தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Diabetes Five Best And Worst Fruits

Diabetes Five Best and Worst Fruits:நீரிழிவுக்கு சிறந்த மற்றும் மோசமான 5 பழங்கள்

I Jayachandran HT Tamil
Jan 12, 2023 10:17 PM IST

நீரிழிவுக்கு சிறந்த மற்றும் மோசமான 5 பழங்கள் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

நீரிழிவுக்கு எந்த பழங்கள் ஏற்றவை
நீரிழிவுக்கு எந்த பழங்கள் ஏற்றவை

ட்ரெண்டிங் செய்திகள்

சாப்பிடுவது மற்றும் குடிப்பது என்று வரும்போது நீரிழிவு நோய் உங்கள் மீது ஆயிரக்கணக்கான கட்டுப்பாடுகளை விதிக்கிறது. பழங்களை உண்ணும் போதும் இந்த தடையை கவனிக்க வேண்டியது நல்லது. சில பழங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மேலும் பிரச்னைகளை ஏற்படுத்தும். இது குறித்த தகவல்கள் இதோ...

நீரிழிவு நோயாளிகள் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு பழத்தை சாப்பிடும் முன், எது நன்மை, எது தீமை என்று பத்து முறை யோசிக்க வேண்டும். சில பழங்கள் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கின்றன, சில பழங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகரித்து ஆபத்தை விளைவிக்கன்றன.

நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் அல்லது தீங்கு விளைவிக்கும் பழங்கள் என்றெல்லாம் வகைப்படுத்த முடியாது. அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள பழங்களை சிறிய அளவில் உட்கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு நாளில் 150-200 கிராம் பழங்களை உட்கொள்ளலாம். 100 கிராமுக்கு மேல் கிளைசெமிக் இண்டெக்ஸ் உள்ள பழங்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

அதிக கிளைசெமிக் இண்டெக்ஸ் கொண்ட பழங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். இது நோய்வாய்ப்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. ஆனால், குறைவாக சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பப்பாளி மற்றும் தர்பூசணி, இந்த ஐந்து பழங்களும் நீரிழிவு நோயாளிகளின் உடலுக்கு நன்மை பயக்கும். இந்த பழங்கள் ஒவ்வொன்றும் உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைப்பதில் சம அளவில் நன்மை பயக்கும்.

இந்த பழங்கள் ஒவ்வொன்றிலும் சோடியம், கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது. இதில் ஃபோலேட், டயட்டரி ஃபைபர், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் உள்ளது. நார்ச்சத்து உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைத்துக் கொள்ளும்.

மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சைப் பழங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. எனவே, அவற்றை சிறிய அளவில் சாப்பிடுவது நல்லது. இல்லையெனில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து உடல் நிலை மோசமடையலாம்.

WhatsApp channel