Diabetes : எச்சரிக்கை.. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டிய 6 உலர் பழங்கள் இதோ..
Diabetes : நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், இந்த உலர் பழங்கள் ஊட்டச்சத்து நிறைந்ததாக இருந்தாலும் அவற்றை உங்கள் உணவில் சேர்க்கக்கூடாது. இந்த உலர் பழங்களை சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும் என்ற அச்சம் உள்ளது.
Diabetes : இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவு என்ற பெயர் வரும்போது, உலர் பழங்கள் கண்டிப்பாக சேர்க்கப்படுகிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்க சில உலர் பழங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என கூறப்படுகிறது அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.
இந்தியா நீரிழிவு நோயின் தலைநகர் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பலருக்கும் சர்க்கரை நோய் வந்தவுடன் வாழ்க்கை மாறுகிறது. சர்க்கரை நோயாளிகளை பொருத்தமட்டில் எடுக்கும் ஒவ்வொரு உணவிலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளையும் அளவோடுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் உணவோடு உரிய உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளும் பட்சத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். அதே போல் சர்க்கரை நோயாளிகள் சாக்லேட், கேக், உள்ளிட்ட இனிப்பு உணவுகளை தவிர்ப்பதோடு மட்டும் இல்லாமல் உலர் பழங்களை எடுத்துக்கொள்வதிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
உண்மையில், பல உலர் பழங்கள் செறிவூட்டப்பட்ட வடிவத்தில் இயற்கை சர்க்கரையைக் கொண்டிருக்கின்றன. இது உடலில் இரத்த சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கிறது. இது தவிர உலர் பழங்களில் கார்போஹைட்ரேட்டின் அளவும் அதிகம். எனவே, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரிக்க நீங்கள் விரும்பவில்லை என்றால், இந்த 8 வகையான உலர் பழங்களை உங்கள் உணவில் சேர்க்காதீர்கள்.
திராட்சை
திராட்சைப்பழத்தில் நிறைய ஊட்டச்சத்துக்கள் இருக்கலாம், ஆனால் நீரிழிவு நோய் வரும்போது, அதில் உள்ள அதிக அளவு இயற்கை சர்க்கரை இரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கும். எனவே, திராட்சையை சாப்பிடாமல் இருப்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது.
பேரிச்சம்பழம்
உண்மையில், நீரிழிவு நோயாளிகளுக்கு இயற்கையான இனிப்பை வழங்க பேரீச்சம்பழங்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, இதில் சர்க்கரையின் அளவு மிக அதிகம். இது திடீரென்று இரத்த குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது. சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் நோயாளிகள் பேரிச்சம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அத்திப்பழங்கள்
அத்திப்பழத்தில் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. அது உலர்ந்ததும், அதன் செறிவூட்டப்பட்ட வடிவம் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். எனவே, நீரிழிவு நோயில் அத்திப்பழம் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
குருதிநெல்லி
உலர் குருதிநெல்லி பெண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் சிறுநீர் தொடர்பான பல பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. ஆனால் நீங்கள் குருதிநெல்லியை அதிகமாக சாப்பிட்டால், அது உங்கள் சர்க்கரை அளவை அதிகரிக்கலாம், ஏனெனில் அது சர்க்கரை உட்கொள்ளலை அதிகரிக்கிறது.
ஆப்ரிகாட் மற்றும் பிளம்ஸ்
இந்த இரண்டு பழங்களும் உலர் பழங்களாக அதிக அளவில் உட்கொள்ளப்படுகின்றன. இவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை ஆனால் நீரிழிவு நோயாளிகள் இந்த உலர் பழங்களை தவறுதலாக சாப்பிடக்கூடாது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்