வயிறு உப்புசமும், அசவுகர்யமும் அதிகமாக உள்ளதா? காலை எழுந்தவுடன் இந்த 9 விஷயங்கள் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வயிறு உப்புசமும், அசவுகர்யமும் அதிகமாக உள்ளதா? காலை எழுந்தவுடன் இந்த 9 விஷயங்கள் போதும்!

வயிறு உப்புசமும், அசவுகர்யமும் அதிகமாக உள்ளதா? காலை எழுந்தவுடன் இந்த 9 விஷயங்கள் போதும்!

Priyadarshini R HT Tamil
Dec 28, 2024 06:00 AM IST

வயிறு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதிகாலை நற்பழக்கங்கள் என்ன?

வயிறு உப்புசமும், அசவுகர்யமும் அதிகமாக உள்ளதா? காலை எழுந்தவுடன் இந்த 9 விஷயங்கள் போதும்!
வயிறு உப்புசமும், அசவுகர்யமும் அதிகமாக உள்ளதா? காலை எழுந்தவுடன் இந்த 9 விஷயங்கள் போதும்!

சூடான தண்ணீரை பருகவேண்டும்

காலையில் எழுந்தவுடனே நீங்கள் சூடான தண்ணீரை பருகவேண்டும். இது உங்களின் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கும். இது உங்களின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கும். சூடான தண்ணீர் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை அடித்து வெளியேற்றும். இது உங்கள் வயிற்றுக்கு இதம் தரும். இது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உங்களுக்கு நாள் முழுவதும் செரிமானம் நன்றாக இருக்கும். இதனால் உங்களுக்கு வயிறு உப்புசம் போன்ற பிரச்னைகள் ஏற்படாது.

நார்ச்சத்துக்கள் நிறைந்த காலை உணவு

காலையில் நீங்கள் உட்கொள்ளும் உணவு நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்ததாக இருக்கவேண்டும். அது ஓட்ஸ், பழங்கள், முழுதானியங்கள் என ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவும். நார்ச்சத்துக்கள், உங்கள் குடல் இயங்குவதை முறைப்படுத்தும். இது வயிறு உப்புசத்தைத் தடுக்கும். இது உங்களின் நாளை நன்றாகத் துவங்க உதவும்.

வெறும் வயிற்றில் காஃபியை தவிர்க்க வேண்டும்

நீங்கள் வெறும் வயிற்றில் காஃபி அல்லது டீ குடித்தால், அது உங்கள் வயிற்றில் உருவாகும் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். இது உங்கள் வயிற்றில் அசவுகர்யங்களுக்கு வழிவகுக்கும். எனவே காஃபி அல்லது டீ பருகும் முன் கொஞ்சம் தண்ணீர் பருகிவிட்டு, அடுத்து அதைப் பருகலாம். இது உங்கள் வயிற்றைப் பாதுகாக்கும். இது உங்களுக்கு காஃபைனால் ஏற்படும் பாதிப்பைப் போக்கும்.

ப்ரோபயோடிக் உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள்

யோகர்ட் அல்லது ப்ரோபயோடிக் சப்ளிமென்ட்களை காலை நேரத்தில் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ப்ரோபயோடிக்குகள் உங்கள் குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. இது செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உங்கள் வயிறின் அசவுகர்யங்களைப் போக்குகிறது. இது உங்கள் வயிறு உப்புசத்தைப்போக்குகிறது. உங்கள் குடலின் முறையற்ற இயக்கத்தைத் தடுக்கிறது.

மனஅழுத்தத்தைப் போக்க ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்

உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் வயிற்றில் அசவுகர்யங்கள் ஏற்படும். சில மணி நேரங்கள் நீங்கள் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் செய்யுங்கள். இதனால் உங்கள் உடல் மற்றும் மனம் இரண்டும் காலையில் இலகுவாகும். மனஅழுத்தத்தால் ஏற்படும் செரிமான கோளாறுகளைப் போக்குகிறது. இது ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

யோகா

யோகா செய்யும், உங்கள் உடலில் ரத்த ஓட்டம் மற்றும் செரிமான ஆரோக்கியம் இரண்டும் மேம்படும். இந்த பயிற்சிகள் உங்கள் வயிற்றில் உள்ள வாயு, உப்புசம் ஆகியவற்றைப்போக்கி, உங்கள் உடலை ஒரு சிறப்பான நாளுக்காக உங்களை தயார்படுத்துகிறது.

காலையில் ஆரோக்கியமான காலை உணவு சாப்பிடவேண்டும், எண்ணெய் உணவை தவிர்க்கவேண்டும்

காலையில் எழுந்தவுடன் செரிமானத்து சிரமமான அதிகமான, எண்ணெய் உணவுகளை சாப்பிடக்கூடாது. இவற்றை உட்கொண்டால் காலையில் செரிமான மண்டலம் மிகவும் சிரமப்படும். மேலும் இது வயிற்றில் அசவுகர்யங்களை ஏற்படுத்தும். எனவே நீங்கள் காலையில் எளிதில் செரிக்கக் கூடிய உணவுகளை சாப்பிடுங்கள். இது செரிமானத்தை எளிதாக்கும். பழங்கள், டோஸ்ட் அல்லது ஸ்மூத்திகளை சாப்பிடுங்கள். இது உங்கள் வயிற்றுக்கு இதமளிக்கும். உங்கள் செரிமானத்தை அதிகரிக்கும்.

உடலுக்கு தேவையான நீர்ச்சத்துக்கள்

உங்கள் உடலில் நீர்ச்சத்துக்கள் குறைந்தால், அது உங்களுக்கு செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். எனவே நாள் முழுவதும் உங்களின் செரிமான ஆரோக்கியம் அதிகரிக்க வேண்டுமெனில், காலையில் அதிகம் தண்ணீரைப் பருகுங்கள். இது உங்கள் செரிமானத்துக்கு உதவும். இது உங்கள் வயிற்றின் அசவுகர்யங்களைத் தடுக்கும். இது உங்கள் உடலில் நீர்ச்சத்துக்கள் குறைந்தால் வயிற்றில் அசவுகர்யங்கள் ஏற்படும்.

உங்கள் உணவை முறையாக திட்டமிடுங்கள்

உங்கள் காலை உணவில் சரியான அளவு புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் அதிகம் உள்ளது. அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். காலை உணவை தவிர்ப்பதையும் தவிர்க்கவேண்டும். இந்த பழக்கங்கள் உங்கள் செரிமான ஆரோக்கியத்துக்கு இடையூறு ஏற்படுத்தும். இது உங்களுக்கு அசவுகர்யங்களை ஏற்படுத்தும். எனவே நீங்கள் இந்த பழக்கங்களை தவிர்க்கவேண்டும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.