Top 9 Gardening Tips : வீட்டிலே புதினா செடிகள் வளர்க்க முடியும் தெரியுமா? தினமும் சட்னி, பிரியாணி, செய்து அசத்த இதோ வழி!
வீட்டில் புதினா செடியை வளர்க்கும் வழிகுளை தெரிந்துகொள்ளுங்கள்.
வீட்டிலேயே புதினா செடிகள் வளர்க்கும் விதத்தை தெரிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் பயன்படுத்தப்படும் முக்கியமான தாவரங்களுள் ஒன்று புதினா. இதை சட்னி, பிரியாணி என பல்வேறு உணவுகளில் மக்கள் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். இதை கழிவு நீக்க பானங்களிலும், குளிர் பானங்களிலும் கலந்து பருகுகிறார்கள். இது உடலுக்கு புத்துணர்வு தரும் மூலிகை மற்றும் செடியாகும். நீங்கள் இதை வீட்டிலேயே வளர்க்க முடியும். இதனால், நீங்கள் மார்க்கெட்களுக்கு சென்று வாங்கவேண்டிய தேவையில்லை. இதை நீங்கள் எப்படி வளர்க்கலாம் என்று பாருங்கள்.
விதையா? தண்டா?
முதலில் நீங்கள் விதையில் இதை வைத்து வளர்க்க விரும்புகிறீர்களா அல்லது தண்டில் வளர்க்க விரும்புகிறீர்களா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள். புதினா விதைகளையும் நீங்கள் வாங்கிகொள்ளலாம். அவை அதிக விலையும் கிடையாது. விதையாக தூவும்போது, நீங்கள் 2 அல்லது மூன்று மாதத்தில் வளர்க்கிறீர்கள். 20 நாளிலே முளைக்கத் துவங்கும்.
தொட்டி அல்லது கண்டைனர்
உங்களுக்கு பின்புறத்தில் தோட்டம் இல்லையென்றால், மண்ணில் விதைகளை நேரடியாக விதைக்காதீர்கள். ஏனென்றால், இது அடர்ந்து, படர்ந்து வளரக்கூடியதாகும். உங்கள் தோட்டம் முழுவதையும் ஆக்கிமித்துவிடும். எனவே இதை தொட்டிகளில் வளர்ப்பது நல்லது. மண் அல்லது பீங்கான் தொட்டிகளில் வளர்க்கலாம். அடியில் துவாரம் இருப்பதை பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள்.
மண் தேவை
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மண்தான் புதினாவை வளர்க்கப் பயன்படும். அதன் அமிலத்தன்மை 6 முதல் 7க்குள் இருக்கவேண்டும். எனவே மண், மணல், ஆர்கானிக் உரம், மண்புழு உரம், தேங்காய் நார் கழிவுகள், வேப்பம் புண்ணாக்கு என எடுத்து கலந்து மண்ணை தயார்படுத்துங்கள். இது தாவரம் நன்முறையில் செழித்து வளர உதவும்.
சரியான இடம்
புதினாவுக்கு அதிகளவிலான நேரடியான சூரியஒளி தேவையில்லை. இது தண்டு மற்றும் இலைகளை எரித்துவிடும். ஆனால் மிதமான சூரிய ஒளி தாவரம் வளர்வதற்கு தேவை. எனவே உங்கள் வீட்டில் தோட்டம் அல்லது பால்கனி அல்லது மொட்டைமாடி என எந்த இடத்தை தேர்ந்தெடுத்தாலும் அங்கு 3 முதல் 4 மணி நேரம் நேரடி சூரிய ஒளி கிடைத்தால் போதும். பின்னர் தொட்டியை ஏதேனும் மறைமுக சூரியஒளி கிடைக்கும் இடத்துக்கு மாற்றுங்கள்.
தண்டுகளை வைத்து புதினாவை வளர்ப்பது எப்படி?
இந்த குளிருக்கு புதினாவை எளிதாக வளர்க்கவேண்டுமெனில் தண்டுகளை வைத்து வளர்ப்பதுதான் சிறந்தது. கடைகளில் புதினா வாங்கிவிட்டு, அந்த இலைகளை பறித்துவிடவேண்டும். நல்ல வளர்ந்த புதினாவை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவேண்டும். அதில் சிறிது வேர்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதை மண்ணில்போட்டு வளர்க்கலாம்.
தண்ணீர் ஊற்றும் முறை
தினமும் ஒருமுறை தண்ணீர் ஊற்றினால் போதும். நீங்கள் தண்டுகளை நேரடியாக மண்ணில் நட்டுவைத்து வளர்க்கிறீர்கள் என்றால், தினமும் 3 மணி நேரம் நேரடி சூரிய ஒளி கொடுக்கவேண்டும். முதலில் புதிய இலைகள் வந்தவுடன், விளைச்சல் நன்றாகத் தெரியும். 15 முதல் 20 நாட்களிலே நல்ல வித்யாசம் தெரியும். தண்டுகள் நேரமாக வளர்வதை உங்களால் காண முடியும். இலைகள் வருவதையும் பார்க்கலாம்.
முதலில் கிளைகளை நறுக்கி திருத்தம் செய்வது
புதினா செடிகளை வளர்க்கும்போது, அதை அடிக்கடி களைகளை நீக்குவது மிகவும் முக்கியமாகும். ஆரம்ப காலத்தில் அது செடி நன்றாக அடர்ந்து படர்ந்து வளர அது மிகவும் அவசியம். 3 முதல் 4 நாட்களில் ஒவ்வொரு இலையாக நீங்கள் பல்வேறு செடிகளிலும் இருந்தும் பறிக்கவேண்டும். மேலும் மஞ்சள் நிற இலைகளையும் அகற்ற வேண்டும்.
இறுதி அறுவடை
40 முதல் 50 நாட்களில் இலைகள் பறிக்க தயாராகிவிடும். செடி நல்ல அடர்ந்து படர்ந்து காணப்படும். இது உங்கள் வீட்டில் ஒரு தரமான நறுமணத்தைப் பரப்பும். தண்டுகளின் மேலே இருந்து அறுவடை செய்துகொள்ளவேண்டும். கொஞ்சம் விட்டுவைத்தால் தான், மேலும் நன்றாக தாவரம் வளரும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்