சாப்பிட்டவுடன் வயிற்றில் உப்புசம் ஏற்படுகிறதா? அதற்கான 9 காரணங்கள் இவைதான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சாப்பிட்டவுடன் வயிற்றில் உப்புசம் ஏற்படுகிறதா? அதற்கான 9 காரணங்கள் இவைதான்!

சாப்பிட்டவுடன் வயிற்றில் உப்புசம் ஏற்படுகிறதா? அதற்கான 9 காரணங்கள் இவைதான்!

Priyadarshini R HT Tamil
Jan 10, 2025 10:22 AM IST

சாப்பிட்டவுடன் வயிற்றில் உப்புசம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

சாப்பிட்டவுடன் வயிற்றில் உப்புசம் ஏற்படுகிறதா? அதற்கான 9 காரணங்கள் இவைதான்!
சாப்பிட்டவுடன் வயிற்றில் உப்புசம் ஏற்படுகிறதா? அதற்கான 9 காரணங்கள் இவைதான்!

ஃபேட்டி ஃபுட்ஸ்

அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொள்ளும்போது, அது உங்களுக்கு வயிறு உப்புசத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உங்கள் வயிற்றின் செரிமான ஆரோக்கியமும் குறைகிறது. உங்கள் வயிற்றில் நீண்ட காலம் தங்கும் உணவுகள், உங்களுக்கு வயிறு உப்புசத்தை ஏற்படுகிறது.

பால் பொருட்கள்

சிலருக்கு பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாது. அவர்களுக்கு எப்போதும் சாப்பிட்டவுடன் வயிறு உப்பியது போன்ற உணர்வு ஏற்படும். இதனால் நீங்கள் அதிகம் பால் பொருட்களை உட்கொள்ளவேண்டும். பால், சீஸ், யோகர்ட் போன்ற உணவுகளை சிலரின் உடல் சரியான செரிக்காது. இந்த லாக்டோஸ்கள் முறையாக செரிக்கப்படாமல் இருப்பதால் உங்களுக்கு வயிறு உப்புசம் ஏற்படுகிறது.

நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள்

செரிமானத்துக்கு மிகவும் தேவையானது நார்ச்சத்துக்கள்தான் என்றாலும், அதை நீங்கள் அதிகம் எடுத்துக்கொள்ளும்போது, குறிப்பாக இரவு உணவில் அதிக நார்ச்சத்துக்கள் இருக்கும்போது, அது வாயுத்தொல்லை மற்றும் வயிறு உப்புசத்தை ஏற்படுத்துகிறது. எனவே பீன்ஸ், முட்டைகோஸ் மற்றும் முழு தானியங்கள் இரவு உணவில் எடுத்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும்.

கார்பனேடட் பானங்கள்

சோடா போன்ற கார்பனேடட் பானங்களைப் பருகும்போது, அது உங்கள் உடலில் அதிகப்படியான வாயுவை உற்பத்தி செய்கிறது. இதனால், செரிமான ஆரோக்கியம் கெடுவதுடன், வயிறு உப்புசமும் ஏற்படுகிறது.

சோடியம் அதிகம் நிறைந்த உணவுகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சி, உப்புகள் அதிகம் நிறைந்த ஸ்னாக்ஸ் இவற்றில் சோடியம் அதிகம் இருக்கும். இது உங்கள் உடலில் தண்ணீரை தக்கவைக்கவும், உங்களுக்கு வயிற்றில் உப்புசம் ஏற்படாமலும் காக்கும்.

அதிகம் சாப்பிடுவது

அதிகம் சாப்பிடுவது உங்கள் செரிமான மண்டலத்தில் சிக்கலை ஏற்படுத்தும். மேலும் வயிறு உப்புசம் மற்றும் வயிற்றில் பல்வேறு அசவுகர்யங்களையும் போக்கும். இதனால் உங்கள் வயிறு எந்த வேலையையும் செய்ய முடியாமல் போகும். எனவே நீங்கள் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.

அதிக வேகமாக சாப்பிடுவது

நீங்கள் அதிக வேகமாக சாப்பிடும்போது, அதிக காற்றும் சேர்ந்து உங்கள் வயிற்றுக்குள் புகுந்துகொள்கிறது. இதனால் உங்களுக்கு வயிறு உப்புசம் மற்றும் வாயுத்தொல்லைகள் ஏற்படுகிறது.

உணவு ஏற்காமை

சிலருக்கு சில உணவுகள் ஏற்காமல் போகும். குளுட்டன் அல்லது சில காய்கறிகளை சிலர் சாப்பிட மாட்டார்கள். இதனால் உங்களுக்கு வயிறு உப்புசம் ஏற்படும்.

மனஅழுத்தம்

மனஅழுத்தம் மற்றும் பயம் இரண்டும் இருந்தால், உங்கள் உடலில் எண்ணற்ற பிரச்னைகள் ஏற்படும். இது உங்கள் செரிமான ஆரோக்கியத்தை பாதிக்கும். இது நீங்கள் இரவு உணவு சாப்பிட்டவுடன் வயிறு குறைவதை தாமதப்படுத்தும். எனவே நீங்கள் மன உளைச்சலில் இருக்கும்போது சாப்பிடக் கூடாது. இது உங்கள் நிலையை மோசமாக்கும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.