முறுக்கு இல்லாத தீபாவளியா? ஒரு மாதமானலும் மொறுமொறுப்பு குறையாமல் இருக்க இதோ டிப்ஸ்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  முறுக்கு இல்லாத தீபாவளியா? ஒரு மாதமானலும் மொறுமொறுப்பு குறையாமல் இருக்க இதோ டிப்ஸ்!

முறுக்கு இல்லாத தீபாவளியா? ஒரு மாதமானலும் மொறுமொறுப்பு குறையாமல் இருக்க இதோ டிப்ஸ்!

Priyadarshini R HT Tamil
Updated Oct 26, 2024 12:39 PM IST

முறுக்கு இல்லாத தீபாவளியா? ஒரு மாதமானலும் மொறுமொறுப்பு குறையாமல் இருக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் அரிசியை இப்படி செய்யவேண்டும். என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

முறுக்கு இல்லாத தீபாவளியா? ஒரு மாதமானலும் மொறுமொறுப்பு குறையாமல் இருக்க இதோ டிப்ஸ்!
முறுக்கு இல்லாத தீபாவளியா? ஒரு மாதமானலும் மொறுமொறுப்பு குறையாமல் இருக்க இதோ டிப்ஸ்!

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 2 கிலோ

புழுங்கல் அரிசி – 400 கிராம்

வெள்ளை உளுந்து – 200 கிராம்

உப்பு – தேவையான அளவு

வெண்ணெய் – கால் கிலோ

வெள்ளை எள் அல்லது கருப்பு எள் – 4 ஸ்பூன்

சீரகம் – 4 ஸ்பூன்

எண்ணெய் – தாராளமாக

செய்முறை

பச்சரிசியை கழுவி நன்றாக வெயிலில் காய வைத்துக்கொள்ளவேண்டும். புழுங்கல் அரிசி நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். நல்ல பொரியரிசி பதத்துக்கு வறுத்துக்கொள்ளவேண்டும். உளுந்தையும் கடாயில் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவேண்டும்.

நன்றாக காயவைத்த பச்சரிசி, வறுத்து ஆறவைத்த உளுந்து மற்றும் புழுங்கல் அரிசி மூன்றையும் சேர்த்து மெஷினில் அரைத்து எடுத்துக்கொள்வேண்டும்.

இந்த மாவில் வெண்ணெய், உப்பு, எள் மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக இடியாப்ப மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவேணடும்.

அடுத்து கடாயை அடுப்பில் வைத்து அதில் தாராளமாக எண்ணெய் சேர்த்துக்கொள்ளவேண்டும். அது நன்றாக சூடானவுடன், முறுக்கு அச்சில் மாவைபோட்டு, முறுக்குகளை பிழிந்து விடவேண்டும். அவற்றை இருபுறமும் திருப்பி பொன்னிறமாக வேகவிடவேண்டும். வெந்தவுடன், எடுத்து எண்ணெய் வடிகட்டியில் வைத்து எண்ணெய் வடிந்தவுடன் மொறுமொறு முறுக்கு சாப்பிடலாம்.

முறுக்கை இந்த அளவில், இந்த பக்குவத்தில் செய்தால், ஒரு மாதம் ஆனாலும் அதன் மொறுமொறுப்பும் குறையாது. கெட்டும்போகாது. ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டு சாப்பிடலாம்.

குறிப்பு

பொதுவாக பெருங்காயத்தூளை பரவலாக முறுக்கில் சேர்ப்பார்கள். ஆனால் அப்படி சேர்த்தால் முறுக்கு கடிக்க கடினமாக இருக்கும். வாயில் வைத்தவுடன் மொறுமொறுவென கரைந்து ஓடும் அளவுக்கு இருக்காது. பெருங்காயத்தூள் வாயு சேராமல் தடுப்பதற்காகத்தான் முறுக்கில் சேர்க்கப்படுகிறது. அரிசி மாவு ஏற்படுத்தும் வயிறு மந்தம் போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடுவதற்காகத்தான் சேர்க்கப்படுகிறது. ஆனால் முறுக்கை அது கடினமாக்கிவிடும் என்பதால், அதே வேலைக்கு, சீரகத்தை சேர்த்துக்கொள்ளலாம். சீரகம் வயிற்றுக்கு இதமளிக்கும். எண்ணெய் மற்றும் அரிசி மாவு ஏற்படுத்து வயிறு மந்தத்தைப்போக்க உதவும்.

புழுங்கல் அரிசியை வறுத்து போடுவதால்தான் இந்த முறுக்கு நீண்ட நாட்களுக்கு மொறுமொறுப்புடன் இருக்கிறது. வெண்ணெய்க்கு பதில் டால்டாவும் சேர்த்துக்கொள்ளலாம்.

இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே அரிய பல தகவல்கள் மற்றும் வித்யாசமான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.