Detox Drink : உங்கள் ரத்த நாளங்களையும், கல்லீரலையும் ஒரே நேரத்தில் சுத்தம் செய்ய வேண்டுமா? இது மட்டும் போதும்!-detox drink want to cleanse your blood vessels and liver at the same time this alone is enough - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Detox Drink : உங்கள் ரத்த நாளங்களையும், கல்லீரலையும் ஒரே நேரத்தில் சுத்தம் செய்ய வேண்டுமா? இது மட்டும் போதும்!

Detox Drink : உங்கள் ரத்த நாளங்களையும், கல்லீரலையும் ஒரே நேரத்தில் சுத்தம் செய்ய வேண்டுமா? இது மட்டும் போதும்!

Priyadarshini R HT Tamil
Aug 07, 2024 03:47 PM IST

Detox Drink : உங்கள் ரத்த நாளங்களையும், கல்லீரலையும் ஒரே நேரத்தில் சுத்தம் செய்ய வேண்டுமா? அதற்கு இந்த ஒரு பானம் மட்டும் உங்களுக்கு உதவும்.

Detox Drink : உங்கள் ரத்த நாளங்களையும், கல்லீரலையும் ஒரே நேரத்தில் சுத்தம் செய்ய வேண்டுமா? இது மட்டும் போதும்!
Detox Drink : உங்கள் ரத்த நாளங்களையும், கல்லீரலையும் ஒரே நேரத்தில் சுத்தம் செய்ய வேண்டுமா? இது மட்டும் போதும்!

நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

கல்லீரல்

நமது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று கல்லீரல். இது உடலுக்கு கிடைக்கும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவை பராமரித்து, ரத்தம் உறைதலை முறைப்படுத்தி, உடலுக்கு தேவையான பல்வேறு முக்கிய பணிகளை செய்கிறது. இது உடலின் வலது புறத்தில் வயிற்றுப்பகுதியில் உள்ளது.

நமது உடலில் கல்லீரல் 500க்கும் மேற்பட்ட வேலைகளை செய்கிறது. ரத்த ஓட்டத்தில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. ரத்தச்சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

அல்பியூமின் என்ற புரதம், அருகில் உள்ள செல்களுக்கு, ரத்தத்தில் உள்ள திரவங்கள் கசிந்துவிடாமல் காக்க உதவுகிறது.

செரிமானத்துக்கு உதவக்கூடிய திரவம்தான் பித்தம், இதை சுரக்க வைப்பது கல்லீரல்தான். சிறு குடலில் உள்ள கொழுப்பை உறிஞ்சவும் உதவுகிறது.

வயிறு மற்றும் குடலில் இருந்து வெளியேறும் ரத்தம், கல்லீரல் வழியாக செல்கிறது. நச்சுக்களையும் மற்ற நச்சுப்பொருட்களையும் வெளியேற்றுகிறது.

நமது உடலில் உள்ள அமினோ அமிலங்களைப் பொறுத்துதான் புரத உற்பத்தி உள்ளது. அமினோ அமிலங்கள் அளவை ரத்தத்தில் ஆரோக்கியமான அளவு வைத்திருப்பதை கல்லீரல் உறுதிப்படுத்திகிறது.

ரத்த உறைதல் ஏற்படாமல் தடுக்கிறது. தொற்றுகளை தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை நீக்குகிறது. வைட்டமின் மற்றும் மினரல்களை சேமிக்கிறது. வைட்டமின் ஏ, டி, இ, கே, பி12, இரும்பு மற்றும் காப்பர் சத்துக்களை போதிய அளவு சேமித்து வைக்கிறது.

ரத்தத்தில் உள்ள அதிகளவு குளுக்கோஸை நீக்குகிறது. அதை க்ளைகோஜென்களாக மாற்றுகிறது. தேவைப்படும்போது அது க்ளைகோஜென்களை குளுக்கோஸாக மாற்றும்.

இந்த கல்லீரலை சுத்தம் செய்யும் ஒரு பானம் குறித்து நாம் இன்று தெரிந்துகாள்ளலாம்.

தேவையான பொருட்கள்

தர்ப்பூசணி – 2 கப் (தோல் மற்றும் விதைகளை நீக்கி சுத்தம் செய்தது)

இது இயற்கை எலக்ட்ரோலைட் கொண்டது. உங்கள் உடலுக்கு தேவையான தண்ணீர் சத்தை வழங்குகிறது. உடலில் நரம்பு மற்றும் தசைகளை வலுப்படுத்துகிறது. கல்லீரல், புரதத்ததை செரிக்க வைத்ததால் உருவான கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. சிறுநீரகம், அதிகமாக உள்ள தண்ணீரை வெளியேற்ற உதவுகிறது. பொட்டாசியச் சத்துக்கள் நிறைந்தது.

ஆப்பிள் – 1 (தோலை சீவி நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்)

எலுமிச்சை – 1 (பிழிந்து வைத்துக்கொள்ளவேண்டும்)

தேன் – 1 ஸ்பூன்

செய்முறை

சுத்தம் செய்த தர்ப்பூசணி, ஆப்பிள், எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் தேன் அனைத்தையும் ஒன்றாக ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அடித்துக்கொள்ளவேண்டும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால், அது உங்கள் கல்லீரல் மற்றும் ரத்த நாளங்களில் உள்ள அழுக்குகளை ஒரே நேரத்தில் சுத்தம் செய்து வெளியே தள்ளுகிறது. இதை வாரத்தில் 3 நாட்கள் பருகி வந்தால் உங்கள் உடலில் கழிவுகள் தேங்குவது குறையும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.