Diabetes Home Remedy : தினமும் காலையில் இந்த ஒரு விதை மட்டும் சாப்பிடுங்க! எவ்வளவு அதிக சர்க்கரையும் குறையும்!
அந்த வகையில் இன்று நாம் சர்க்கரை நோய் மருந்தாகும் தேன் காய் குறித்து தெரிந்துகொள்ளலாம். இதை பயன்படுத்தி கட்டாயம் பலன்பெறுங்கள். நம் இயற்கையில் இருந்து கிடைக்கும் உணவுகளை வைத்து உடலின் ஆரோக்கியத்தை பேணலாம்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மாசுகள் உள்ளிட்டவற்றால் இன்று அனைத்து வகையான நோய்களும் அதிகரித்துவிட்டது. சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இளம் வயதினருக்கு கூட வந்துவிடுகிறது. அதனால் மருத்துவமனைகளையே தஞ்சம் என்று இருக்க வேண்டிய சூழலும், மாத்திரைகளே உணவாகவும் ஆகிவிட்டது.
இவற்றில் இருந்து விடுபட இயற்கையான முறைகள் நம்மிடம் நிறைய உள்ளன. ஆனால், அவை குறித்து நமக்கு அதிகம் தெரிவதில்லை. அவற்றையெல்லாம் தெரிந்துகொண்டால் நமது உடலை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும். அதுபோன்ற இயற்கை மருத்துவ குறிப்புகளை இங்கு தேர்ந்தெடுத்து வழங்கி வருகிறோம்.
அதிகளவு சர்க்கரை நோயால் அவதிப்படுகிறீர்கள் என்றால் இதை முயற்சி செய்தால் ஒரே வாரத்தில் பலன் தெரியத்துவங்கும்.
தேவையான பொருள்
தேன் காய்
(நாட்டு மருந்து கடைகள் மற்றும் ஆன்லைனில் இயற்கை அங்காடிகளில் கிடைக்கும்)
இதற்கு பெயர் தேன் காய். ஆனால் பாகற்காயைவிட கடுமையான கசப்பாக இருக்கும். இதை அப்படியே பயன்படுத்தக்கூடாது. அதற்கு மேலே ஒரு ஓடு இருக்கும். அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.
இந்த தேன்காயை காலை வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும். அதை அப்படியே மென்று சாப்பிடலாம் அல்லது அதை நுணுக்கி தண்ணீரில் கலந்தும் பருகலாம். இதை தொடர்ந்து 10 நாட்கள் மட்டும் சாப்பிட்டால் போதும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டாயம் குறையும். இதை சாப்பிட்டாலே போதும். நீங்கள் மற்ற எந்த உணவு கட்டுப்பாடோ எடுக்க தேவையில்லை.
தேன் காய் கிடைக்கவில்லையென்றால், தேன் கனி வில்லை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அது சிறிய உலர் திராட்சைபோல் இருக்கும். அதை காலை வெறும் வயிற்றிலும், இரவு உறங்கச்செல்லும் முன்னும் எடுக்க வேண்டும். இதை தொடர்ந்து சாப்பிட்டால் உங்களுக்கு நிச்சயம் பலன் அளிக்கும்.
நீங்கள் சர்க்கரை வழக்கமாக மாத்திரை, மருந்துகள் அல்லது ஊசிகள் எடுத்துக்கொள்பவர்கள் என்றால், தேன் காய்களை சாப்பிட்ட உடனே அவற்றை நிறுத்த வேண்டாம். இதை சாப்பிட்டு பலன் கிடைக்கிறதா என்று பாருங்கள். பின்னர் படிப்படியாக மாத்திரைகள் எடுப்பதை குறைத்துக்கொள்ளுங்கள். பின்னர் உங்கள் மருத்துவரின் அறிவுரையின்படி மருந்தை நிறுத்துங்கள்.
இது முழுக்க முழுக்க இயற்கை சார்ந்தது என்பதால், பக்கவிளைவுகள் எதுவும் கொடுக்காது. உடலுக்கு ஆரோக்கியமும் கொடுக்கும்.
சர்க்கரை ஆரம்பத்தில் உள்ளவர்கள் மாத்திரை, மருந்துகளின்றி இதை எடுத்துக்கொண்டாலே உங்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்