தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Disaster Natural Disasters That Occur During Disasters Look How Dangerous

Disaster : பேரிடர்களின்போது ஏற்படும் இயற்கை சீரழிவுகள்! எத்தனை ஆபத்து என்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Feb 10, 2024 04:24 PM IST

Disaster : பேரிடர்களின்போது ஏற்படும் இயற்கை சீரழிவுகள்! எத்தனை ஆபத்து என்று பாருங்கள்!

Disaster : பேரிடர்களின்போது ஏற்படும் இயற்கை சீரழிவுகள்! எத்தனை ஆபத்து என்று பாருங்கள்!
Disaster : பேரிடர்களின்போது ஏற்படும் இயற்கை சீரழிவுகள்! எத்தனை ஆபத்து என்று பாருங்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

கசிவு ஏற்பட்ட 2 மணி நேரம் கழித்து கடல்வாழ் மீன்களும், நண்டுகளும் இறக்கத் தொடங்கின.

பெரியகுப்பம், சின்னகுப்பம் பகுதிகளில் நூற்றுக்கணக்கில் மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. கோரமண்டல் ஆலையின் பின்பக்க கதவு, தடுப்புசுவர்களுக்கு இடையில் மீன்கள் அதிகம் இறந்து கரை ஒதுங்கின.

ஆலையிலிருந்து கசிந்து வெளிவந்த அமோனியா வாயு கடல்நீருடன் வினைபுரிந்து அமோனியம் ஹைட்ராக்ஸைடாக மாறி pH அளவை அதிகரித்து, முதலில் சிறு, சிறு மீன்களுக்கு சிறிது நேரத்திலேயே பாதிப்பை ஏற்படுத்தி (மீன்களின் சுவாச உறுப்பான செவுள்களில் (Gills) பாதிப்பு ஏற்பட்டு, மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட்டும், மீன்களின் உடலினுள் அதிகமாக சென்ற அமோனியாவை மீன்கள் வெளியேற்ற முடியாமல், உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டும்) மீன்கள் இறக்கும்.

சிறுமீன்களை உணவாக உண்ணும் பெரிய மீன்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். மீன்களின் கண்கள், தோல், செவுள்களில் (Gills) பாதிப்பு அதிகம் ஏற்படும். அமோனியம் ஹைட்ராக்ஸைடு அதிகமாகும் போது நாளடைவில், pH அளவு கூடி, மீன்களின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

அரை கப் அளவு அமோனியம் ஹைட்ராக்ஸைடு 37 லட்சம் லிட்டர் நீரில் கரைந்தால் கூட சிலவகை மீன்கள் பெருமளவு பாதிக்கப்படும்.

ஆனால் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய நிபுணர் குழு அறிக்கையிலோ, 67.6 டன் அமோனியா கசிந்துள்ளதாக செய்தி உள்ளபோது மீன்களின் பாதிப்பு அல்லது உயிரிழப்பு அதிகம் இருக்கும்.

கடலின் கீழ் தளத்தில் (Sea bed) அமோனியாவின் அளவு முதல் கட்ட ஆய்வில் 49 மி.கிராம்/லிட்டர் என 10 மடங்கு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட (5 மி.கிராம்/லிட்டர்) அதிகமாக இருந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

பெருமளவு மீன்கள் இறந்ததால், மீன்களின் இறப்பிற்கு அமோனியா தான் காரணம் என்பதை ஆய்வுகள் (Autopsy) மூலம் உறுதிபடுத்த வேண்டும். அது நடந்ததா?

அறிவியல் கருத்துகளின்படி அமோனியா வாயுவின் அளவு 0.53-22.8 மி.கிராம்/லிட்டர் என இருந்தாலே மீன்களுக்கு பாதிப்பு ஏற்படும் என உறுதிபடுத்தப்பட்ட நிலையில் எண்ணூரிலோ அது 49 மி.கிராம்/லிட்டர் என அதிகமாக இருந்ததால், மீன்கள் மத்தியில் பாதிப்பு/இறப்பு அதிகமாக இருந்திருக்கும் என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

தமிழக மீன்வளத்துறை, எண்ணூர் பகுதியில் அமோனியா வாயுக்கசிவால் 9 குப்பங்களில், 19 வகையான 187 கிலோ மீன்கள் மட்டுமே 27,2023 அன்று (கசிவு நடந்தது 26, டிசம்பர், 2023 இரவு11.45 மணி) இறந்துபோயுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது பல கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புவதாக உள்ளது.

