நீரிழிவு நோய் : நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை வர வாய்ப்புள்ளவர்கள்; இந்த டின்னர் சாப்பிடுங்க – கு.சிவராமன் கூறுவது என்ன?
நீரிழிவு நோய் : நீரிழிவு நோயாளிகள், சர்க்கரை வர வாய்ப்புள்ளவர்கள்; இந்த டின்னர் சாப்பிடுங்க – கு.சிவராமன் கூறுவது என்ன?

சர்க்கரை நோயாளிகள் அல்லது சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளவர்கள், இரவில் குறிப்பிட்ட சில உணவுகளை மட்டும் சாப்பிட்டால் நல்லது என்று மருத்துவர் கு.சிவராமன் கூறுகிறார். அது என்னவென்று பாருங்கள். அதில் முதலாவதாக அவர் கூறுவது சம்பா ரவை கிச்சடி உள்ளது அல்லது சிறுதானிய அடை அல்லது கோதுமை சப்பாத்தி மற்றுல் தால் சாப்பிடுங்கள் என்று மருத்துவர் கு. சிவராமன் கூறுகிறார். அதில் அவர் கூறும் கோதுமை ரவை கிச்சடியை செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
• கோதுமை ரவை – ஒரு கப்
• எண்ணெய் – ஒரு ஸ்பூன்
• நெய் – ஒரு ஸ்பூன்
• கடுகு – கால் ஸ்பூன்
• உளுந்து – கால் ஸ்பூன்
• கடலை பருப்பு – கால் ஸ்பூன்
• சீரகம் – கால் ஸ்பூன்
• இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
• பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
• பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
• புதினா – சிறிதளவு
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
• பிரியாணி மசாலா – கால் ஸ்பூன்
• உருளைக்கிழங்கு – கால் கப்
• பச்சை பட்டாணி – கால் கப்
• கேரட் – கால் கப்
• பீன்ஸ் – கால் கப்
• தக்காளி – 1
• உப்பு – தேவையான அளவு
• எலுமிச்சை பழச்சாறு – 2 ஸ்பூன்
• மல்லித்தழை – சிறிதளவு
செய்முறை
1. ஒரு கடாயில் கோதுமை ரவையை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். வறுத்து அதை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
2. கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவேண்டும்.
3. அடுத்து பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
4. அடுத்து பெரிய வெங்காயம் மற்றும் புதினா சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். இஞ்சி-பூண்டு விழுதில் பச்சை வாசம் போகவேண்டும்.
5. அடுத்து மஞ்சள் தூள், பிரியாணி மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதகக்வேண்டும். பின்னர் தக்காளி சேர்த்து நல்ல குழையும் அளவுக்கு மசித்து அரைத்துக்கொள்ளவேண்டும்.
6. அடுத்து பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அனைத்தும் வதங்கியவுடன் போதிய அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
7. அனைத்தும் கொதித்து, காய்கறிகள் வெந்து வந்தவுடன், கோதுமை ரவையை சேர்த்து கிளறவேண்டும். அது வெந்தவுடன் மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையான கோதுமை ரவை கிச்சடி தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி அல்லது தக்காளி சட்னி அல்லது சாம்பார், மேலும் அனைத்து வகை சட்னிகளும் நன்றாக இருக்கும்.
உங்கள் வீட்டில் சர்க்கரை நோயாளிகள் அல்லது சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளவர்கள் இருந்தால், அவர்களுக்கு இந்த விஷயத்தை தெரியப்படுத்தி, அவர்களின் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ உதவுங்கள்.

டாபிக்ஸ்