Detox Symptoms : உங்கள் உடலுக்கு எப்போது கழிவு நீக்கம் தேவை? அதற்கான அறிகுறிகள் இவைதான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Detox Symptoms : உங்கள் உடலுக்கு எப்போது கழிவு நீக்கம் தேவை? அதற்கான அறிகுறிகள் இவைதான்!

Detox Symptoms : உங்கள் உடலுக்கு எப்போது கழிவு நீக்கம் தேவை? அதற்கான அறிகுறிகள் இவைதான்!

Priyadarshini R HT Tamil
Published May 03, 2024 02:32 PM IST

Detox Symptoms : உங்கள் உடலுக்கு கழிவுநீக்கம் தேவை என்பதற்கான அறிகுறிகள் இவைதான்.

Detox Symptoms : உங்கள் உடலுக்கு எப்போது கழிவு நீக்கம் தேவை? அதற்கான அறிகுறிகள் இவைதான்!
Detox Symptoms : உங்கள் உடலுக்கு எப்போது கழிவு நீக்கம் தேவை? அதற்கான அறிகுறிகள் இவைதான்!

உங்கள் உடலுக்கு கழிவுநீக்கம் தேவை என்பதை உங்கள் உடல் உங்களுக்கு எப்படி சொல்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு தொடர்ந்து வாசியுங்கள்.

வயிறு உப்புசம்

தொடர்ந்து உங்கள் வயிறு உப்பியிருந்தால், அது உங்கள் உடலில் பிரச்னை உள்ளது என்பதை காட்டுவதாகும். இதற்கு அர்த்தம் உங்கள் வயிறு நீங்கள் உட்கொள்ளும் உணவுகளை செரிமானம் செய்வதில் பிரச்னைகள் உள்ளது என்பதை உங்களிடம் கூறுகிறது என்று பொருள். 

வயிறு உப்புசம் ஏற்படுவது உங்கள் குடலில் போதிய அளவு பாக்டீரியாக்கள் இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. இதனால் உங்கள் குடல் செரிமான பிரச்னையில் சிக்கிக்கொண்டு, வயிறில் அசவுகர்யங்களை ஏற்படுத்தும்.

சோர்வு

உங்கள் உடல் தொடர் சோர்வை உணர்கிறதா? நல்ல உறக்கத்திற்குப் பின்னரும் சோர்வாகவே உணர்கிறீர்கள் என்றால், உங்கள் உடலில் அதிகப்படியான நச்சுக்கள் தங்கியுள்ளது என்று பொருள். 

எனவே, உங்களுக்கு கழிவுநீக்கம் தேவை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் உடலில் ஆற்றல் குறைவது மற்றும் சோர்வு ஆகியவை சூழல் பாதிப்புகளாலும் ஏற்படும். எனவே பாதுகாப்பாக இருங்கள்.

மலச்சிக்கல்

குடல் இயக்கத்தின் அளவு குறைந்தாலும் அல்லது மலம் கழிப்பதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டாலும், இவையும், உங்கள் உடலுக்கு கழிவுநீக்கம் தேவை என்பதை சுட்டிக்காட்டுவதாகும்.

உங்கள் உடலின் கழிவுகள் மற்றும் நச்சுக்கள் உங்கள் குடலில் தேங்கி, உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும் மற்றும் உங்களுக்கு மலச்சிக்கலையும் உண்டாகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எரிச்சல் மனப்பான்மை

உங்களுக்கு எரிச்சல் ஏற்பட்டாலோ அல்லது உங்கள் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டாலே எந்த காரணமும் இன்றி உங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டாலோ உங்கள் உடலில் அதிகளவில் கழிவுகள் தங்கியுள்ளது என்று பொருள். 

இதை உளவியல் ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. உங்கள் உடலில் கழிவு தங்குவதற்கும், உங்கள் மனநிலை பாதிப்புக்கும் தொடர்பு உள்ளது என்பதை அவை சுட்டிக்காட்டுகின்றன.

மூளையில் இறுக்கம்

உங்களால் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியவில்லையா? அல்லது உங்களின் மனநிலையில் மாற்றம் உள்ளது. இதுவும் உங்கள் உடல் உங்களுக்கு உடலில் கழிவு சேர்ந்துள்ளது. அதை உடனடியாக நீக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியாக உள்ளது. 

அமெரிக்க பொது சுகாதார ஆராய்ச்சி பத்திரிக்கையில் வெளியான தகவலில், சுற்றுச்சூழல் நச்சுக்களும் உங்கள் மூளையை பாதித்து, ஆறிவாற்றல் மற்றும் நினைவாற்றல் இழப்பை ஏற்படுத்தலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. இதனாலும் உங்கள் மூளையில் பாதிப்புக்கள் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

உங்கள் நாக்கு

உங்களின் நாக்கை நன்றாக உற்றுநோக்குங்கள். அது வெள்ளையாக உள்ளதா அல்லது மஞ்சளாக உள்ளதா என்று பாருங்கள். இதுவும் உங்கள் உடலில் நச்சுக்கள் சேர்ந்துள்ளது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். 

வாயில் ஏதேனும் படிவுகள் தென்பாட்டால் அது உங்கள் உடலின் செரிமான மண்டலம் மிகவும் மோசமாக உள்ளது என்பதை காட்டுவதாக உள்ளது. எனவே அதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

பொலிவற்ற சருமம்

உங்கள் சருமத்தின் பொலிவு குறைந்தாலோ அல்லது வறண்டு காணப்பட்டாலோ உங்கள் உடலில் அதிகப்படியான அழுக்கு சேர்ந்துள்ளது என்று பொருள். 

எனவே உடனடியாக கழிவுநீக்கம் தேவை. உடலில் உள்ள கழிவுகள், சருமத்தின் வறட்சிக்கும், பொலிவின்மைக்கும், நிறம் இழப்புக்கும் காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே உங்கள் சருமத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

சர்க்கரை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம்

உங்களுக்கு அதிகளவில் சர்க்கரை சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டாலும், உங்கள் உடலில் அதிகளவில் நச்சுக்கள் படிந்துள்ளது. என்று பொருள். சுற்றுச்சூழல் நச்சுக்கள் உங்களின் பசியை பாதிக்கும், மேலும் அவை நீங்கள் சர்க்கரை சாப்பிடுவதை அதிகரிக்கும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.