காலை காபி, டீயுடன் ஸ்னாக்ஸ் சாப்பிடுபவரா? அச்சச்சோ, ரத்தத்தில் என்ன நடக்கிறது பாருங்க!
காலையில் காபி மற்றும் டீயுடன் ஸ்னாக்ஸ் சாப்பிடும் பழக்கம் கொண்ட நபரா நீங்கள், உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அது அதிகரிக்கிறது. எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
காலையில் எழுந்தவுடன் காலி அல்லது டீ என சூடான பானம் குடிக்கும் பழக்கம் உள்ளவர் என்றால், அதனுடன் செய்யக்கூடாத பழக்கம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். காலையில் காபி அல்லது டீயுடன் நீங்கள் சில உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது. அது என்ன தெரியுமா? சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், இது உங்கள் ரத்த சர்க்கரை திடீரென உயர்த்தும் தன்மை கொண்டவையாகும். டீ, அதுவும் பிளக் டீயில் டேனின்கள் இருக்கிறது. இது இரும்புச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கும். இதை நீங்கள் சர்க்கரை அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும்போது உங்களுக்கு மேலும் மோசமாகிறது.
பராத்தா
காலையில் அல்லது எப்போதும் காபி அல்லது டீயுடன் நீங்கள் பராத்தாக்கள் எடுத்துக்கொண்டால், அது உங்களுக்கு செரிமான கோளாறுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக டீயில் உள்ள டேனின்கள் மற்றும் காபியில் உள்ள கபைன்கள் உங்கள் உடல் இரும்புச்சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்கிறது. இது இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது, அது மிகவும் அதிகப்படியானதாகிவிடுகிறது.
வெள்ளை பிரட்
வெள்ளை பிரட்டில் சுத்திகரிக்கப்பட்ட கார்பன் அதிகளவில் இருக்கும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தரும். இதை நீங்கள் டீ அல்லது காபியுடன் சேர்த்து பருகும்போது, நாள் முழுவதும் உங்களின் ஆற்றல் அளவைக் குறைக்கிறது.
சாக்லேட்
சாக்லேடை விரும்பாதவர்களே இருக்க முடியாது. ஆனால் சாக்லேட்டையும், டீயையும் சேர்த்து பருகும்போது, அது உங்களுக்கு நரம்புத் தளர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதற்கு சாக்லேட் மற்றும் டீ இரண்டிலும் உள்ள கஃபைன்தான். இந்த சேர்க்கை உங்கள் வயிற்றுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
அதிக சர்க்கரை கொண்ட தானியங்கள்
அதிக சர்க்கரை சேர்த்து எடுத்துக்கொள்ளப்படும் காலை உணவு தானியங்கள், இதில் அதிகளவில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை இருக்கும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை திடீரென உயரச் செய்யும். இது உங்கள் உடலுக்கு டீ தரும் ஆற்றலைக் கெடுக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்றாகும். இதை நீங்கள் தனியாக சாப்பிடலாம். ஆனால் டீ அல்லது காபியுடன் சேர்த்து சாப்பிடும்போது, வயிற்றுக்கு அதிக கனத்தைக் கொடுக்கிறது. குறிப்பாக நீங்கள் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்துகிறது. இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. மேலும் செரிமானத்தில் சில கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, கிரேப் ஃப்ரூட் போன்ற சிட்ரஸ் பழங்களில் அசிடிக் ஆற்றல் அதிகம் உள்ளது. இதை நீங்கள் டீ அல்லது காபியுடன் சேர்த்து சாப்பிடும்போது, அது உங்களுக்கு வாயுத்தொல்லை மற்றும் வயிறு அசவுகர்யங்களை ஏற்படுத்துகிறது. எனவே நீங்கள் இவற்றை காலை வெறும் வயிற்றில் காபி அல்லது டீயுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளக்கூடாது.
வறுத்த உணவுகள்
சிப்ஸ் போன்ற வறுத்த உணவுகள், முட்டை அல்லது இறைச்சி போன்ற செரிமான மண்டலத்துக்கு சிரமமான உணவுகள் அனைத்தையும் வெறும் வயிற்றில் டீ அல்லது காபியுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது, அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற பிரச்னைகளைக் கொடுக்கிறது. இது உங்களின் செரிமானத்தைத் தடுக்கிறது. உங்கள் வயிற்றுக்கு அசவுகர்யங்களைக் கொடுக்கிறது. இதை டீ அல்லது காபியுடன் எடுத்துக்கொள்வது நல்லதல்ல.
இட்லி
இட்லியும், டீ அல்லது காபியும் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். சூடான பானங்கள் ஏற்படுத்தும் அசிடிக் குணங்கள், உங்கள் குடலின் செரிமானத்தில் இடையூறை ஏற்படுத்தும். இது இட்லியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் உறிஞ்சுவதைத் தடுக்கும்.
கேக்குகள், பேக்கரி உணவுகள்
இவற்றில் அதிகளவில் சர்க்கரை மற்றும் கொழுப்புகள் உள்ளது. இது உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். டீ, குறிப்பாக கருப்பு டீயில் டேனின்கள் உள்ளன. இது உங்கள் உடல் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கச் செய்கிறது. இதை நீங்கள் சர்க்கரை உணவுகளுடன் அல்லது பேக் செய்யப்பட்ட உணவுகளுடன் எடுத்துக்கொள்ளும்போது, அது மிகவும் மோசமடைகிறது.
பால் பொருட்கள்
டீ, குறிப்பாக ப்ளாக் டீயை நீங்கள் பாலில் கலந்து பருகும்போது, அது உங்கள் உடல் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களை உறிஞ்சுவதைத் தடுக்கும். பால் பொருட்கள் சிலருக்கு வயிற்றில் உப்புசம் அல்லது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
தொடர்புடையை செய்திகள்