Detox Your Liver : உங்கள் கல்லீரலில் உள்ள அழுக்குகளை நாலே நாளில் அடித்து விரட்ட வேண்டுமா? இது மட்டும் ஒரு கப் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Detox Your Liver : உங்கள் கல்லீரலில் உள்ள அழுக்குகளை நாலே நாளில் அடித்து விரட்ட வேண்டுமா? இது மட்டும் ஒரு கப் போதும்!

Detox Your Liver : உங்கள் கல்லீரலில் உள்ள அழுக்குகளை நாலே நாளில் அடித்து விரட்ட வேண்டுமா? இது மட்டும் ஒரு கப் போதும்!

Priyadarshini R HT Tamil
Updated Jul 14, 2024 12:44 PM IST

Detox Your Liver : உங்கள் கல்லீரலில் உள்ள அழுக்குகளை நாலே நாளில் அடித்து விரட்ட வேண்டுமா? அதற்கு கிரீன் ஆப்பிளை வைத்து செய்யப்படும் இந்த பானத்தை 4 நாட்கள் பருகினால் போதும். என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

Detox Your Liver : உங்கள் கல்லீரலில் உள்ள அழுக்குகளை நாலே நாளில் அடித்து விரட்ட வேண்டுமா? இது மட்டும் ஒரு கப் போதும்!
Detox Your Liver : உங்கள் கல்லீரலில் உள்ள அழுக்குகளை நாலே நாளில் அடித்து விரட்ட வேண்டுமா? இது மட்டும் ஒரு கப் போதும்!

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

கல்லீரல் ஆரோக்கியம்

நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். ஆனால் இதயம், நுரையீரல், மூளை ஆகியவற்றைதான் மருத்துவ உலகம் முக்கியமான உறுப்பாக கூறும்.

ஆனால், கல்லீரல்தான் உண்மையில் நமது உடலின் முக்கிய பாகம். அது உடலில் பல்வேறு வேலைகளை செய்து நமது உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உதவுகிறது.

இது உடலுக்கு கிடைக்கும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவை பராமரித்து, ரத்தம் உறைதலை முறைப்படுத்தி, உடலுக்கு தேவையான பல்வேறு முக்கிய பணிகளை செய்கிறது. இது உடலின் வலது புறத்தில் வயிற்றுப்பகுதியில் உள்ளது.

நமது உடலில் கல்லீரல் 500க்கும் மேற்பட்ட வேலைகளை செய்கிறது. ரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

தேவையான பொருட்கள்

கிரீன் ஆப்பிள் – 1

இஞ்சி – 15 கிராம் (தோல் நீக்கி துருவியது)

பட்டை – 2 துண்டு

எலுமிச்சை – 1

ரோஸ்மேரி – ஒரு ஸ்பூன்

தேன் – 2 ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கிரீன் ஆப்பிள், இஞ்சி, பட்டை, எலுமிச்சை பழம் மற்றும் ரோஸ்மேரி ஆகிய அனைத்தையும் அப்படியே முழுதாக நறுக்கி சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும்.

கிரீன் ஆப்பிளில் உள்ள மாலிக் அமிலம் உங்கள் கல்லீரலில் உள்ள அழுக்கு மற்றும் நச்சுக்களை அகற்றும் தன்மைகொண்டது.

கிரீன் ஆப்பிளுடன் மற்ற பொருட்களை சேர்த்து கொதிக்கவிடும்போது, அது ரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. மருந்துகளை உட்கொள்வதால் உங்கள் ரத்தத்தில் சேரும் அழுக்குகளை இந்த பானம் போக்குகிறது. இது உங்கள் கல்லீரலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

இதை கொதிக்கவிட்டு, வடிகட்டி அதில் தேன் கலந்து அல்லது கலக்காமலும் பருகலாம். இதை நீங்கள் செய்யும்போது நீங்கள் மருத்துவமனை செல்லவேண்டிய தேவையே இருக்காது. மேலும் உங்கள் உடலுக்கு சுறுசுறுப்பையும் இந்த பானம் வழங்கும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.