Diabetes: சர்க்கரை நோயாளிகள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா.. தினமும் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை பாருங்க
Diabetes : நீரிழிவு நோயாளிகள் பேரிச்சம்பழம் எடுத்துக்கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று பழங்கள் சாப்பிடுவதால் பிரச்சனைகள் ஏற்படாது. பேரிச்சம்பழத்தில் உள்ள கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவு . நார்ச்சத்து அதிகம் உள்ளதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனடியாக உயர்த்தாது.

Diabetes சர்க்கரை நோய் இந்த வார்த்தையை கேட்டாலே பயம் தொற்றும் வகையில் அங்கிங்கெனாதபடி அனைத்து வீடுகளிலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்கின்றனர். இந்தியா நீரிழிவு நோயின் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் இன்று அனைத்து வீடுகளில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளுக்கு தனி கவனம் செலுத்துவது அவசியமாகிறது.
ஏனென்றால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில உணவுகளை உண்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதனால் உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இப்படி சர்க்கரை நோயாளிகள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.
பேரிச்சம்பழம் என்றாலே சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாது என்று பொதுவாக சொல்லப்படுகிறது. ஆனால் பேரிச்சம்பழத்தில் ஏராளாமான நன்மைகள் உள்ளன.