ஆரோக்கிய குறிப்புகள் : உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்தி சாப்பிடுகிறீர்களா? மருத்துவர் சொல்வதைக் கேளுங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  ஆரோக்கிய குறிப்புகள் : உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்தி சாப்பிடுகிறீர்களா? மருத்துவர் சொல்வதைக் கேளுங்க!

ஆரோக்கிய குறிப்புகள் : உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்தி சாப்பிடுகிறீர்களா? மருத்துவர் சொல்வதைக் கேளுங்க!

Priyadarshini R HT Tamil
Updated Apr 14, 2025 04:10 PM IST

ஆரோக்கிய குறிப்புகள் : இவரது குறிப்புகள் வீடுகளிலே பின்பற்ற ஏதுவானதாகும். இவர் அண்மையில் ஃபிரிட்ஜில் வைத்து மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத உணவுகளை பட்டியலிட்டுள்ளார்.

ஆரோக்கிய குறிப்புகள் : உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்தி சாப்பிடுகிறீர்களா? மருத்துவர் சொல்வதைக் கேளுங்க!
ஆரோக்கிய குறிப்புகள் : உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்தி சாப்பிடுகிறீர்களா? மருத்துவர் சொல்வதைக் கேளுங்க!

இதுகுறித்து டாக்டர் பிள்ளை கூறியிருப்பதாவது

ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடக் கூடாத உணவுகள்

உணவை ஃபிரிட்ஜில் வைத்து மீண்டும், மீண்டும் அதை சூடுபடுத்தி சாப்பிடும்போது அது விஷமாக மாறுகிறது. அது சாப்பிட்டவுடனே விஷமாகிவிடாது. ஸ்லோ பாய்சன் என மெதுவாக மெல்லக்கொல்லும் விஷமாக மாறும். நமது ஆரோக்கியத்தை குலைத்து ஆயுளைக் குறைக்கும். தேவையற்ற பல பிரச்னைகள் மற்றும் நோய்களை ஏற்படுத்தும்.

அடிக்கடி சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத உணவுகள்

1. நைட்ரேட் நிறைந்த உணவுகளை நாம் அடிக்கடி சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. அதில் கேரட், முள்ளங்கி மற்றும் கீரை ஆகியவை முதலிடம் பிடிக்கும். ஒருமுறை சமைத்துவிட்டால் அதை அந்த நேரமே காலி செய்துவிடவேண்டும். தேவையான அளவு மட்டுமே சமைத்துக்கொள்வது நல்லது.

2. சாதம், சாதத்தை நாம் ஃபிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடாக்கி சாப்பிடக்கூடாது. பேசிலஸ் பாக்டீரியாக்கள் ஒரு வகை கெமிக்கலை உற்பத்தி செய்து, அது மெல்லக் கொல்லும் விஷமாக மாறும் வாய்ப்பு உள்ளது. எனவே சாதத்தை ஒருமுறை வடித்தால் அதை ஆறினாலும் அப்படியேதான் சாப்பிடவேண்டும். ஜில்லென்று இருந்தால் கூட அதை அப்படியே சாப்பிடுவதால் ஒரு கெடுதலும் உடலுக்கு ஏற்படாது.

3. முட்டையில் அதிக நைட்ரஜன்கள் உள்ளது. முட்டை மிகச்சிறந்த புரத உணவு. இதை மீண்டும், மீண்டும் சூடுபடுத்தும்போது, அது விஷமாகிவிடும்.

4. சிக்கனை சமைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு, மீண்டும் சூடாக்கி சாப்பிடக்கூடாது. அதில் புரதம் அதிகம் உள்ளது. அது விஷமாகிவிடும். வயிற்றில் அஜீரணக்கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

5. கடல் உணவுகளையும் ஃபிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. குறிப்பாக இறாலை சூடுபடுத்தி சாப்பிடக் கூடாது. ஒரு சில வகை மீன்களையும் சமைத்து ஃபிரிட்ஜில் வைத்து மீண்டும், மீண்டும் சூடாக்கி சாப்பிடும்போது அது நஞ்சாகிறது. இது அனைத்தும் மிகவும் ஆபத்தானது ஆகும். எனவே இந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்து மீண்டும், மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீர்கள்.

இவ்வாறு டாக்டர் பிள்ளை தெரிவித்துள்ளார்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்படும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்று கூற முடியாது. எனினும் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே பகிரப்படுகிறது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்களுக்கு உதவலாம். எனவே அவற்றை பின்பற்றி பலன்பெறுங்கள். எந்த ஒரு குறிப்பையும் பின்பற்றி பலன் கொடுத்தால் அதை தொடருங்கள். இல்லாவிட்டால் குறிப்பிட்ட நிபுணரிடம் அறிவுரை பெறுவதுதான் சிறந்தது.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.