தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dirty Places At Home : கழிவறை அல்ல! அதைவிட கிருமிகள் நிறைந்த இடங்கள் உங்கள் வீட்டில் உள்ளன! எவை தெரியுமா?

Dirty Places at Home : கழிவறை அல்ல! அதைவிட கிருமிகள் நிறைந்த இடங்கள் உங்கள் வீட்டில் உள்ளன! எவை தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Jan 31, 2024 03:32 PM IST

Dirty Places at Home : கழிவறை அல்ல! அதைவிட கிருமிகள் நிறைந்த இடங்கள் உங்கள் வீட்டில் உள்ளன! எவை தெரியுமா?

Dirty Places at Home : கழிவறை அல்ல! அதைவிட கிருமிகள் நிறைந்த இடங்கள் உங்கள் வீட்டில் உள்ளன! எவை தெரியுமா?
Dirty Places at Home : கழிவறை அல்ல! அதைவிட கிருமிகள் நிறைந்த இடங்கள் உங்கள் வீட்டில் உள்ளன! எவை தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

நாம் அன்றாடம் பயன்படுத்தும் இடங்கள்தான் அவை. ஆனால் நாம் அவற்றில் கிருமிகள் இருக்கும் என்ற எண்ணமே இல்லாமல் இருக்கிறோம்.

நாம் அன்றாடம் பல்வேறு பொருட்களை பயன்படுத்துகிறோம். ஆனால் அவை சுத்தமாக இருந்ததாக என்பது குறித்து நாம் சிந்தித்திருக்கிறோமா? நாம் அன்றாடம் பயன்படுத்தும் எங்கெல்லாம் அதிக கிருமிகள் தங்குகின்றன என்பதை தெரிந்துகொண்டு அவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுங்கள். ஏனெனில் அவை உங்களின் கழிவறைகளைவிட கடும் மோசமாக உள்ளன.

சமையலறையில் பாத்திரம் துலக்கும் ஸ்பான்ச்கள்

சமையலறையில் நாம் பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்ச்களில் பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும். ஏனெனில் அவை துவாரங்கள் நிறைந்ததாக இருக்கும். அவற்றில் எல்லாம் எளிதாக சென்று பாக்டீரியாக்கள் தங்கிக்கொள்ளும். 

அதை முறையாக சுத்தம் செய்யாவிட்டாலோ அல்லது அவ்வப்போது அப்புறப்படுத்தாவிட்டாலோ அதிலிருந்து நச்சுக்கள் வெளியேற வாய்ப்புள்ளது. அதில் நுண்ணுயிர்கள் வளர்ந்து அது உங்கள் கழிவறையைவிட சமையலறையை மோசமானதாக்குகிறது.

நீங்கள் கைகளிலே வைத்திருக்கும் செல்போன்கள்

நீங்கள் மொபைல் போன்களை எப்போதும் கைகளிலே வைத்துக்கொண்டும், தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டே இருக்கிறீர்கள். ஆனால் எப்போதாவதுதான் சுத்தம் செய்கிறீர்கள். அதிலும் எண்ணிலடங்கா கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும். அதில் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் தங்கும் கூடாராமாக இருக்கும். 

நுண்ணுயிரிகளால் போன்கள் கடுமையாக மாசடைந்திருக்கும். ஏனெனில் தொடர்ந்து அவற்றை நமது கைகளில் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறோம். தொடர்ந்து நாம் பல்வேறு இடங்களை தொட்டுக்கொண்டே இருக்கிறோம்.

கம்ப்யூட்டர் கீ போர்ட்

நாம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கு கீ போர்டில் ஏகப்பட்ட பட்டன்கள் உள்ளது. அதில் துவாரங்களும் நிறைய உள்ளன. இவற்றில் கிருமிகள் சென்று எளிதாக தங்கிக்கொள்ளும். அதில் கிருமிகள் மட்டுமல்ல தூசிகளும் எளிதாக படியும். மேலும் அதையும் நாம் கைகளில் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறோம். எனவே நாம் பயன்படுத்தும் கீபோர்டிலும் எண்ணற்ற கிருமிகள் தங்குகின்றன. 

எனவே இவற்றை அன்றாடம் நாம் சுத்தம் செய்வது மிகவும் அவசியம். தூசிகள் சேராமல்விட வேண்டும். தூசிபடிந்தால்தான் அங்கு அதிகளவில் நுண்ணுயிரிகள் உருவாகின்றன. எனவே நாம் கைகளால் அடிக்கடி தொடும் பொருட்கள் அத்தனையும் நாம் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

ஹேண்ட் பேக்குகள் மற்றும் பர்ஸ்கள்

ஹேண்ட் பேக்குகள் மற்றும் பர்ஸ்களையும் நாம் எப்போதும் கைகளில் வைத்திருப்பதோடு பல்வேறு இடங்களிலும் வைக்கிறோம். அதிலும் கிருமிகள் அதிகளவில் தங்குவதற்கு வாய்ப்புள்ளது. நாம் வெளியே செல்லும்போது அவற்றை கைகளிலேயே வைத்திருக்கிறோம். 

