Fatty Liver : உங்களுக்கு ஃபேட்டி லிவர் பிரச்னைகள் உள்ளதா? இவைதான் அறிகுறிகள்! எச்சரிக்கையாக இருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Fatty Liver : உங்களுக்கு ஃபேட்டி லிவர் பிரச்னைகள் உள்ளதா? இவைதான் அறிகுறிகள்! எச்சரிக்கையாக இருங்கள்!

Fatty Liver : உங்களுக்கு ஃபேட்டி லிவர் பிரச்னைகள் உள்ளதா? இவைதான் அறிகுறிகள்! எச்சரிக்கையாக இருங்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 17, 2025 05:14 PM IST

ஃபேட்டி லிவர் இருந்தால் அதன் அறிகுறிகள் என்னவென்று பாருங்கள்.

உங்களுக்கு ஃபேட்டி லிவர் பிரச்னைகள் உள்ளதா? இவைதான் அறிகுறிகள்! எச்சரிக்கையாக இருங்கள்!
உங்களுக்கு ஃபேட்டி லிவர் பிரச்னைகள் உள்ளதா? இவைதான் அறிகுறிகள்! எச்சரிக்கையாக இருங்கள்!

தொடர் சோர்வு மற்றும் தலைசுற்றல்

உங்களுக்கு ஃபேட்டி லிவர் அதாவது கொழுப்பு கல்லீரல் உள்ளது என்பதன் ஆரம்ப அறிகுறியாக நீங்கள் கடுமையான மயக்கம் மற்றும் சோர்வை உணர்வீர்கள். உங்கள் உடலை சுத்திகரிப்பு செய்வதிலும், ஆற்றலைக் கொடுப்பதிலும் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. அது கெட்டுப்போகத் துவங்கும்போது, உங்களுக்கு நாள்பட்ட சோர்வு மற்றும் மயக்கம் ஏற்படும்.

வயிற்று வலி

உங்கள் வயிற்றின் மேல் புறத்தில் வலது பக்கத்தில் உங்களுக்கு வலி அல்லது அசவுகர்யங்களை ஏற்படுகிறதா என்பதைப் பாருங்கள் அல்லது வலது புறத்தின் கீழ்ப்பகுதியில் வீக்கம் உள்ளதா என்பதையும் பார்க்கவேண்டும். இந்த வலி உங்களுக்கு உணவு உட்கொண்டபின் குறிப்பாக அதிகரிக்கும். வழக்கத்தைவிட அது ஏற்படும்போது உங்களுக்கு ஃபேட்டி லிவர் உள்ளது என்று பொருள். நீங்கள் உடற்பயிற்சி செய்தாலும் அதிகரிக்கும்.

உடல் எடை அதிகரிப்பு

ஃபேட்டி லிவர் என்பது இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புகொண்டது. இதனால் உங்கள் உடலின் எடை அதிகரிக்கும். குறிப்பாக வயிற்றுப்பகுதியில் தொப்பை உண்டாகும். உங்கள் உடலில் கல்லீரல் சரியான மறையில் இயங்கவில்லையென்றால், அது உங்களின் வயிற்றில் உள்ள கொழுப்பை அதிகரிக்கும்.

சரும வியாதிகள்

ஹார்மோன்கள் குறைபாடுகளாலும் ஃபேட்டி லிவர் பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனால் சருமத்திலும் கோளாறுகள் ஏற்படும். முகப்பருக்கள் அல்லது சருமத்தில் கரும்புள்ளிகள் ஆகியவை ஏற்படுகின்றன. குறிப்பாக கழுத்தைச் சுற்றியும், கம்கட்டைகளிலும் சருமம் சுருங்குவது மற்றும் கருத்தல் ஏற்படுகிறது. மேலும் தலைமுடி உதிர்வதும் முக்கியமான அறிகுறியாகும். எனவே அனைத்து அறிகுறிகளும் ஒன்றாக ஏற்பட்டால் கவனத்துடன் இருக்கவேண்டும்.

பசியின்மை மற்றும் குமட்டல்

கல்லீரலில் அதிகம் கொழுப்பு சேர்ந்துவிட்டால், அது உங்களின் செரிமானத்தை பாதிக்கும். உங்களுக்கு குமட்டலை ஏற்படுத்தும். இதனால் பசியின்மை ஏற்பட்டு, உங்களால் சாப்பிட முடியாமல் போகும் நிலை உருவாகும். மேலும் இது உங்களின் அன்றாட சாப்பிடும் பழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.