ்வளவு பெரிய பிரச்சனை இருக்கா
பழங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதுதான். இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது முதல் செரிமான பிரச்சனைகள் வரை, அதிகப்படியான பழங்களை உட்கொள்வதால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள் இங்கே உள்ளன.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று ஒரு பழமொழி உள்ளது - இருப்பினும், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியமான உணவுப் பொருட்களாகக் கருதப்படுகின்றன, அவை உலகெங்கிலும் உள்ள சுகாதார நிபுணர்களால் வழக்கமான நுகர்வுக்காக பரிந்துரைக்கப்படுகின்றன. ஆனால் அதிக பழங்கள் சாப்பிடுவதில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? எது சரி,என்பதை விரிவாக பார்க்கலாம்.
HT லைஃப்ஸ்டைலுக்கு அளித்த பேட்டியில், ஜூபிடர் மருத்துவமனையின் மூத்த உணவியல் நிபுணரான டாக்டர். ஸ்வாதி சந்தன், “நீங்கள் விரும்பும் பழங்களை அதிகமாக சாப்பிடுவதற்கு முன், அதிக பழங்களை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதிகப்படியான பழம் சர்க்கரை எடை அதிகரிப்பு, நீரிழிவு நோய், கணையம் மற்றும் சிறுநீரக கோளாறுகள், பல் சிதைவை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. மேலும் வைட்டமின் பி 12, கால்சியம், வைட்டமின் டி மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் குறைபாடுகள் போன்ற உடல்நலக் கவலைகளுக்கு வழிவகுக்கும்.
எவ்வளவு அதிகம்?
ஒரு நாளைக்கு இரண்டு பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று டாக்டர் சுவாதி சந்தன் குறிப்பிட்டார். அதற்கு மேல் எதுவும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.