Diabetes : நீரிழிவு நோயாளியா? உங்கள் இதயத்தை காக்க உதவுவதாக கூறப்படும் 7 விஷயங்கள்! என்ன பாருங்கள்?
Diabetes : நீரிழிவு நோயாளியாளிகளின் இதயத்தை காக்க உதவுவதாக கூறப்படும் 7 விஷயங்கள் என்னவென்று பாருங்கள்.

Diabetes : உங்கள் இதய ஆரோக்கியத்தை காக்க நீங்கள் செய்ய வேண்டிய முயற்சிகள் என்ன? நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் உங்கள் இதய ஆரோக்கியத்தை காக்க என்ன செய்யவேண்டும், உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே அதற்கு தேவையான நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ளவேண்டும். உங்கள் இதய ஆரோக்கியத்தை காக்க நீங்கள் இந்த 7 விஷயங்களை பின்பற்றவேண்டும் என்றும் கூறப்படுகிறது.
சரியான உடல் எடை
அதிகப்படியான உடல் எடை, குறிப்பாக, உங்கள் வயிற்றுப்பகுதியைச் சுற்றிச் சேரும் அதிகப்படியான கொழுப்புகள், உங்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. நீங்கள் உங்கள் எடையை 5 முதல் 10 சதவீதம் குறைத்தாலே உங்களுக்கு ஏற்படும் இதய ஆபத்துக்கள் குறையும் என்றும், உங்கள் குளுக்கோஸ் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
உடற்பயிற்சியை வழக்கமாக்குங்கள்
ரத்த அழுத்தத்தை குறைக்கவேண்டுமெனில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கவேண்டும். அது உடல் எடையையும் குறைக்க உதவும். இன்சுலின் சென்சிட்டிவிட்டியையும் அதிகரிக்கிறது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. எனவே தினமும் ஒன்றரை மணி நேரம் நீங்கள் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும். நடைப்பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி என எதுவாக வேண்டுமானாலும் அது இருக்கலாம்.
ஆரோக்கியமான உணவுப்பழக்கம்
முழு தானியங்களையும், புரதங்களையும், ஃபிரஷ்ஷான பழங்களையும், ஆரோக்கியமான கொழுப்புக்களையும், நட்ஸ்கள், ஆலிவ் ஆயில் என உணவுகளை உட்கொள்ளவேண்டும். சாச்சுரேடட் கொழுப்புகள், டிரான்ஸ் கொழுப்புகள், சோடியம் மற்றும் சர்க்கரை என உங்கள் உடல் ஆரோக்கியத்தை குலைக்கும் உணவை கட்டாயம் தவிர்க்கவேண்டும். இவை உடல் ஆரோக்கியத்தையும், ரத்த சர்க்கரை அளவையும் முறையாகப் பராமரிக்க உதவுகிறது.
மனஅழுத்தத்தைக் குறைக்கிறது
இதய ஆரோக்கியத்தை குலைப்பதில் மனஅழுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதை முறைப்படுத்துவதற்கும் எதிராக செயல்படுகிறது. எனவே மனஅழுத்தத்தை போக்கும் விஷயங்களான தியானம், ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி மற்றும் யோகா ஆகிய பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளவேண்டும். இது உங்களின் மனம் மற்றும் உடல் இரண்டையும் நன்முறையில் இயங்க உதவுவதாக கூறப்படுகிறது.
ரத்தச் சர்க்கரை அளவு
உங்கள் ரத்த சர்க்கரை அளவை நீங்கள் கட்டுக்குள் வைக்கும்போது அது ரத்த நாளங்களில் உள்ள சேதத்தைத் தடுக்கிறது. இதனால், இதய நோய்கள் மற்றும் சிக்கல்கள் ஏற்படாமல் காக்கிறது.
புகைபிடித்தலை நிறுத்தவேண்டும்
இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை புகை பிடிக்கும் பழக்கம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனுடன் நீரிழவு நோயாளிகளாகவும் நீங்கள் இருந்தால் அது மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது. நீங்கள் புகைபிடித்தலை கைவிடும்போது அது உங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.
ரத்த அழுத்தத்தை குறைக்கவும், கொழுப்பை கட்டுப்படுத்தவும் வேண்டும்
நீரிழிவு நோயாளிகளுக்கு, அடிக்கடி ரத்த அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் கொழுப்பு அளவுகளும் உயரும் வாய்ப்பும் உள்ளது. எனவே நீங்கள் சரியான கால அளவில் மருத்துவ பரிசோதனைகளையும், தேவையான மருந்துகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். சில வாழ்வியல் முறை மாற்றங்களும் உங்கள் உடலை நன்முறையில் பாதுகாக்க உதவும். உங்கள் இதயத்தில் அழுத்தத்தைக் குறைக்கும்.
வழக்கமான மருத்துவ பரிசோதனை
உங்களுக்கு நீரிழவு நோய் மற்றும் இதய நோய்கள் என அனைத்தையும் கட்டுக்குள் வைக்கவும், மேலும் உடலின் ஆரோக்கியத்தைப் பேணவும், உங்களுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் உதவும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு தேவையான மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்