தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Diarrhea Home Remedies : விடாமல் போகும் வயிற்றுப்போக்கை தடுத்து நிறுத்த வேண்டுமா? இதோ ரொம்பவே ஈசியான வழி!

Diarrhea Home Remedies : விடாமல் போகும் வயிற்றுப்போக்கை தடுத்து நிறுத்த வேண்டுமா? இதோ ரொம்பவே ஈசியான வழி!

Priyadarshini R HT Tamil
Jun 30, 2024 05:02 PM IST

Diarrhea Home Remedies : விடாமல் போகும் வயிற்றுப்போக்கை தடுத்து நிறுத்த வேண்டுமா? இதோ ரொம்பவே ஈசியான வழிகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள் .

Diarrhea Home Remedies : விடாமல் போகும் வயிற்றுப்போக்கை தடுத்து நிறுத்த வேண்டுமா? இதோ ரொம்பவே ஈசியான வழி!
Diarrhea Home Remedies : விடாமல் போகும் வயிற்றுப்போக்கை தடுத்து நிறுத்த வேண்டுமா? இதோ ரொம்பவே ஈசியான வழி!

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கு என்பது மலம் தண்ணீராக அல்லது கெட்டியாக அல்லாமல் கொழக்கொழவென போவது ஆகும். நமக்கு வயிற்றில் ஏதேனும் உபாதை அல்லது சாப்பிட்ட உணவை வயிறு ஏற்கவில்லை அல்லது சாப்பிட்ட உணவு நஞ்சாகி என பல காரணங்களால் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

வயிறில் தேவையில்லாமல் உள்ள பொருள்களை வயிறு கழிவாக வெளியேற்றுகிறது. அது மேலும் பிரச்னையை ஏற்படுத்தும்போம் அது வயிற்றுப்போக்காக மாறுகிறது. வயிற்றுப்போக்குடன், வாந்தி, மயக்கம், வயிற்று வலி மற்றும் எடையிழப்பு என பல்வேறு பிரச்னைகளும் ஏற்படும்.

நல்லவேளையாக இது ஓரிரு நாட்களில் குணமாகிவிடும். சில நாட்களை கடந்து செச்லாது. ஆனால் சில நாட்களைக் கடந்து ஒரு வாரத்திற்கு என அதிகரித்தால், அது வேறு ஏதாவது பிரச்னை என்று பொருள். இது வயிற்று எரிச்சல் அல்லது தொற்று அல்லது வீக்கம் தொடர்பான பிரச்னைகளாக இருக்கலாம்.

வயிற்றுப்போக்கின் அறிகுறிகள்

வயிறு வலி

வயிறு உப்புசம்

வாந்தி

மயக்கம்

காய்ச்சல்

ரத்தத்துடன் மலம் கழித்தல்

மலத்தில் சளி வெளியேறுவது

அடிக்கடி மலம் கழிப்பது ஆகியவை ஆகும்.

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?

பெரியவர்கள்,

இரண்டு நாளைக்கும் மேல் சரியாகாமல், தொடர்ந்து சென்றுகொண்டே இருந்தால்,

உடல் நீர்ச்சத்தை இழக்கும்போது,

வயிற்றில் வலி ஏற்படும்போது,

ரத்தம் கலந்து மலம் வெளியேறுவது அல்லது கருப்பாக மலம் வெளியேறுவது,

102 டிகிரிக்கு மேல் காய்ச்சல் ஏற்பட்டால்,

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு உடனடியாக நீரிழப்பை ஏற்படுத்தும். எனவே உங்கள் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு 24 மணி நேரத்திற்கு மேல் நிற்காமல் தொடர்ந்து சென்றுகொண்டேயிருந்தால், உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

நீர்சத்தை இழந்தால்,

102 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தால்,

மலத்தில் ரத்தம் அல்லது கருப்பாக மலம் கழித்தால்,

ஆனால் வயிற்றுப்போக்கு துவங்கியவுடனே நீங்கள் வீட்டில் சில வைத்திய முறைகளை பின்பற்றலாம். அவற்றில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

விடாமல்போகும் வயிற்றுப்போக்கை நிறுத்துவது எப்படி?

தேவையான பொருட்கள்

எலுமிச்சை பழச்சாறு – 4 ஸ்பூன்

தேன் – 2 ஸ்பூன்

எலக்காய் – 2

செய்முறை

ஏலக்காயின் உள்ளே உள்ள பருப்பை மட்டும் எடுத்து நசுக்கிக்கொள்ளவேண்டும். தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறில் அதை கலந்துவிடவேண்டும்.

விடாமல் வயிற்றுப்போக்கு சென்றுகொண்டே இருப்பவர்களுக்கு கொடுத்தால் போதும். அவர்களுக்கு வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

தேவையான பொருட்கள்

ஏலக்காய் – 2

பசும் பால் – கால் டம்ளர் (காய்ச்சாத பால்)

செய்முறை

ஏலக்காயின் விதைகளை மட்டும் நீக்கி, அதை பச்சை பசும்பாலில் கலந்து குடிக்கவேண்டும். இது குழந்தைகளுக்கு நல்ல பலன்களைத்தரும்.

இதுபோன்ற எளிய மருத்துவக்குறிப்புக்களை வீட்டிலேயே முதலில் முயற்சி செய்யலாம். அது முடியாதபோது மருத்துவரிடம் செல்லலாம். 

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.