Compliments: கவனம்.. பாராட்டுகள் உங்களை சங்கடமாக உணர வைக்கிறதா.. ஏன் என்பது எண்ணயது உண்டா?
நமது எதிர்பார்ப்புகளை மிக அதிகமாக வைப்பது முதல் விமர்சனங்களுக்கு பழகுவது வரை, பாராட்டுகள் நம்மை சங்கடமாக உணர வைக்கலாம். அதற்கான சில காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மனிதருக்கும் அன்றாட வாழ்க்கை போக்கில் சின்னச் சின்ன பாராட்டுகளை பெரும்போது அவர்களது பணியின் ஊக்கம் அதிகரிக்கிறது. அதேபோல் நாமும் பல சின்னச்சின்ன விஷயங்களுக்கு கூட பிறரை பாராட்டுகிறோம். அப்படி பாராட்டும் போது பாராட்டும் நபருக்கும், பாராட்டை பெறக்கூடிய நபருக்கும் இடையே உள்ள உறவு மேலும் பலப்படுகிறது. பொதுவாக நாம் புதிதாக பார்க்கும் நபர்களை கூட சமையத்தில் பாராட்டுகிறோம். பொதுவாக உங்கள் உடை அழகாக இருக்கிறது. உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று கூட புதிய நபர்களிடம் சொல்லக்கூடிய சூழல் இருக்கலாம். இந்த பாராட்டு இரு தரப்பினருக்கும் இடையே அழகான நட்பு புரிதலுக்கு வழிவகுக்கிறது. சின்னச்சின்ன பாராட்டுதல்கள் வளரும் குழந்தைகளுக்கு பெரிய ஊக்கமாக அமையும் என்று பல ஆய்வு முடிவகள் கூறுகின்றனர். ஆனால் பாராட்டுதலை பெறுவதே சிலருக்கு கடினமான ஒன்றாக இருக்கலாம் என்று சொல்லப்படுவதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா? ஆம் அது குறித்து இங்கு பார்க்கலாம்.
தோற்றத்திற்காகவோ அல்லது நாம் தோற்றமளிக்கும் விதத்திற்காகவோ அல்லது நாம் நடந்து கொள்ளும் விதத்திற்காகவோ இருந்தாலும், பாராட்டுகள் நம் நாளை சிறப்பாக மாற்றும்.
நாம் நேசிப்பவர்களிடமிருந்து பாராட்டுக்களைப் பெறும்போது, நாம் மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் உணர்கிறோம். இருப்பினும், சில நேரங்களில், பாராட்டுகளைப் பெறுவதில் நாம் சிரமப்படலாம். "பலர் பாராட்டுக்களை ஏற்றுக்கொள்வதில் சிரமப்படுகிறார்கள்; பெரும்பாலும், பதட்டத்தின் எழுச்சியை உணரும்போது, பாராட்டை நிராகரிப்பது அல்லது கவனத்தை மாற்றுவதற்கு அல்லது மூடுவதற்கு ஒரு பாராட்டை மீண்டும் வழங்குவது பொதுவாக அனிச்சை செயலாகும்" என்று உளவியலாளர் எமிலி எச் சாண்டர்ஸ் எழுதினார். பாராட்டுகளைப் பெறுவது நமக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான சில காரணங்கள் இங்கே.