Diabetes Home Remedy : 300, 400 என எகிறும் சர்க்கரை அளவையும் எளிதில் கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ வழி!
Diabetes Home Remedy : 300, 400 என எகிறும் சர்க்கரை அளவையும் எளிதில் கட்டுப்படுத்த வேண்டுமா? அதற்கான வீட்டுத்தீர்வுகளை எண்ணிக்கொண்டிருக்கிறீர்களா? இதோ உங்களுக்கு உதவக்கூடிய குறிப்பு.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
உடலில் சர்க்கரை அளவு 300, 400, 500 என எகிறிக்கொண்டே செல்கிறதா? அதற்காக ஆங்கில மருத்துவம் எடுத்துக்கொள்ளித்தான் வேண்டும். அதனுடன் சேர்த்து இந்த வீட்டு மருத்துவமுறையையும் பின்பற்றினால் உங்களுக்கு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
நீரிழிவு நோய்
உடல் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்தும் அளவை பாதிப்பது சர்க்கரை நோய் என்ற அழைக்கப்படுகிறது. குளுக்கோஸ் உடலுக்கு ஆற்றலை வழங்கும் முக்கியமான ஆதாரம் ஆகும். இந்த ஆற்றலால்தான் தசைகள் உருவாகின்றன மற்றும் திசுக்கள் வளர்கின்றன. மூளைக்கும் முக்கியமான ஒன்றாகும்.
இதில் வகைகள் உண்டு. அனைத்து வகையிலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. அதிக சர்க்கரை, கடும் உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.
நாள்பட்ட சர்க்கரை வியாதிகள் டைப் 1 மற்றும் டைப் 2 என்று அழைக்கப்படுகின்றன.
சர்க்கரை நோயின் அறிகுறிகள்
நீரிழிவு நோயின் அறிகுறிகள், ரத்தத்தில் எவ்வளவு அதிகம் சர்க்கரை உள்ளதோ அதைப்பொறுத்து மாறுபடும். அதனால் அதன் வகைகளைப் பொறுத்து அறிகுறிகள் தோன்றினாலும், பொதுவான அறிகுறிகளாக கீழே கொடுக்கப்பட்டுள்ளவை உள்ளன.
வழக்கத்தைவிட அதிக தாகம்
அதிக முறைகள் சிறுநீர் கழிப்பது
முயற்சியின்றி திடீரென உயிரிழப்பது
சிறுநீரில் கீட்டோன்கள் இருப்பது.
(கிடோன்கள் என்பவை சதை மற்றும் கொழுப்பின் உடைந்த பாகமாகும். இவை உடலில் தேவையான அளவு இன்சுலின் இல்லாதபோது உடைகிறது)
சோர்ந்திருத்தல்
எரிச்சல் கொள்வது மற்றும் மனநிலையில் மாற்றம்
கண்கூச்சம் மற்றும் மங்கலாகத் தெரிவது
புண்கள் மற்றும் காயங்கள் தாமதமாக குணமடைவது
தொற்றுகள் அடிக்கடி ஏற்படுவது. குறிப்பாக பற்களின் ஈறுகள், சருமம் மற்றும் பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்படுவது.
இவையனைத்தும் சர்க்கரை நோயின் அறிகுறிகளாகும்.
சர்க்கரை வியாதியை குறைக்க உதவும் வீட்டுமுறை தீர்வு
தேவையான பொருட்கள்
கொய்யா இலை – 5
சீரகம் – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
ஆவரம்பூ – ஒரு கைப்புடி
அல்லது
ஆவரம்பூ பொடி – ஒரு ஸ்பூன்
செய்முறை
கொய்யா இலைகள், ஆவரம்பூ அல்லது அவரம்பூ பொடி, வெந்தயம், சீரகம் என அனைத்தையும் ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து கொதிக்கவிடவேண்டும். அது நன்றாக கொதித்து வந்தவுடன் அதை வடிகட்டி பருகவேண்டும்.
இதை சர்க்கரை நோயாளிகள் தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் பருகவேண்டும். காலையில் வெறும் வயிற்றிலும், இரவில் உறங்கச் செல்வதற்கு அரை மணி நேரம் முன்னரும் பருகவேண்டும். இது உங்களுக்கு சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
எண்ணற்ற வீட்டுமுறை தீர்வுகள் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க பின்பற்றப்படுகிறது. அதில் சிறிது நல்ல பலனை இந்த வீட்டு குறிப்பு தரும். எனவே பின்பற்றி பலன்பெறுங்கள்.
ஆனால் சர்க்கரை நோய் என்று வந்துவிட்டாலே, உணவு முறை மாற்றம், வாழ்வியல் முறை மாற்றம் மற்றும் போதிய உடற்பயிற்சி, உறக்கம் என அனைத்தையும் செய்யவது கட்டாயம். சர்க்கரை நோயாளிகள் மட்டுமல்ல 40 வயதை கடந்த அனைவருமே ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கு மாறிக்கொள்வது வாழ்வு சிறக்க உதவும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்