Diabetes Care : சர்க்கரை நோயால் அவதியா? கோதுமைக்கு பதில் என்ன சாப்பிடலாம்? இதோ ஆலோசனை!
Diabetes Care : சர்க்கரை நோயால் அவதியா? கோதுமைக்கு பதில் என்ன சாப்பிடலாம்? இதோ ஆலோசனை!

அவர்களுக்கு தேர்வுகள் குறைவாகவே இருக்கும். பெரும்பாலும் கோதுமை மாற்றாக கருதப்பட்டாலும், அவர்கள் வேறு சில மாவுகளையும் உட்கொண்டு பயன்பெற முடியும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக பராமரிக்க கோதுமைக்கு உள்ள மாற்று உணவுகளை தெரிந்துகொள்ளுங்கள்.
கோதுமையில் சர்க்கரை உள்ளதா?
கோதுமையிலும் சர்க்கரை உள்ளது. ஆனால் குறைவான அளவே உள்ளது. அதாவது மற்ற கார்போஹைட்ரேட் உணவுகளைவிட 2 கிராம் அளவே உள்ளது. ஆனால் கோதுமைக்கும் மாற்றாக உள்ள உணவுப்பொருட்களையும் தெரிந்துகொண்டு அவற்றையும் பயன்படுத்தி நீரிழவு நோயை வெல்லலாம்.
ஓட்ஸ்
ஓட்ஸில், 1 சதவீதம் சுக்ரோஸ் உள்ளது. ஆனால் அதில் அதிக நார்ச்சத்துக்களும், ஊட்டசத்துக்களும் உள்ளது. இதில் சாச்சுரேடடட் மற்றும் டிரான்ஸ் கொழுப்பு இரண்டுமே குறைவு. சர்க்கரையும் குறைவாக உள்ளதால், இது ரத்தத்தில் ஆரோக்கியமான சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.
பக்வீட் எனப்படும் மரகோதுமை
பக்வீட் அல்லது அனாஜ் என்று இந்தியில் அழைக்கப்டுகிறது. இது மரகோதுமை என்று தமிழில் அழைக்கப்படுகிறது. இதில் அதிக கலோரிகள் உள்ளது. முன்னதாகவே தயாரித்த பக்வீட்கள் சந்தையில் கிடைக்கும். அது அதிக கலோரிகள் நிறைந்தது. ஆனால் இதை வீட்டிலேயே உங்களால் தயாரிக்க முடியும். அது எளிதானதும் கூட. அதை சாப்பிட்டு ஏற்படும் விளைவுகளை பாருங்கள்.
குயினோவா
இது குளுட்டன் இல்லாத, ஒரு தானியம், இதில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் மற்றும் புரதம் உள்ளது. இது லோ கிளைசமிக் உணவுப்பட்டியலில் உள்ளது. இது கோதுமைக்கு சிறந்த மாற்றாக உள்ளது.
பிரவுன் அரிசி
பிரவுன் அரிசியில் உள்ள தவிட்டில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. இது செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதனால் உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டு, நீங்கள் நீண்ட நேரம் எந்த உணவையும் எடுத்துக்கொள்ளமால் இருப்பதால் எடை மேலாண்மையும் செய்யப்படுகிறது.
பாதாம் மாவு
அரைத்த பாதாம் மாவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் கார்போஹைட்ரேட்கள் குறைவாக உள்ளது. இது ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது.
தேங்காய் மாவு
இது தென்னிந்தியாவில் மட்டும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. காய வைத்த தேங்காயில் குளுட்டன் குறைவாக உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது மற்றும் இதில் கார்போஹைட்ரேட்களும் குறைவாக உள்ளது.
கொண்டைக்கடலை மாவு
கொண்டடைக்கடலையை அரைத்து தயாரிக்கப்படுவது கொண்டைக்கடலை மாவு. கொண்டைக்கடலை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த உணவு என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இந்த மாவையும் நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தலாம்.
ஸ்பெல்ட் மாவு
கோதுமைக்கு மாற்றான ஒன்று. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக பராமரிக்கிறது. இது கொஞ்சம் இனிப்பு சுவையானது.
மேலே கூறப்பட்ட அனைத்து பொருட்களிலும் இருந்தும் தயாரிக்கப்பட்ட மாவு கோதுமை மாவுக்கு ஏற்ற சரியான மாற்று ஆகும். இதில் எதை வேண்டுமானாலும் சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தலாம். இதனால் அவர்கள் உடலில் சர்க்கரையின் அளவு முறையாக பராமரிக்கப்படும்.

டாபிக்ஸ்