27, டிசம்பர்2023 அன்று 9 குப்பங்களின் கடற்கரையில் மொத்தமே 1,860 மீன்கள் செத்து கரை ஒதுங்கியதாக, Dr.எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி, ஆராய்ச்சிக்கழகம், பொன்னேரி, அறிக்கை கொடுத்ததாக மீன்வளத்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

நெட்டுக்குப்பம், கத்திவாக்கம், பெரியகுப்பம், எர்ணாவூர் குப்பம், பாரதியார் நகர் கடற்கரையில் அதிக மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதாக அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

Eels, barracuda, sea boss, red snappers, pomfrets, carrangids, flat fish போன்ற மீன்கள் இறந்து போயுள்ளதாக மீன்வளத்துறையின் அறிக்கையில் உள்ளது. இறந்த மீன்களின் சந்தை மதிப்பு ரூ.46,750 மட்டுமே என்ற செய்தியும் அறிக்கையில் உள்ளது.

மீன்கள் மட்டுமே மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ள நிலையில், கோரமாண்டல் உர உற்பத்தி நிறுவனத்தின் கவனக்குறைவால் அமோனியா வாயு கடலில் கசிந்து மீன்களுக்கு பாதிப்பு அல்லது இறப்பு நிகழ்ந்துள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டதுடன், அந்தப் பகுதியில் பிடிக்கப்பட்ட மீன்களை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுவதாகவும், எண்ணூர் பகுதி மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நண்டுகளின் இறப்பு கணக்கில் கொள்ளப்பட்டதா?

ஒரு நாள் மட்டும் தான் (27.12.23) மீன்கள் பாதிப்பு அல்லது உயிரிழப்பு நடந்ததா?

அமோனியம் ஹைட்ராக்ஸைடு காரணமாக நாளடைவில் ஏற்படும் மீன்களுக்கான பாதிப்பு கணக்கில் கொள்ளப்பட்டதா?

மீன்களின் பாதிப்பு அல்லது இறப்பை கணக்கிடும் போது உள்ளூர் மீனவர்களும் ஆய்வில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டதா?

பாதிக்கப்பட்ட உள்ளூர் மீனவர்களும் ஆய்வில் சேர்க்கப்பட்டால் மட்டுமே மீன்களுக்கு ஏற்பட்ட உண்மையான பாதிப்பு அல்லது இறப்பின் அளவை சரியாக கணக்கிட முடியும் என இருக்க, அதை அரசு நிர்வாகம் செய்ததா?

கடலுக்கடியில் உள்ள குழாய்களில் கசிவு ஏற்பட்டபின், குழாய்களில் உள்ள அமோனியா அளவை கோரமண்டல் உர உற்பத்தி நிறுவனம் வெளியே சொல்ல மறுத்து வருவதால், கசிந்த அமோனியா வாயுவின் உண்மை அளவை துள்ளியமாக கணக்கிட முடியுமா?

அறிக்கையின் படி 67.6 டன் அமோனியா வாயு கசிந்துள்ளது என இருக்க மீன்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு அல்லது இறப்பு அதிகம் இருக்க வாய்ப்புள்ளது.

எனவே, இதுபோன்ற தருணங்களில் பாதிக்கப்பட்ட மக்களும் ஆய்வில் பங்கேற்பதை அரசு மற்றும் நீதிமன்றங்கள் (தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உட்பட) உறுதிசெய்தால் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வந்து நீதி நிலைநாட்டப்படும்.

நன்றி – மருத்துவர் புகழேந்தி.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்