Diabetes : பொங்கலுக்கு தித்திக்கும் கரும்பு; நீரிழிவு நோயாளிகளுக்கும் இனிக்குமா? இதோ பக்கவிளைவுகள்!
சர்க்கரை நோயாளிகளுக்கும் பொங்கல் கரும்பு இனிக்குமா?

கரும்பு இல்லலாமல் பொங்கல் பண்டிகையா? அனைவரும் கரும்பு சாப்பிட விரும்புவார்கள். ஆனால் சர்க்கரை நோயாளிகள் என்ன செய்யவேண்டும். கரும்பு சாப்பிடலாமா அல்லது வேண்டாமா என்ற குழப்பம் உங்களுகக்கு இருக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் கரும்பு சாப்பிடலாமா? வேண்டாமா என்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு துண்டு கரும்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
ஆற்றல் 80 கலோரிகள், புரதம் இல்லை, கொழுப்பு இல்லை, கார்போஹைட்ரேட்கள் 21 கிராம், நார்ச்சத்துக்கள் 10 கிராம், இரும்புச்சத்துகள் 1.12 மில்லி கிராம், சோடியம் 1.16 மில்லி கிராம், மெக்னீசியம் 13.03 மில்லி கிராம், பொட்டாசியம் 150 மில்லி கிராம், பாஸ்பரஸ் 22.08 மில்லி கிராம், கால்சியம் 18 மில்லி கிராம், ரிபோஃப்ளாவின் 0.04 மில்லி கிராம், தியாமின் 0.03 மில்லி கிராம் உள்ளது. இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும்.
உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்கும். உடனடி ஆற்றலைத் தரும். நீர்ச்சத்து இழப்பைத் தடுக்கும். கல்லீரலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது. செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சிறுநீரக ஆரோக்கியத்தை தருகிறது. பாலியல் நோய்கள் மற்றும் சிறுநீரகத் தொற்றுக்களைப் போக்குகிறது. எலும்பை வலுப்படுத்துகிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது.
சர்க்கரை நோயாளிகள் கரும்பு சாப்பிடலாமா?
கரும்பு என்றாலே தித்திக்கும் அதன் சுவைதான் அனைவருக்கும் நினைவில் வரும். அதில் அதிகளவு சர்க்கரை இல்லாவிட்டாலும், கரும்பை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? வேண்டாமா என்ற குழப்பம் நிலவுகிறது. கரும்பில் இருப்பது இயற்கை சர்க்கரைதான். அதுவும் 70 முதல் 75 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. 10 முதல் 15 சதவீதம் நார்ச்சத்துக்கள் உள்ளது. கரும்பு பல்வேறு வியாதிகளை குணப்படுத்த உதவுகிறது.
எண்ணற்ற பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. சிறுநீரகக் கோளாறுகள், சிறுநீரகப் பாதை தொற்றுகள், மலச்சிக்கல் மற்றும் சருமத்தில் ஏற்படும் அலர்ஜிகள் போன்றவற்றைப் போக்குகிறது. இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. நச்சுக்களையும் உடலில் இருந்து அடித்த வெளியேற்றிவிடுகிறது. இது சிறுநீரகத்தின் இயக்கத்தை மேம்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் கரும்பு எடுத்துக்கொள்ளும்போது மருத்துவர்கள் அல்லது உணவியல் நிபுணர்களின் அறிவுரையின்பேரில் சாப்பிடவேண்டும்.
டைப் 2 டயபட்டீஸ் நோயாளிகள் கரும்பு சாப்பிடலாம் என்று சில உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் டைப் 1 டயபட்டீஸ் நோயாளிகள் கரும்பை அறவே தொடக்கூடாது என்று அவர்கள் கூறுகிறார்கள். கரும்பில் உள்ள அதிகப்படியான இயற்கை சர்க்கரை டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது பெரியபிரச்னைகளை ஏற்படுத்துவிதில்லை. இது உங்கள் உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகள் கரும்பை எப்போதும் அளவாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். நீரிழிவு நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். இது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும்.
கரும்பை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு முன்னர் தெரிந்துகொள்ளவேண்டியது என்ன?
சர்க்கரை அளவு எப்படி உள்ளது என்று பார்க்கவேண்டும். சரியான அளவு உணவு உட்கொள்ளவேண்டும். உடற்பயற்சியை வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும். மனஅழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவேண்டும். இவையனைத்தும் சரியாக இருக்கும்போது சர்க்கரை நோயாளிகள் கரும்பு சாப்பிடலாம்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்