வீட்டில் கத்தரிக்காயும், புதினாவும் உள்ளதா? இதோ இப்படி ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபி செய்து அசத்துங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வீட்டில் கத்தரிக்காயும், புதினாவும் உள்ளதா? இதோ இப்படி ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபி செய்து அசத்துங்கள்!

வீட்டில் கத்தரிக்காயும், புதினாவும் உள்ளதா? இதோ இப்படி ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபி செய்து அசத்துங்கள்!

Priyadarshini R HT Tamil
Nov 12, 2024 11:08 AM IST

வீட்டில் கத்தரிக்காயும், புதினாவும் உள்ளதா? இதோ இப்படி ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபி செய்து அசத்துங்கள். கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

வீட்டில் கத்தரிக்காயும், புதினாவும் உள்ளதா? இதோ இப்படி ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபி செய்து அசத்துங்கள்!
வீட்டில் கத்தரிக்காயும், புதினாவும் உள்ளதா? இதோ இப்படி ஒரு லன்ச் பாக்ஸ் ரெசிபி செய்து அசத்துங்கள்!

கத்தரிக்காய் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு உள்ளவர்களும் கத்தரிக்காயை உணவில் அடிக்கடி எடுத்துக்கொள்ளக்கூடாது. மற்றபடி அனைவரும் வாரத்தில் ஒருமுறை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டிய காய்தான் கத்தரிக்காய்.

தேவையான பொருட்கள்

உதிரியாக வடித்த சாதம் – 2 கப்

பச்சை கத்தரிக்காய் – 8 (நீளவாக்கில் நறுக்கியது)

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)

புளி கரைசல் – ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

புதினா – அரைக்கட்டு

மல்லி – அரைக்கட்டு

பச்சை மிளகாய் – 4

பூண்டு – 6 பல்

செய்முறை

அரைக்க தேவையான பொருட்களை சுத்தம் செய்து, கழுவி மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் கடுகு, சீரகம் சேர்த்து பொரியவிடவேண்டும். அடுத்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக்கொள்ளவேண்டும். பின்னர் அரைத்த விழுது, நறுக்கிய தக்காளி, கத்தரிக்காய் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.

அடுத்து புளிக்கரைசல், உப்பு சேர்க்கவேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் வரை சுருளவதக்கவேண்டும். அடுத்து உதிராக வடித்து ஆறிய சாதத்தை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.

சூப்பர் சுவையான புதினா, கத்தரிக்காய் சாதம் தயார். இது ஒரு ஸ்பெஷல் லன்ச் பாக்ஸ் ரெசிபி என்றே கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதற்கு தொட்டுக்கொள்ள கூட்டு, பொரியல், வறுவல் அல்லது ரைத்தா கூட போதுமானது. ஊறுகாய், அப்பளம் கூட போதுமானதுதான். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிக்க நினைப்பீர்கள். எனவே கட்டாயம் முயற்சித்துப் பாருங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.