எனவே இவற்றை அன்றாடம் சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவற்றில் பாக்டீரியாக்கள் தங்குவது மற்றும் அதிலிருந்து வேறு இடங்களுக்கு பரவுவது தவிர்க்கப்படும். முறையாக சுத்தம் செய்து பயன்படுத்தாவிட்டால், அவை உங்கள் கழிவறையை விட அதிக கிருமிகள் சேரும் இடமாக மாறும்.

டூத் பிரஷ் வைக்கும் ஹோல்டர்

பெரும்பாலும் நாம் டூத் பிரஷ்கள் வைக்கும் ஹோல்டர்களை நாம் பாத்ரூம்களில் வைத்திருப்போம். அதுவும் பாக்டீரியாக்கள் அதிகம் வந்து அமரும் இடமாக இருக்கும். அது அடைத்து வைக்கப்பட்ட சுற்றமாக இருக்கும் என்பதால் அங்கும் கிருமிகள் அதிகளவில் தங்கும். 

எனவே நீங்கள் உங்கள் வாய் மூலம் கிருமிகள் பரவுவதை தடுக்க அவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் அவற்றால் ஏற்படும் மாசு மற்றும் நோய் பரவல் தடுக்கப்படும்.

டிவி ரிமோட் கன்ட்ரோல்

டிவி ரிமோட் கன்ட்ரோலை நாம் அடிக்கடி எடுத்து உபயோகிக்கிறோம். எனவே அதிலும் பாக்டீரியாக்களும், வைரஸ்களும் தங்கலாம். அதன் பட்டன்களுக்கு இடையே துவாரங்கள் இருப்பதால் கிருமிகள் அதில் சென்று எளிதாக தங்கிக்கொள்ளும். இதை சுத்தப்படுத்துவதும் கடினம். இவையும் உங்கள் கழிவறைகளைவிட கிருமிகள் தங்கும் இடமாகும்.

சமையலறை சிங்க்

சிங்கில் வைத்துதான் நாம் அனைத்து பாத்திரங்களையும் சுத்தம் செய்கிறோம் என்பதால், அதையும் நாம் அவ்வப்போது சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். அதிலும் உணவு துகள்கள் அடைந்துகொண்டு, பாக்டீரியா கிருமிகளை ஏற்படுத்துகிறது. 

குறிப்பாக தண்ணீர் ஓடும் பகுதிகளில் தங்கும் உணவு துகள்களில் கிருமிகள் உருவாகிறது. எனவே இவற்றையெல்லாம் அவ்வப்போது கிருமி நாசினிகள் கொண்டு சுத்தம் செய்வது மிகவும் அவசியம். அப்போதுதான் அதில் கிருமிகள் தங்கி மாசுபாட்டை ஏற்படுத்தாது.

காய்கறிகள் நறுக்கும் போர்ட்கள்

நாம் காய்கறிகள் நறுக்க பயன்படுத்தும் போர்ட்கள் குறிப்பாக பச்சை கறியை நாம் வெட்டுவதற்கு பயன்படுத்தும் மரக்கட்டை போர்டுகளில் கிருமிகள் எளிதில் தங்கிக்கொள்ளும். அவை வெளியே செல்லாது. அதை நாம் நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். எனவே அவற்றை சுத்தமாக கழுவி நல்ல வெயிலில் வைத்து உலர்த்தினால்தான், அதில் உள்ள கிருமிகள் கொல்லப்படும்.

மேக்அப் பிரஷ்கள்

மேக் அப் பிரஷ்களை நாம் பயன்படுத்தும்போது அவற்றில் மேக் அப் கிரீம்கள் மற்றும் எண்ணெய்கள் தங்கிவிடுகின்றன. அதில் சருமத்தின் இறந்த செல்களும் இடம்பிடித்திருக்கும், அவற்றில் பாக்டீரியாக்கள் வந்து தங்கிக்கொள்ளும். அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது அது சரும பிரச்னைகளை ஏற்படுத்தும். 

எனவே அதை நீங்கள் வழக்கமாக சுத்தம் செய்துவிடவேண்டும். குறிப்பாக அவற்றை நீங்கள் நேரடியாக சருமத்தில் பயன்படுத்துகிறீர்கள் என்பதால் பாதுகாப்பு மிகவும் அவசியம். இல்லாவிட்டால் உங்கள் வீட்டிலேயே அதிக கிருமிகள் தங்கும் இடமாகத்தான் அது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

துண்டுகள்

நாம் பாத்திரங்களை துடைக்க, கைகளை சுத்தம் செய்ய என சமையலறையில் நிறைய துண்டுகளை பயன்படுத்துகிறோம். இவையும் கிருமிகளின் கூடாராம்தான். எனவே இவற்றை நாம் அடிக்கடி துவைத்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். 

இவை ஈரத்துடனும், உணவு துகள்களுடன் இணைந்திருப்பதால், இவற்றில் கிருமிகள் தங்குகின்றன. எனவே நீங்கள் நினைப்பதை விட அதிகளவு பாக்டீரியாக்கள் இவற்றில் தங்கும். எனவே இவற்றையெல்லாம் நாம் அவ்வப்போது சுத்தப்படுத்திக்கொண்டே இருந்தால்தான் வீட்டில் பாக்டீரியாக்கள் தங்காது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்